முருங்கையின் வேர்.. "இதை" மட்டும் செய்து பாருங்க.. நரம்பு தளர்ச்சி ஓடிரும்.. கோழிக்கறி ஈரல் சூப்பர்
சென்னை: இன்றைய சூழலில் நரம்புத்தளர்ச்சி பிரச்சனை பெரும்பாலும் இளைய சமுதாயத்தை தாக்கி வருகிறது. ஆனால், ஆரம்ப நிலையிலேயே இந்த பிரச்சனைக்கு உணவு முறையில் தீர்வு காணலாம் என்கிறார்கள்.
ஒருவர் நிலைத்தடுமாற்றத்தால் அவதிக்கு ஆளானால், அவர்களது நரம்பு பாதிக்கப்பட்டுள்ளது என்றே அர்த்தம்.. இப்படிப்பட்ட அறிகுறிகள் இருந்தால, அலட்சியம் கூடாது.. அது அவர்களை கீழே விழச்செய்து, காயங்களை ஏற்படுத்திவிடும்

கை நடுங்குதல், பதற்றம் போன்ற பிரச்சனைகள் இருந்தால், புரோட்டின் மற்றும் வைட்டமின் உணவுகளை சரிவர சாப்பிடாததுதான் பிரதான காரணமாக இருக்க முடியும்.. கடுமையான தலைவலி வந்தாலும், நரம்பு பாதிக்கப்பட்டிருக்கலாம், அல்லது ஒருவரது கழுத்துடன் தொடர்புள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டிருந்தால், அதுவும் மோசமான தலைவலியை உண்டுபண்ணிவிடும்.
திருத்தங்கள்: நரம்பு தளர்ச்சி பிரச்சனைக்கு இதுபோல எத்தனையோ காரணங்கள் இருந்தாலும், ஆரம்பக்கட்டம் என்றால், உணவுமுறையில் சில திருத்தங்களை கொண்டுவரவேண்டும்.. இந்த நரம்பு தளர்ச்சிக்கு மிகவும் உதவுவது அத்திப்பழங்கள்தான்..
நரம்புகளை வலுப்படுத்தும் குணம் இந்த பழத்துக்கு உண்டு.. அதேபோல, மாதுளம் பழம், நெல்லிக்காய்களை சாப்பிட்டு வந்தாலும், நரம்பு தளர்ச்சியை சரிசெய்யும். பேரிச்சை பழத்தை பாலுடன் கலந்து சாப்பிடலாம். சமையலில், அடிக்கடி பிரண்டையை துவையல் செய்து சாப்பிட வேண்டும்..
கோழி ஈரல்: கோழியின் ஈரல் போன்றவற்றில் வைட்டமின் பி12 உள்ளதால், இவைகளை கட்டாயம் சாப்பிட வேண்டும். ஜாதிக்காய், லவங்கப்பட்டை, போன்றவற்றில் நரம்பை பலப்படுத்தும் சத்துக்கள் உள்ளன. கீரைகளில் பொன்னாங்கண்ணிக்கீரை, மணத்தக்காளிக்கீரையை சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது. ஆனால், மிகவும் முக்கியமானது முருங்கைக்கீரைதான். அதுவும் முருங்கை வேர்கள், முருங்கைபூக்கள் என்றால் கூடுதல் ஸ்பெஷ்ல்
முருங்கைகீரைக்கு பொதுவாக உடலை வலுப்படுத்தும் சக்தி அதிகம் உண்டு.. முருங்கை கீரையை சமைக்கும்போதெல்லாம் சிறிதளவு முருங்கை பூவையும் சேர்த்து சமைத்தால், நரம்புகள் வலுப்படும்.
முருங்கை வேர்கள்: முருங்கை வேரில், ஏகப்பட்ட வைட்டமின்கள், தாதுக்கள், பயோஆக்டிவ் கலவைகள், துத்தநாகம், இரும்பு போன்றவை நிறைந்துள்ளன. இந்த முருங்கை வேரினை கஷாயம் செய்து சாப்பிடலாம்..
அல்லது முருங்கை வேரை பொடி செய்து, சீரகம், சோம்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டியும் சாப்பிடுவார்கள். இந்த வேரின் சாறுடன், பால் சேர்த்து குடித்தால், உள்ளுறுப்புகளுக்கு பலத்தை பெற்று தரும்.. அல்லது முருங்கை வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து, தினமும் 2 வேளை, 2 கிராம் அளவு வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சிகள் முற்றிலுமாக நீங்கும்...!!
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications