கலக்குது கறிவேப்பிலை ஆச்சரியம்.. முளைக்கீரையுடன் கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க கூடாத கீரை இதுதான்.. செம
சென்னை: கீரைகள் அனைத்துமே நன்மை தரக்கூடியவை என்றாலும், கர்ப்பிணிகள் கீரைகள் சாப்பிடலாமா? என்ன வகையான கீரைகளை சாப்பிட வேண்டும் தெரியுமா?
பப்பாளி, அன்னாசி பழங்களை கர்ப்பிணிகள் சாப்பிட்டால் கர்ப்பம் கலைந்துவிடும் என்கிற தவறான நம்பிக்கை உள்ளது.. இந்த பழங்களால் உடல் சூடு அதிகரிக்குமே தவிர, கர்ப்பம் கலையும் என்பதற்கான எந்தவிதமான அறிவியல் ஆதாரங்களும் இல்லையாம்.. எனவே, அளவாக பப்பாளி, அன்னாசிப் பழங்களை மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் சாப்பிடலாம்.

பொதுவாகவே கர்ப்பகாலத்தில் மலச்சிக்கல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று.. இதுபோன்ற நேரங்களில் கோதுமை மைதாவில் செய்யப்பட்ட உணவுகளை தவிர்த்துவிட்டு, நார்ச்சத்து மிகுந்த முருங்கைக்கீரை, முள்ளங்கியை தவறாமல் எடுத்து கொள்ளலாம்.. அதனால்தான், முருங்கைக் கீரையும், பாசிப் பருப்பு கலந்த பொரியலும் பெரும்பாலும் கர்ப்பிணிகளுக்கு தருவார்கள்..
கர்ப்பிணிகள்: அதேபோல, கர்ப்பிணிகள் தினமும் உணவில் கீரையை கட்டாயமாக சேர்த்து கொள்ள வேண்டும்.. காரணம், கீரைகளில் வைட்டமின்கள், தாது உப்புகள், சுண்ணாம்பு சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்றவை நிறைந்திருக்கின்றன..
அந்தவகையில், பொன்னாங்கண்ணி, புள்ளிச்சரை கீரை, மணத்தக்காளி கீரை போன்றவற்றில் இரும்பு சத்துக்கள் உள்னன.. அரைக்கீரை, முருங்கைக்கீரை போன்றவை தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கும். பசலிக்கரை, ரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடியவை.. கொத்தமல்லியும், தூதுவளையும், சுவாசம் மற்றும் சளி பிரச்சனைகளை சரி செய்யவும் உதவக்கூடியவை.
முளைக்கீரை: இதைத்தவிர, பசலிக்கீரை, முளைக்கீரை போன்றவை சிறுநீர்பாதை பிரச்சனைகளுக்கு அருமருந்தாகும்.. வல்லாரை கீரை சிறந்த நினைவாற்றலை தரக்கூடியவை.. புதினா கீரைகள், கர்ப்ப நேரத்தில் ஏற்படக்கூடிய மயக்கத்தையும் தடுத்து நிறுத்தக்கூடியவை. அந்தவகையில், எந்த கீரைகளையுமே தவிர்க்கக்கூடாது.
இதில், முக்கியமானது கறிவேப்பிலை.. இருதய நோய் உள்ளவர்கள்கூட, இந்த கறிவேப்பிலையை அதிகமாக உணவில் பயன்படுத்த வேண்டும் என்று டாக்டர்களே சொல்கிறார்கள்..
கறிவேப்பிலை: இந்த கறிவேப்பிலை இலையை, நிழலில் உலரவைத்து, அரைத்து பொடியாக்கி, அதனுடன், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து எடுத்து கொள்ளவேண்டும்.. தினமும், சாப்பாட்டில் இந்த பொடியை நல்லெண்ணையுடன் கலந்து ஒருவேளையாவது பிசைந்து சாப்பிட்டால், அவ்வளவும் பலன்தரும். கர்ப்பிணிகளுக்கு கறிவேப்பிலை போல சிறந்த நன்மை வேறு இல்லை..
கர்ப்ப காலத்தின் முதல் 3 மாதங்களில், வாந்தி வரும்.. பசியின்மை, தலைசுற்றல் இருக்கும்.. செரிமான தொந்தரவும் நிறைய வரும்.. அப்போது, கறிவேப்பிலை பொடியை சாதத்தில் கலந்து சாப்பிட்டால், கர்ப்பிணிகளுக்கு ஆரம்பக்கட்டத்தில் ஏற்படும் தொந்தரவுகள் எல்லாம் காணாமல் போய்விடும். வயிற்றிலுள்ள குழந்தைக்கும் பல நன்மைகளை தரக்கூடியது..
பிரசவம்: பிரசவம் முடிந்த பெண்களுக்கு, அனிமீயா பிரச்சனையும் ஏற்படும் என்பதால், இந்த கறிவேப்பிலையை அடிக்கடி சட்னி செய்து சாப்பிட வேண்டும். வெறும் வயிற்றில் 15 முதல் 20 கறிவேப்பிலை இலையை சாப்பிட்டு வந்தாலே வயிறு சுத்தமாகும்.. அஜீரண கோளாறு நீங்கும்.. தேவையற்ற கொழுப்புகள் கரைந்து ஓடும்.. ரத்தம் விருத்தியாகும்.. ரத்த சிவப்பணுக்களின் அளவும் அதிகரிக்கும்..!!!












Click it and Unblock the Notifications