ஓமவள்ளி இலை.. நுரையீரலின் நண்பன் தாளிசபத்திரி.. கபத்தை விரட்டும் காவலன்.. தாளிசபத்திரி இலை ஆச்சரியம்
சென்னை: முன்னோர்கள் தவறாமல் பயன்படுத்தி வந்த மூலிகைகளில் மிக முக்கியமானது தாளிசபத்திரி.. இதன் செயல்பாடுகள், நன்மைகள் என்னென்ன தெரியுமா?
சுவாச கோளாறுகளை விரட்டி, நுரையீரலுக்கு நன்மை தரக்கூடிய எத்தனையோ மூலிகைகள் உள்ளன.. குறிப்பாக, கற்பூரவல்லி எனப்படும் ஓமவள்ளி இலைகளை சொல்லலாம்..

இந்தக்கீரையை "நுரையீரலின் பாதுகாவலன்" என்று சொல்லலாம். சுவாசப்பாதையை சீராக்குவதில் இந்த இலைகளுக்கு பெரும்பங்கு உண்டு.. காரணம், சளி, மூக்கடைப்பு, சைனஸ், தலைவலி, நீர்க்கோவை போன்ற பிரச்சனைகளைக்கு பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது...
நெஞ்சு வலி: ஒரு பாத்திரத்தில், நீரை கொதிக்கவைத்து, இந்த இலைகளுடன் கற்பூரவல்லி இலையையும் சேர்த்து, ஆவி பிடித்தாலே, நெஞ்சு சளி கரைய ஆரம்பித்துவிடும். அல்லது குளிக்கும் வெந்நீரில், வேப்பிலையை போலவே, இந்த இலையையும் சேர்த்து குளித்து வரலாம்.. கடும் தலைவலி இருந்தாலும்கூட, இந்த இலைகளை, எரித்து அதன் புகையை சுவாசித்தாலே, தலைவலியும், தலைபாரமும் சேர்த்து குணமாகும்..
அதேபோல, நொச்சி இலைகளை எடுத்துக் கொண்டால், ஆஸ்துமாவைகூட இந்த இலைகள் விரட்டிவிடும்.. மிளகு, பூண்டு, கிராம்பு இவைகளை, நொச்சி இலைகளுடன் வைத்து மென்று தின்றாலே ஆஸ்துமா குணமாகும்.. இப்படிப்பட்ட மூலிகைகளை போலவே மிக முக்கியமானது தாளிசபத்திரி.. பச்சை கலரில், நீண்டு வளரக்கூடிய மரமாகும்..
சத்துக்கள்: மோனோடெர்பீன்கள், பிளேவனாய்டுகள், பைஃப்ளேவனாய்டு, கிளைகோசைடுகள், பைட்ரோ ஸ்டீரால்கள், அமினோ அமிலங்கள், சபோனின்கள், டானின்கள், ஆல்கலாயிடுகள், ட்ரைடர்பெனாய்டுகள் போன்றவை இதில் ஒளிந்திருக்கும் தன்மைகளாகும்..
குறிப்பாக, இதன் இலைகளில் பேக்லடாக்சால் என்ற வேதிப்பொருள் இருப்பதால்தான் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.. அதாவது, உலகை மிரட்டும் நோயான புற்றுநோயை விரட்டும் மருந்தில், இதை வேதிப்பொருளாக பயன்படுத்துகிறார்களாம்.
இந்த மரத்தின் பட்டை, இலைகளில் நிறைய மருத்துவ பொருட்கள் நிறைந்துள்ளன.. ஆனால், பெரும்பாலும், இந்த இலைகளை, சளி இருமல் பிரச்சனைக்கு பயன்படுத்துவார்களாம்.. நுரையீரலிலுள்ள கபத்தை போக்கக்கூடியது.. இந்த இலையில் கஷாயம் வைத்து குடித்தால், இருமல், இழுப்பு, கபம், ஆஸ்துமா போன்ற தொந்தரவுகள் நீங்கும் என்கிறார்கள்.
சூரணம்: தாளிசபத்திரி இலைகளை காயவைத்து பொடி செய்து, ஆடாதொடை இலையில் சாற்றில் கலந்து குடித்தால், இழுப்பு வலி, ஆஸ்துமா போன்ற நோய்கள் குணமாகும்.. வயிற்றுப்போக்கு, வாந்தி போன்வற்றுக்கு இந்த இலையின் பொடியை மருந்தாக பயன்படுத்தலாம்..

இந்த இலைகளிலிருந்து தயாரித்து, தாளிசாதி வடகம், தாளிசாதி சூரணம் என்றே கடைகளில் விற்கப்படுகிறது.. தாளிசபத்திரி, மிளகு, சுக்கு, அரிசி, திப்பிலி, கற்கண்டு உள்ளிட்ட பொருட்களை சேர்த்து தயாராகும் சூரணம் இதுவாகும்.. கட்டுக்கடங்காத சளி, இருமலுக்கு பயன்படுத்துவார்கள்.. சுரத்தை குறைத்து வைரஸுக்கு எதிராக செயல்படக்கூடியது.. புற்றுக்கட்டிகளைகரைக்கும் தன்மை கொண்டது..
பல்வலி: அதேபோல, சுவாச உறுப்புகள் வலுப்பெறவும் இந்த சூரணத்தை உட்கொள்வார்கள். இந்த பொடியில் பல் தேய்த்து வந்தால், பல்வலியும் சரியாகுமாம். இப்படி எண்ணற்ற நன்மைகளை இந்த மூலிகை தந்தாலும், சித்த மருத்துவர்களின் முறையான வழிகாட்டுதலின்பேரில், மருந்துகளை எடுத்துக் கொள்வதே நல்லது.












Click it and Unblock the Notifications