Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொத்து கொத்தா கொட்டுதா.. ஜஸ்ட் இதை மட்டும் பண்ணுங்க.. அடர்த்தியான தலைமுடி வளரும்.. பெஸ்ட் டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்றைய சூழலில், தலைமுடி கொட்டுவது என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.. இதற்கென்று எளிய தீர்வுகள் நம்மிடமே உள்ளன. இதனால், ஓரளவு தலைமுடி கொட்டுவதை சரி செய்ய முடியும்.

முதலில், முடி கொட்டுவதற்கு என்ன காரணம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.. முடி கொட்ட பல காரணங்கள் இருக்கலாம். ஹார்மோன் குறைபாடுகள் முக்கிய காரணமாக திகழ வாய்ப்புள்ளது..

Do you know Health Benefits of Curry Leaves and what are the Excellent tips for Hair Growth

அடர்த்தியான முடி: ஹார்மோன்கள் சரியாக இருந்தால், முடிகள் அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் வளரும். இரும்புச்சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் இருந்தாலும் முடி கொட்டலாம். அதனால், ஹீமோகுளோபின் அளவை சரியாக வைத்து கொள்ள வேண்டும்.

அதேபோல, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுகள் காரணமாகவும், முடி கொட்டலாம்.. இதற்கும், சத்தான உணவு சாப்பிடுவது அவசியம்.. அதேபோல, மன அழுத்தம் காரணமாகவும் முடி கொட்டலாம்.. அதேபோல, இளம்பெண்களுக்கு பிசிஓடி எனப்படும், நீர்க்கட்டிகள் பிரச்சனைகள் இருந்தாலும், முடி கொட்டலாம். இதனால், தலைமுடியின் வேர்க்கால்களும் பலவீனமாகிவிடும். அளவுக்கு அதிகமாக உடலில் உஷ்ணம் ஏற்பட்டுவிட்டாலும், முடி கொட்டலாம்.

உண்ணும் உணவு: ஆக, நம்முடைய தலைமுடிக்கும், உண்ணும் உணவிற்கும் நேரடி தொடர்பு உள்ளது.. நம்முடைய தலைமுடிக்கும், மனதுக்கும் நேரடி தொடர்பு உள்ளது. எனவே, ஆரோக்கியமான உணவு + மகிழ்வான மனநிலை + போதுமான உறக்கம் போன்றவையே தலைமுடி வளர்ச்சியை தீர்மானிக்கின்றன. முடி வளர்ச்சிக்கு இரும்பு, ஜின்க், கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் தேவைப்படுகின்றன.. இதில், கீரைகளை சாப்பிட்டாலே முடிகள் பலமாகும்.. அதிலும் முருங்கைக்கீரையை சாப்பிடுவது மிகவும் நல்லது.

இதனால், ஆரோக்கியமான முடிகள் கிடைப்பதுடன், நீளமாகவும், அடர்த்தியாகவும் வளரும். அடுத்ததாக கறிவேப்பிலை... இந்த கறிவேப்பிலையை எந்த ரூபத்திலும் எடுத்துக் கொள்ளலாம்.. எப்படி சாப்பிட்டாலும் நல்லதுதான். தலைக்கு எண்ணெய்யிலும், சாப்பிடும் உணவிலும் பயன்படுத்தி வந்தால் பலன் கிடைக்கும். முட்டை, கோழி இறைச்சி, கடல் வகை உணவுகளில் நிறைய புரோட்டீன் உள்ளதால், தலைமுடிக்கு நல்லது.

செம்பருத்தி: செம்பருத்தி, தேங்காய் எண்ணெய் கலந்து வீட்டிலேயே ஆயில் தயார் செய்து வைத்துக் கொண்டால் இன்னும் சிறப்பு.. செம்பருத்தி பூக்களையும், செம்பருத்தி இலைகளையும் கழுவி அதை ஈரமில்லாமல் அரைக்க வேண்டும்.. ஒரு பாத்திரத்தில், தேங்காய் எண்ணெய் ஊற்றி லேசாக சூடானதும், அதில், இந்த செம்பருத்தி விழுதை போட வேண்டும்.. அதில், சிறிது வெந்தயத்தை பொடி செய்து போட்டு, கருகாமல் கொதிக்கவிட வேண்டும். இந்த எண்ணெய்யை வடிகட்டி வைத்து கொள்ளலாம்.

இதே எண்ணெய்யில் கறிவேப்பிலையை அரைத்து கொட்டியும், ஆயில் தயார் செய்யலாம். செயற்கை ஜெல்களை தூக்கி தூரப்போட்டுவிட்டு, இந்த இயற்கையான எண்ணெய்யை பயன்படுத்தினாலே போதும்.. முக்கியமாக, தண்ணீரை நிறைய குடித்தாலே போதும்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+