Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரைக்கீரை.. பேருதான் "அரை".. ஆயுளை கூட்டும் கீரை.. "அந்த" பிரச்சனையை அசால்ட்டா தீர்க்கும் அரைக்கீரை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நம்முடைய வீடுகளில் அதிகமாக பயன்படுத்தக்கூடிய கீரைவகைகளில் ஒன்றுதான், இந்த அரைக்கீரை.. ஆரைக்கீரைதான், அரைக்கீரையாக மருவியது என்பார்கள்.

வஞ்சமில்லாமல் எங்கும் படர்ந்து வளரக்கூடியது இந்த கீரை.. பார்ப்பதற்கு குட்டையாக இருக்கும்.. ஆனால், கனமான வேர்களை கொண்டது.. இதன் கிளைகளைதான், கீரையாக பறித்து சமைப்பார்கள்.

Do you know Health Benefits of Arai Keerai and Aarai Keerai is the Excellent Medicine for all

இந்த கீரை சூட்டை கிளப்பக்கூடியது என்பதால், காய்ச்சல், குளிர், கபம் போன்ற நோய்களை தீர்ப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.. அதனால்தான், சித்த மருத்துவத்தில் இந்த அரைக்கீரைக்கென்று சிறப்பான இடம் இன்றும் உள்ளது.. இந்த கீரையுடன், சுக்கு மிளகு, இஞ்சி, மஞ்சள் சேர்த்து கஷாயம் போல வைத்து குடித்தால், ஜன்னி, வலிப்பு நோய், குளிர்க்காய்ச்சல் நீங்கும்.. நெஞ்சில் உள்ள சளியும் கரைந்துவிடும்.

ஆண்மை குறைபாடு: தாம்பத்ய வாழ்க்கை சிறப்புற இந்த அரைக்கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிட வேண்டும் என்பார்கள்.. இல்லற உறவில் மகிழ்ச்சி நீடிக்க இந்த கீரையை புதுமண தம்பதிகளுக்கு செய்து தருவார்கள்.. இந்த கீரையை சுத்தம் செய்து, நெய்யில், சின்ன வெங்காயம் சேர்த்து, கீரையை கடைந்து சாப்பிட்டுவந்தாலே ஆண்மைக் குறைவிலிருந்து விடுபடலாம்.

பிரசவம் அடைந்த பெண்களுக்கு இழந்த சக்தியையும், பலத்தையும் மீண்டும் பெறுவதற்கு இந்த கீரை உதவுகிறது. அதேபோல. அனிமியா உள்ளவர்கள் இந்த கீரையை அடிக்கடி செய்து சாப்பிட்டு வரவேண்டும். இதனால், ரத்த சோகை நீங்கும்.. பாசிபருப்புடன் இந்த கீரையை 21 நாட்களுக்கு சமைத்து சாப்பிட்டு வந்தால், உடலில் ரத்த சோகை மறையும். உடலிற்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும்.. மிகச்சிறந்த சிறந்த கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது.

அரைக்கீரை: அரைக்கீரையை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு, வாயு பிரச்சினைகளில் இருந்தும், வாத நோய் பிரச்சனையிலிருந்தும் விடுதலை கிடைக்கும்.. நன்றாக பசி ஏற்படும்.. ஜீரண சக்தியை அதிகரித்து, மலச்சிக்கலை போக்குகிறது.. நரம்பு சம்பந்தப்பட்ட அத்தனை கோளாறுகளும் நீங்க அரைக்கீரை துணை புரிகிறது. விஷக்கடியையும் முறிக்கும் சக்தி கொண்டது.

உடல் சருமத்துக்கு அரைக்கீரை மிகவும் நல்லது. அதனால்தான், தேமல், சொறிசிரங்குகள் போன்றவற்றை குணமாக்க இந்த அரைக்கீரையை மருத்துவத்தில் பயன்படுத்துவார்கள். இந்த கீரையின் விதையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் பலவகை நோய்களை தீர்க்கிறது. இந்த எண்ணெய்யை தலைக்கு தேய்த்து குளித்தால், தலைமுடி நன்றாக வளரும்..

வெந்தயம்: அதுமட்டுமல்ல, இந்த கீரையின் சாற்றில் வெந்தயத்தை ஊறவைத்து, அரைத்து தலையில் தேய்த்து குளித்தாலே பேன், பொடுகுப்பிரச்சனை நீங்கி முடி நன்றாக வளரும்..

பத்திய சாப்பாடு சாப்பிடுபவர்களுக்கு இந்த அரைக்கீரை மிகவும் நல்லது.. அதேபோல, உடல் பலவீனமானவர்கள் நெய் சேர்த்து இந்த கீரையை சாப்பிட்டு வந்தால், பலம் அதிகமாகும்.. ஞாபக சக்தியும் பெருகும்.. இந்த கீரையுடன் மிளகு, சீரகம், நல்லெண்ணெய், பூண்டு, சேர்த்து சாப்பிட்டால், கடுமையான உடல் வலியும் நீங்கும்.

கல்லீரல்: அரைக்கீரையை சாப்பிட்டு வருபவர்களுக்கு கண் பிரச்சனைகள் வரவே வராது.. உள்ளுறுப்புகளை பலப்படுத்த இந்த அரைக்கீரை துணை புரிகிறது.. குறிப்பாக, கல்லீரலுக்கு வலு சேர்க்கிறது.. சிறுநீரகங்களுக்கும் பலம் சேர்க்கிறது.. அரைக்கீரையை வாரம் 3 முறையாவது சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் கற்கள் சேராது.. குடலும் சுத்தமாக இருக்கும்.

இந்த கீரையை தொடர்ந்து, உண்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நூரையீரல் நோய்கள் நீங்கும். வாதம், பித்தம், கபம் போன்றவற்றை சரிசெய்யும். நரம்புகளை வலுப்படுத்தும்.

முழுப்பலன்: பொதுவாக, இந்த கீரையை கடையல், மசியல், கூட்டு செய்வார்கள்.. ஆனால், நிறையபேர் தோசைகளிலும், சூப்களிலும் இந்த கீரையை சேர்க்கிறார்கள்.. அரைக்கீரையை வைத்தே கீரை வடை செய்கிறார்கள்.. மோர்க்குழம்பு செய்யும்போதுகூட, இந்த கீரையை பயன்படுத்துகிறார்கள். ஆக, இந்த கீரையின் பெயர்தான் "அரை".. ஆனால் மனித வாழ்வுக்கு "முழுமையான" பலனை தரக்கூடியது..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+