மஞ்ச மஞ்சளா சளி வருதா.. சமையலில் மஞ்சளை விட்றாதீங்க.. நுரையீரலில் தொற்றினை அறிய இதோ சிம்பிள் டிப்ஸ்
சென்னை: நுரையீரல் தொற்றின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? சாதாரண சளி, நுரையீரலை பாதிக்கும் முன்பே, எளிய வழியில் நிவாரணம் அடைவது எப்படி தெரியுமா?
மனித உடலில் இருக்கும் மிக முக்கியமான உறுப்பு நுரையீரலாகும்.. ஆனால், வைரஸ், பாக்டீரியா தொற்றுக்களாலும், இந்த உறுப்பு பாதிக்கப்பட்டுவிட்டால், மிகப்பெரிய ஆபத்தை சந்திக்க நேர்ந்துவிடும்.
சளி, நிமோனியா, காச நோய், ஆஸ்துமா, புற்று நோய், குறட்டையினால் வரும் மூச்சுத்திணறல், தொழில்சார்ந்த நுரையீரல் தொற்று நோய்கள் போன்றவைகளால்தான், நுரையீரலுக்கு ஆபத்து நேரிடுகிறது. நீரழிவு, இருதயநோய், உடல்பருமன், சிறுநீரக செயல்பாடு குறைதல், கல்லீரல் செயல்பாடு குறைதல் இதெல்லாம் சேர்ந்தும்கூட நுரையீரலுக்கு பாதிப்பை தந்துவிடும்.

தொற்றுகள்: எனினும், மனித உறுப்புகளில் மிகவும் சுலபமாக கிருமி தொற்று ஏற்பட்டு, பாதிப்பை ஏற்படுத்தும் உறுப்பு நுரையீரல்தான்.. காரணம், நாம் சுவாசிக்கும் காற்று முதலில் மூக்கு வழியாக, நுரையீரலுக்கு சென்று, பிறகு, உறுப்புகளுக்கு ரத்தத்தின் மூலம் செல்கிறது.. இப்படி நேரடியாக தொடர்பிருப்பதால்தான், பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் நேரடியாகவே நுரையீரலுக்கு சென்று சுலபமாக, தொற்றை ஏற்படுத்துகின்றன.
காற்றில் கலந்துள்ள தூசி, புகை, ரசாயன பொருட்கள், கொடிய வாயுக்களை நேரடியாக சுவாசிக்கும்போது நம்முடைய நுரையீரலுக்கு சென்று பாதிப்பை தந்துவிடுகிறது.. ஒருவேளை, நுரையீரல் தொற்று பாதிப்பு உங்களுக்கு இருக்கிறதா என்பதை சில அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம். அளவுக்கு அதிகமான உடல் சோர்வு, குளிர்ஜூரம், வீசிங், தொடர்ச்சியான இருமல், சளி இருந்தால் கவனமாக இருக்கும்..
அறிகுறிகள்: சில நேரங்களில் சளி மற்றும் இருமலில் ரத்தம் வெளியேறலாம்... சளி பச்சை, மஞ்சள் அல்லது நீல நிறத்திலும் காணப்படலாம். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.. அத்துடன், நெஞ்சு வலியும் ஏற்படும். இதய பாதிப்பு இருந்தாலும், இப்படியான அறிகுறிகள் இருக்கும். எனினும், இவைகளில் எந்த அறிகுறிகள் இருந்தாலும், டாக்டரை உடனடியாக சந்திக்க வேண்டும். ஏற்படும்..
சளி அதிகமாகி, நுரையீரல் பாதிக்கும்முன்பேயே, வீட்டு மருத்துவத்தாலேயே சளியை எளிதாக வெளியேற்றிவிடலாம். சாதாரண சளியை விரட்ட, எப்போதுமே சுடுநீர் நீர் குடிக்க வேண்டும்.. நெஞ்சு பகுதியில் சளி தேங்குவதை இந்த சுடுநீர் தடுத்து நிறுத்தி, சளியையும் வெளியேற்றி விடும். பால் சேர்க்காமல், ஒருநாளைக்கு 2 அல்லது 3 கப் ப்ளாக் காபி குடிக்கலாம்..
மஞ்சள் தூள்: இதனால், நெஞ்சு சளி லேசாக இளகும்.. ஓரிரு முறை ஆவி பிடிக்கலாம்.. இதனால், ஓரளவு நிவாரணம் கிடைக்கும். உணவில் நிறைய மிளகு, மஞ்சள் தூள் சேர்த்து கொள்ள வேண்டும்.
அதேபோல ஒரு ஸ்பூன் வெந்தயத்தை, ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். இத்துடன் சிறிது மிளகையும் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கலாம். மிளகில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட், வலி நிவாரண பண்புகள் உள்ளதால், சளியை உடைப்பதில் பெரும்பங்காற்றுகிறது.
வெந்நீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, வாயை கொப்பளிக்க வேண்டும். இதனால் மஞ்சளில் உள்ள குர்குமின், சளியை இளக செய்வதுடன், நெஞ்சு சளிக்கு நிவாரணமும் கிடைக்கும்..!!
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications