செவ்வாழையின் செம்மை.. தினம் 1 பழம் தரும் ஆச்சரியம்.. செவ்வாழைப்பழத்தின் பீட்டா கரோட்டீன் அதிசயம்
சென்னை: வாழைப்பழங்களிலேயே மிகவும் சத்து நிறைந்த பழமாக செவ்வாழையை சொல்வது ஏன் தெரியுமா? நீரிழிவு நோயாளிகள் செவ்வாழையை சாப்பிடலாமா? இதிலுள்ள பீட்ரோ கரோட்டின் நமக்கு கொடுக்கும் நன்மை என்ன? இதன் பலன்கள் என்னென்ன?
வைட்டமின் C, இரும்பு சத்து, நார்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் சத்துக்கள் நிறைந்திருக்கும் செவ்வாழை, உடல் உறுப்புகள் நுரையீரல், கல்லீரல், குடல், இதயம் போன்ற பிரதான உடலுறுப்புகளின் செயல்பாட்டிற்கு பேருதவி புரியக்கூடியது இந்த செவ்வாழைகள்தான்.

செவ்வாழை: இரத்த அழுத்த பாதிப்பை சீராக்கி இதய நோய்களை தடுத்து நிறுத்தி செவ்வாழை உதவுகிறது. அதேபோல, குடலில் நல்ல பாக்டீரியாவின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகப்படுத்தும் தன்மை இந்த செவ்வாழைக்கு உண்டு. அதனால்தான, மலச்சிக்கலை தீர்த்து, குடல் ஆரோக்கியத்தை காக்கிறது. இந்த வாழையில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாகுவதை தடுக்க உதவுகிறது. ஏற்கனவே சிறுநீரகத்தில் கற்களால் அவதிப்படுபவர்களும் செவ்வாழையை வாரம் 2 முறை சாப்பிடலாம்.
அதேபோல, தினமும் 100 கிராம் செவ்வாழையை சாப்பிட்டு வருபவர்களுக்கு கண் சம்பந்தப்பட்ட கோளாறுகள் வருவதில்லை. காரணம், இந்த பழத்திலுள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்ககூடியதாக உள்ளது. பார்வையும் கூர்மைபெறும்.. இரவு தூங்குவதற்கு முன்பு 40 நாட்கள் செவ்வாழை சாப்பிடும்போது மாலைக்கண் நோய் அண்டாது.
தோல் பராமரிப்பு: கிருமிகளை அழிக்கக்கூடிய தன்மை செவ்வாழைக்கு உண்டு என்பதால் தோல் பராமரிப்புக்கு செவ்வாழை உதவுகிறது.. இதனால், சொறி, சிரங்கு, பிரச்சனைகளும் தீர்கிறது.. உடலிலுள்ள தொற்று நோய் பாதிப்புகளும் தீர்கிறது.. தீருமாம்.. ஒருநாளைக்கு 2 செவ்வாழைப்பழத்தை 48 நாட்கள் சாப்பிடும்போது, ஆண்மைக்கோளாறுகள் நீங்குகிறது.
பற்கள், எலும்புகள் பலம் பெற வேண்டுமானால், செவ்வாழையிலுள்ள கால்சியம் சத்துக்களே போதுமானதாகும். பல்வலி, பல் அசைவு போன்ற உபாதைகளையும் இந்த பழம் தீர்க்கிறது. 21 நாட்கள் செவ்வாழை சாப்பிடும்போது, வாய் சுகாதாரம் பேணப்படும்.
பீட்டா கரோட்டின்: அதேசமயம் செவ்வாழைக்கு வேறு சில ஸ்பெஷாலிட்டிகளும் உண்டு.. அதுதான் அதிலுள்ள பீட்டா கரோட்டீன்.. இந்த வாழையில் பீட்டா கரோட்டீள், தமனிகள் தடிமனாவதை தடுக்கக்கூடியது.. புற்றுநோயின் தாக்குதல்களில் இருந்தும் பாதுகாப்பளிக்கும். அந்த அளவுக்கு பீட்டா கரோட்டீன் நம்முடைய உடலுக்கு இன்றியமையாதது. இது நம்முடைய உடலுக்குள் செல்லும்போது, வைட்டமின் A வாக மாற்றப்பட்டு, கண்களின் ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும், சருமத்தின் ஆரோக்கியத்தையும் உயர்த்துகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கும் இந்த செவ்வாழை மிகவும் நல்லது என்கிறார்கள். ஏனென்றால் இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் சர்க்கரையை கட்டுக்குள் வைப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. எனவே, பயமின்றி மருத்துவரின் ஆலோசனையின்படி அளவாக சாப்பிடலாம்..
ரத்த அணுக்கள்: இந்த பழத்திலிருக்கும் வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் ரத்த அணுக்களின் அளவை சீராக பராமரிக்கும். செவ்வாழையில், மற்ற வாழைப்பழங்களை விட, கலோரிகள் மிகவும் குறைவு என்பதால், உடல் எடையை குறைக்க நினைப்போர், தினமும் காலையில் ஒரு செவ்வாழையை எடுத்துக் கொள்ளலாம். சோம்பலை போக்கக்கூடிய பழமாக இந்த செவ்வாழை விளங்குகிறது.
உடலுக்கு தேவைப்படும் சத்துக்களின் அளவு அத்தனையும் செவ்வாழைப்பழத்தில் சரிவிகிதத்தில் உள்ளதால், இதை சாப்பிட்டவுடன் தேவையான ஆற்றலை உடனடியாக பெற முடிகிறது.. நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் செவ்வாழையை எடுத்துக் கொண்டால் நல்ல மாற்றம் கண்கூடாக தெரியும்.
இது அனைத்தையும் விட முக்கியமாக, வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த, செவ்வாழைப்பழம் உடலில் ஹீமோகுளோபின் மற்றும் இரும்புச்சத்தின் அளவை அதிகரிக்க உதவுகிறது. மேலும், வைட்டமின் B6 உள்ளடக்கம் புரதச் சிதைவு மற்றும் ரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது. செவ்வாழைப்பழத்தை உணவில் சேர்த்துக்கொள்வது ரத்த சோகை பிரச்னையை தீர்க்கவும் ஆற்றலை அதிகரிக்கவும் உதவுவதாக ஆய்வுகளும் நிரூபிக்கின்றன.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications