பாகற்காய் இலைகள்.. ஜஸ்ட் நாலே நாலு போதும்.. கண்களின் பாதுகாவலன்.. அற்புதம் காட்டும் பாகல் இலை ஜூஸ்
சென்னை: சிலசமயம் காய்கறிகளைவிட, அவைகளின் இலைகளில் கூடுதல் சத்துக்கள் நிறைந்துள்ளன.. அப்படிப்பட்ட ஒன்றுதான் பாகற்காய்.. பாகல் இலைகள் எதற்கெல்லாம் பயன்படுகின்றன தெரியுமா?
பாகற்காயில், பசலைக்கீரையில் இருப்பதைவிட 2 மடங்கு கால்சியம் இருப்பதால், நம்முடைய எலும்பு, பல் வளர்ச்சிக்கு பாகற்காய் பெரிதும் உதவுகிறது.. வாழைப்பழத்தில் உள்ளதைவிட 2 மடங்கு பொட்டாசியம் இருப்பதால், நம்முடைய தசை வலிமை, நரம்பு மண்டலச் செயல்பாடு, இதய நலன் போன்றவற்றுக்கு உதவுகிறது.

நீரிழிவு நோயாளிகள்: அதனால்தான், நீரிழிவு நோயாளிகள் தினமும் பாகற்காய் ஜூஸ் குடித்தால், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படும் என்கிறார்கள். ஆனால் பாகற்காய் ஜூஸ் குடித்தால் கல்லீரலை பாதிக்கலாம்.. அல்லது மாத்திரைகளுடன் சேர்த்து பாகற்காயை சாப்பிடும்போது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு பாதிக்கப்பட்டு, சர்க்கரையின் அளவு மிகவும் குறையவும் வாய்ப்புள்ளது..
அதேபோல, கர்ப்பிணி பெண்களும் பாலூட்டும் தாய்மார்களும் இதை சாப்பிடுவதை தவிர்க்கலாம். அதுவும் இல்லாமல், இந்த கசப்பு சுவை தோலில் சுருக்கங்களை ஏற்படுத்திவிடும். அதிக அளவு பாற்காய் சாப்பிட்டால் கருச்சிதைவுக்கும் வாய்ப்புள்ளது. அதனால், சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணிகள், இளம்தாய்மார்கள், டாக்டரை ஆலோசிக்காமல் பாகற்காயை அதிகம் எடுத்து கொள்ளக்கூடாது.
இலை சாறுகள்: ஆனால், பாகற்காய் இலைகள் அப்படியில்லை.. மருந்தாக பயன்படுகிறது.. மேற்கிந்திய தீவுகளில், இந்த இலையின் சாறுகளிலேயே பெரும்பாலான நோய்களுக்கு தீர்வு காண்கிறார்கள்.. குறிப்பாக, சிறுநீரக கற்கள், விஷஜுரம், குடல்புண், வாயுத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு இந்த இலையை கொண்டே நன்மை பெறுகிறார்கள்.
இதன் இலையை கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் பிரச்சனைக்கும் பயன்படுத்துகிறார்கள். பாகற்காயின் இலை கழுவி சுத்தம் செய்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, அந்த சாறினை மட்டும் குடித்து வந்தால், இரைப்பை மற்றும் கல்லீரல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகிறதாம்.
வறுத்த சீரகம்: இந்த பாகற்காய் இலையில் சாறு எடுத்து, அதனுடன் வறுத்து தூளாக்கிய சீரகத்தையும் கலந்து தினமும் 2 வேளை சாப்பிட்டுவந்தால், விஷஜூரம்கூட பறந்துவிடுமாம். இந்த சாறில் சிறிது நல்லெண்ணெயை கலந்து சாப்பிட்டால், காலரா நோயோ தெறித்து ஓடிவிடுமாம்.
அதேபோல, பாகற்காய் இலைகளை, நான்கு மிளகு சேர்த்து அரைத்து, கண்களை சுற்றி பற்று போட்டுவந்தால், மாலைக்கண் நோயிலிருந்து தீர்வு கிடைக்குமாம். சருமத்தில் புண்கள், கட்டிகள், இருந்தால், வைட்டமின் சி, ஆன்டிபயாடிக் நிறைந்த பாகற்காய் இலையின் சாறு அரைத்து தடவி வரலாம்.. அல்லது இந்த சாற்றில் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தாலும், சரும வியாதிகள் தீரும்.
விஷ ஜூரம்: ஆரம்ப கட்ட, ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள், இந்த இலையை கொதிக்க வைத்து சாறு சாப்பிடலாம். ஆனால், மருந்து எதுவும் எடுக்காமல் இருந்தால் மட்டுமே, இந்த சாறு அருந்தவேண்டுமாம்.
பாகற்காய் இலையை கொதிக்க வைத்து, அதிலேயே சூப் தயாரித்து சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுகள் வெளியேறிவிடும்.. இதனால், ரத்தம் சுத்தமாகுவதுடன், குடல் பகுதியும் சுத்தமாகும். மலச்சிக்கல் உள்ளவர்கள் அல்லது வயிற்றில் கிருமி உள்ளவர்கள், பாகற்காய் இலை சாறு எடுத்து வெறும் வயிற்றில் ஒரு கரண்டி குடித்து வந்தால் கிருமிகள் அழியும்.
சரும அலர்ஜிகள்: வெறுமனே பாகல் இலையை அரைத்து வேப்பிலை போல, உடம்பில் பூசி வந்தாலே சரும அலர்ஜிகள் நீங்கும்.. தீப்புண், சுடுநீர் பட்ட காயங்கள் போன்றவை மறைய வேண்டுமானால், பாகல் இலையின் சாறு எடுத்து, அதனுடன் சிறிது நாட்டுச்சர்க்கரையும் சேர்த்து, தீப்புண்கள் அல்லது காயங்கள் மீது தடவிவந்தால் காயங்கள் ஆறும்.. அல்லது பாகற்காய் இலைகளை தண்டுடன் எடுத்து உலர வைத்து பொடியாக்கி, அவற்றை காயங்கள், புண்கள் மீது தூவினால் விரைவில் ஆறும்.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications