வெற்றிலை வெற்றி.. வெற்றியிலையுடன் இதை மட்டும் சேர்த்து சாப்பிடுங்க.. இதய நோயும் ஓடிடும்.. சூப்பர்ல

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரோஜா குல்கந்து என்பது என்ன? அதன் பலன்கள் என்னென்ன? இதனை நாமே வீட்டில் தயாரிக்க முடியுமா?

இந்த ரோஜா குல்கந்த் வீட்டிலேயே நாம் செய்யலாம்.. ரோஜா பூக்களின் இதழ்களை நன்றாக அலசி எடுத்து கொள்ள வேண்டும். அதிலிருந்து நீர் வற்றியதும், கற்கண்டை சேர்த்து நன்றாக விழுதாக அரைக்க வேண்டும். இதிலேயே வெள்ளரிவிதை, கசகசாவையும் சேர்த்து நசுக்கி, ஒரு பாட்டிலில் இதை வைத்து கொள்ள வேண்டும்.

Do you know Amazing Health Benefits of Eating Rose Gulkand and Can we take Gulkand with Betel Leaf

குங்குமப்பூ: இப்போது, தேன், குங்குமப்பூ, இடித்த விழுது, குங்குமப்பூ என ஒவ்வொன்றாக சேர்த்து கலந்து, வெயிலில் வைத்து 5 நாட்களுக்கு காய வைத்து எடுத்தால் ரோஜா குல்கந்து ரெடி.

இதையே வேறு மாதிரியாகவும் செய்யலாம்.. ஒரு மிக்ஸியில் சர்க்கரை, ரோஜா இதழ்களை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கண்ணாடி ஜாரில் போட்டு கொள்ளலாம்.. இதில் வெள்ளரி விதை சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். பிறகு தேன் ஊற்றி கலந்து 2 நாட்களுக்கு மூடி போட்டு அப்படியே வைத்துவிட வேண்டும். இப்போது ரோஜா குல்கந்து ரெடி.

மருந்து கடைகள்: இன்னும் பல வகைகளில் இந்த ரோஜா குல்கந்து செய்வார்கள்.. அல்லது நாட்டு மருந்து கடைகள், காதிகிராஃப்ட் கடைகளிலும் கிடைக்கும். இந்த குல்கந்துவை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஒரு ஸ்பூன் குல்கந்துவை, தண்ணீரில் கலந்து குடித்து, இதிலிருக்கும் ரோஜா இதழ்களையும் மென்று சாப்பிடலாம்... அல்லது குளிர்ந்த பாலில், ஒரு ஸ்பூன் குல்கந்துவை கலந்து குடிக்கலாம். அல்லது வெற்றிலையில் வைத்து மடித்து சாப்பிடலாம்.

இந்த குல்கந்து பலன்கள் அபாரமானவை.. ஆயுர்வேதத்தில் மிகச்சிறந்த டானிக் இந்த குல்கந்து.. இதில் பிரதானமாக நிறைந்திருப்பது கால்சியம் சத்துக்கள்தான்.. மிகவும் குளிர்ச்சி தரக்கூடியது.. பெரும்பாலும் கோடை காலத்தில் பயன்படுத்துவார்கள்.. ஆனாலும், அனைத்து காலங்களிலும் நமக்கு பயன்படக்கூடியதுதான் இந்த டானிக்.

மன அழுத்தம்: காரணம், அஜீரணத்தை போக்குவதுடன், இரைப்பை அழற்சி, தோல் பராமரிப்பு, அல்சர், மன அழுத்தம் இப்படி பல்வேறு பிரச்சனைகளுக்கு மருந்தாகிறது இந்த குல்கந்து.. குளிர்ச்சி நிறைந்த இந்த குல்கத்து, வயிற்றுப்புண், குடல் புண்கள் உட்பட கடுமையான பல புண்களையும் ஆற்றும் தன்மை கொண்டது.. அதாவது வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாகி மூக்கிலிருந்து ரத்தம் வடிதல் உட்பட சூடு சம்பந்தப்பட்ட நோய்களை சரி செய்யக்கூடியது. அதுமட்டுமல்லாமல், ஆற்றக்கூடியது.

ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அருமருந்து இந்த ரோஜா குல்கந்து.. இதனால், இதயம் சம்பந்தமான பாதிப்புகளும் அண்டாமல் இருக்கும்.. கர்ப்பிணி பெண்களுக்கு மலச்சிக்கல் பெருந்தொந்தரவாக இருக்கும்.. அதுபோன்ற நேரங்களில் ரோஜா குல்கந்து கை கொடுக்கும்..

மாதவிடாய்: மாதவிடாய் காலத்திலும், ரத்த போக்கு, வயிறு வலி அதிகமாக இருந்தால், இந்த குல்கந்து சாப்பிடலாம்.. முக்கியமாக கர்ப்பப்பை கட்டிகளான PCOD பிரச்சனைக்கு, நல்மருந்து இந்த குல்கந்து. ரத்தசோகை இருந்தால், இந்த ரோஜா குல்கந்து கைகொடுக்கும்.. அத்துடன் ரத்தத்தையும் சுத்திகரிப்பு செய்யும். உடலின் பித்த அளவை சீராக்குகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கும். அதிக அமில சுரப்பை குறைக்கும்.

ஆண்மை குறைபாட்டை சரிசெய்வதில் வெற்றிலைக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.. அதுபோலவே, இந்த குல்கந்துவுக்கும் நிறைய பங்கிருக்கிறது.. இரண்டுமே மலட்டுத்தன்மையை நீக்கக்கூடியவை. எனவே வெற்றிலையில் இந்த குல்கந்துவை வைத்து சாப்பிடுவார்கள்.

வெற்றிலை: அதுமட்டுமல்ல, நம்முடைய உடல் வாதம், பித்தம், கபம் இந்த மூன்றுமே சமநிலையில் பராமரிக்கப்படவேண்டும். அதற்காகத்தான் வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு நம் முன்னோர்கள் பயன்படுத்தினார்கள்.. குல்கந்துவிலும் இந்த பண்புகள் உள்ளன.

குல்கந்துவில் கால்சியம் சத்து உள்ளது போல, வெற்றிலையிலும் கால்சியம் சத்துக்கள் நிறைந்தள்ளன.. வெற்றிலையும் செரிமானத்தை சீராக்குகிறது.. குல்கந்துவும் செரிமான பிரச்னைகள், அஜீரண கோளாறுகளை தீர்க்கிறது. அதனால்தான் வெற்றிலையுடன் குல்கந்தையும் சேர்த்து சாப்பிடும்போது கூடுதல் பலன் கிடைக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+