முருங்கைக்கீரை.. பார்வை கோளாறை அடியோடு விரட்டியடிக்கும் முருங்கையிலை.. ஆச்சரியம் தரும் முருங்கை கீரை
சென்னை: கண்களின் ஆரோக்கியத்துக்கும், நாம் உண்ணும் உணவுக்கும் நேரடி தொடர்பு உள்ளது. அந்தவகையில், கண்ணுக்கு ஊட்டச்சத்து தரும் அற்புத கீரையான, முருங்கையை பார்ப்போம்.
சிலருக்கு கண்களில் நீர் வழிந்து கொண்டேயிருக்கும்.. இப்படி நீர் வழிந்தால், கைகளை வைத்து கசக்கி விட கூடாது. ஆனால், இப்படி கண்ணீர் வடிய சில காரணங்கள் உள்ளன,
கண்ணில் நீர்: குறிப்பாக, டிவி அதிகம் பார்த்தாலோ, அதிக வேலைப்பளு, தொடர் நெருக்கடி போன்றவற்றினால் கண்ணிலிருந்து நீர் வடியலாம்... அதேபோல, கண்ணீர்ச் சுரப்பிகளில் நிறைய கண்ணீர் சுரக்கலாம்..

Nasolacrimal duct என்று சொல்லப்படும் நுண்ணிய குழாயில் அடைப்பு ஏற்படும்போதும் கண்ணில் நீர் வழியலாம். அல்லது நரம்புத் தளர்ச்சி ஏற்படும்போது கண்ணைச் சரியாக மூட முடியாதவர்களுக்கும் கண்ணில் நீர் வடியலாம். அல்லது பயம் காரணமாகவும் சிலருக்கு கண்ணில் நீர் வரலாம். மருந்துகளை எடுத்து கொண்டாலோ, ஒவ்வாமை, கண் தொற்று பாதிப்பு இப்படி பல பாதிப்புகள் காரணமாக கண்ணில் நீர் வடியலாம்.
மருந்துகள்: கண்ணில் நீர்வடிய துவங்கும் ஆரம்ப நிலையில் இவைகளை வீட்டிலேயே நாம் செய்து கொள்ளலாம். ஆனால், நீர் அதிகமாக வடிந்தாலோ அல்லது கண்ணில் சிறு பிரச்சனை என்றாலும், உடனடியாக டாக்டரை சந்தித்தே ஆக வேண்டும். நாமாகவே மெடிக்கல் ஷாப்புகளில் மருந்துகளை வாங்கி கண்ணில் போடக்கூடாது.
இதற்கெல்லாம் அடிப்படையாக இருப்பது முருங்கைக்கீரைதான். காரணம், முருங்கைக்கீரை நம் கண்களுக்கு மிகவும் நல்லது. ஏனென்றால் கேரட்டில் இருப்பதைவிட 4 மடங்கு அதிகமாக வைட்டமின் A இந்த முருங்கைக்கீரையில் உள்ளது.
மருதாணி: மருதாணி இலைகளை விழுதுபோல அரைத்து கண்களின்மீது கட்டி வந்தால் கண்ணில் நீர் வடிதல் குணமாகும். அதுபோலவே, முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண் எரிச்சல் தணியும்.
முருங்கைக்கீரை வெறுமனே வாணலில் லேசாக வதக்கி கண்களின்மீது கட்டி வந்தாலும், கண் தொடர்பான கோளாறுகள் நீங்கும்... அதேபோல, மாலைக் கண் பிரச்சனையை தீர்க்கவும் இந்த முருங்கையே உதவுகிறது.. முருங்கை கீரையை வதக்கியோ, கூட்டு கீரையாக கடைந்தோ சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் முக்கியமாக மாலைக் கண் நோய் வராமல் தடுக்கலாம்.
பார்வை தெளிவு: கண் பார்வை தெளிவு பெறுவதற்கும் இந்த கீரையை கடைந்து சாப்பிட்டு வரலாம், கண்நோய் உள்ளவர்கள் இந்த கீரையை சிறிது சுத்தமான கைகளில் கசக்கி இரண்டு சொட்டு கண்களில் விட்டால் கண் நோய் தீர்ந்துவிடும்.
கம்ப்யூட்டரில் எந்நேரமும் வேலை பார்ப்பவர்கள் இந்த முருங்கை பூவை அடிக்கடி சமையலில் சேர்த்து கொள்ள வேண்டும். முருங்கைப்பூவை நன்றாக சுத்தம் செய்து, தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.. பிறகு, இதிலேயே சிறிது கற்கண்டு சேர்த்தும் கொதிக்க வைக்க வேண்டும். அல்லது பால் சேர்த்தும் கொதிக்க வைத்து குடிக்கலாம். இதனால், கண்களில் உள்ள வறட்சி நீங்குவதுடன், குளிர்ச்சியும் கிடைக்கிறது. இதனால் கண் பார்வை நரம்புகள் வலுப்பெறும்












Click it and Unblock the Notifications