நுங்கு வாங்கறீங்களா.. "பனை நுங்கு" சாப்பிட்டா இதெல்லாம் நடக்குமா? இவ்ளோ நாள் இதை மிஸ் பண்ணிட்டோமே
சென்னை: நுங்குவின் பொதுவான பயன்பாடுகள் குறித்து பொதுவான பலன்கள் அனைவருக்கும் தெரியும் என்றாலும், பெண்களு
க்கு நுங்கு அருமருந்தாக அமைந்துள்ளது என்கிறார்கள்.. அந்த அளவுக்கு அதில் மருத்துவ பலன்கள் நிறைந்துள்ளதாம்.
வெயில் காலத்தை தவிர, நிறைய பேர் இதைப் பெரிதாக கண்டுகொள்வதில்லை... ஆனால், எந்த காலத்திலும், கட்டாயம் சாப்பிட வேண்டிய பழம்.. எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். காலநேரம் கிடையாது. இதில் உள்ள மருத்துவ நன்மைகளை பாருங்கள்.

எடை குறைப்பு: நுங்கில் வைட்டமின் பி, இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துகள் இருந்தாலும், இந்த பழத்தில் குறைந்த கலோரி மற்றும் அதிக நீர்ச்சத்து இருக்கிறது.. அதனால்தான் நுங்கை சாப்பிட்டவுடன், வயிற்றை நீண்டநேரம் நிரப்புகிறது.. எடை இழப்பு முயற்சியில் இருப்பவர்கள் இதனை அதிகம் சேர்த்து கொள்வதற்கு இதுதான் அடிப்படை காரணம் என்கிறார்கள்..
கெட்ட கொழுப்பு: உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்துவதில் நுங்கு வல்லமை கொண்டது... அதிலும், பனை நுங்கிற்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உண்டு. பனை நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியை தூண்டுவதோடு, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டிற்குமே மருந்தாக பயன்படுகிறது. வயிற்று கோளாறுகளை சரி செய்வதில் நுங்கு நல்ல பலனை தரும். மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு ஆகிய இரண்டு பிரச்சனைகளில் சிக்கியவர்கள் நுங்கு தாராளமாக சாப்பிடலாம்.
வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடித்த பிறகு, இரண்டு அல்லது மூன்று நுங்குகளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் காணாமல் போகும்.. அத்துடன் குடல் புண்களும் ஆறிவிடும்.. அனீமியா பிரச்சனை உள்ளவர்கள், இந்த நுங்கை சாப்பிட்டு வந்தால், ரத்த சோகை தீரும்..
கர்ப்பிணிகள்: கர்ப்பிணிகள் நுங்கை சாப்பிடும்போது, அவர்களுடைய செரிமானம் துரிதமாகும். அசிடிட்டி பிரச்சனையும் தீரும்.
கல்லீரல் பிரச்னை, அஜீரணக் கோளாறு ஆகிய பிரச்னைகளுக்கு நுங்கு நல்லது. சுக்கு, மிளகு, கருப்பட்டி சேர்த்து, குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால், தாய்ப் பால் நன்கு சுரக்கும். குழந்தைக்கும் நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும். வெள்ளைப்படுதல் பிரச்சனையை இந்த நுங்கு சரி செய்கிறது.
நுங்கில் "அந்த்யூசைன்" என்னும் ரசாயனம் இருப்பதால், பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுத்து நிறுத்துகிறது.. குறிப்பாக, மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க உதவும் ஆன் தோசயனின் என்னும் வேதிப்பொருள் நுங்கில் இருக்கிறதாம்.. இந்த ஆன் தோசயனின் என்ற வேதிபொருளானது புற்றுநோய் செல்கள் மற்றும் அது உருவாக்கும் கட்டிகளின் வளர்ச்சியை தடுக்க உதவுவதாகவும், அதனால், பெண்கள் அதிக அளவு நுங்கு சாப்பிட்டால் போதிய பலனை அடைய முடியும் என்கிறார்கள்.
அம்மை நோய்களை தடுப்பதில் நுங்கு சிறப்பாக செயல்படுகிறது.. வெயிலினால் உண்டாகும், வேர்க்குரு, கொப்புளங்கள், தோல் நோய்களை இந்த நுங்கு சரி செய்கிறது.. ஆனால், பெரியோர்கள், இளம் நுங்கினை மேல்தோல் நீக்காமல் சாப்பிடுவது மிகவும் நல்லது என்கிறார்கள்.. நுங்கின் நீரை தடவினாலே வேர்க்குரு மறையும்.
இளநீர்: இந்த நுங்கை இளநீரில் ஊற வைத்து சாப்பிட்டால் அபார ருசியும், குளிர்ச்சியும் கிடைக்கும். அதேபோல நுங்கை அரைத்து, தேங்காய்ப் பால் சேர்த்துக் குடித்தால், அல்சர், வயிற்றுப்புண் பிரச்சனை தீரும். உடற்பயிற்சி செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட அனைவருக்குமே தேவையான அத்தியாவசியமான சத்துக்கள் இந்த நுங்கில் உள்ளது.
நுங்குவில் உள்ள சாறை மட்டும் எடுத்து, அதை மெல்லிய பருத்தி துணியை நனைத்து, கண்களில் மேல் பற்றாக வைத்து வந்தால், கண்களில் ஏற்படும் சிவப்பு தன்மை மறையும். கண்களில் ஏற்படும் சோர்வு சரியாகும். எந்நேரமும் கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்களுக்கு இது மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடும்போது, உடலில் ரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும் என்கிறார்கள்.
கர்ப்பிணிகள்: காலை உணவுக்கு பிறகு நுங்கு சாப்பிட வேண்டுமாம்.. நண்பகல் வேளைக்கு பிறகு தவிர்க்க வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள் அதுமட்டுமல்ல, பக்கவிளைவுகளை நுங்கு உண்டு செய்யாது என்றாலும், மிதமான அளவு சாப்பிட்டால் நல்லது... அதேசமயம், டாக்டர்களின் பரிந்துரையுடன் கர்ப்பிணிகள் சாப்பிட்டால் இன்னும் சிறப்பு... ஆரோக்கியத்தை காக்கும் ஐஸ் ஆப்பிள் இந்த நுங்கு..!!!












Click it and Unblock the Notifications