"ஆட்டுக்கறி" வாங்கறீங்களா? ஆட்டிறைச்சியை இப்படி சமைத்து பாருங்க.. அதென்ன பக்கத்துல கீரை.. செம டேஸ்ட்
சென்னை: ஆட்டுக்கறியை வெறுமனே குழம்பு போல் செய்யாமல், குறைவான எண்ணெய்யை ஊற்றி, காய்கறிகளையும் சேர்த்து சமைத்தால், உடலுக்கு நன்மைகளை தரும் என்கிறார்கள்.
மட்டனில் குறைந்த அளவு கலோரிகளும், குறைந்த அளவு கொழுப்புக்களும், புரதச்சத்து கொஞ்சம் அதிகமாகவும் இருக்கிறது. ஆனால், இரும்புச்சத்தும், பொட்டாசியமும் அதிக அளவில் உள்ளன. சிக்கனைவிட குறைந்த அளவில் சோடியம் சிக்கனில் உள்ளது.. எனவே, மட்டனை எடுத்துக் கொண்டால், சிக்கனைவிட, மட்டனில் உள்ள சாப்ஸில் நிறைய நன்மைகள் உள்ளன..

பெஸ்ட் உணவு: ஆக, சிக்கனைவிட ஒருபடி பெஸ்ட் உணவாக மட்டன் கருதப்படுகிறது. அதேசமயம், நீரிழிவு நோயாளிகள், இதய நோயாளிகளை இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டி உள்ளது. மட்டனில் அதிக சத்துக்கள் இருந்தாலும் சோடியத்தை, பொட்டாசியம் அதிகமாகவே உள்ளது. அதனால், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, இது சிறந்த தேர்வாக இருக்காது
அதேபோல, மட்டன் எல்டிஎல் அல்லது கெட்ட கொழுப்பை அதிகரிப்பதுடன், ரத்த உறைவு மற்றும் பிளேக் உருவாவதை தூண்டுகிறதாம்.. அத்துடன், சிவப்பு இறைச்சியில் கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் அதிகம் உள்ளது என்பதால், மாரடைப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்கிறார்கள் டாக்டர்கள்.
அதுமட்டுமல்ல, எவ்வளவுதான் சத்துக்களை தந்தாலும், மட்டனை அளவுடன்தான் சாப்பிட வேண்டும். அதிலும், இதயநோயாளிகள், சர்க்கரை நோயளிகள், ரத்த அழுத்தம் பாதிப்பு உள்ளவர்கள், டாக்டர்களை ஆலோசித்துவிட்டு சாப்பிடுவது நல்லது.
காய்கறிகள் அவசியம்: எனினும், நிறைய எண்ணெய் நிறைய சேர்த்து மட்டனை சமைக்காமல், டீப் ஃப்ரை செய்யாமல், கிரில் செய்தோ அல்லது கிரேவியாகவோ அல்லது சூப்பாகவே செய்து சாப்பிட்டால், சத்துக்கள் வீணாகாமல் கிடைக்குமாம்.. அதேபோல, மட்டன், சாப்பிடும்போது கண்டிப்பாக, நார்ச்சத்து நிறைந்த உணவுகளையும் அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.
அதனால், சமைக்கும்போதே, மட்டனுடன், முருங்கை, கத்தரி, உருளை போன்ற காய்களை சேர்த்து குழம்பு வைப்பது கூடுதல் பலனை கொடுக்குமாம். சிலர், மட்டனில் வெந்தயக்கீரை சேர்த்து சமைப்பார்கள்.. மேத்தி சிக்கன் கிரேவி என்று ஹோட்டல்களில் இருப்பதை போல, மட்டனிலும் இவ்வாறு வீட்டிலேயே நாம் செய்யலாம்.
வெந்தயக்கீரை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய், வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், இஞ்சி பூண்டு விழுது வதக்கி, அதில், கறி மசாலா, மிளகாய்த்தூள், மல்லி தூள், உப்புத்தூள் சேர்க்க வேண்டும்.. இப்போது, உப்பு, ம.தூள் சேர்த்து வேகவைத்து வைத்திருக்கும் கறியை, சூப்புடன் வாணலில் கொட்டி கொதிக்க விட வேண்டும்.. பிறகு, வெந்தயக்கீரையும் சேர்த்து கொதிக்கவிட்டு, லேசாக தேங்காய் பால், கொத்தமல்லி தூவி இறக்கினால், வெந்தயக்கீரை மட்டன் குழம்பு ரெடி.
அதேபோல, மட்டனில், உப்புக்கண்டம் போட்டு வைத்து கொண்டால், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.. மட்டனை சுத்தம் செய்து, பெரிய பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்..
உப்புக்கண்டம்: இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள், கல் உப்பு இவைகளை அரைத்து கொள்ள வேண்டும். அம்மியில் அரைத்தால் கூடுதல் சுவையை தரும். பிறகு இந்த விழுதினை, மட்டனில் கொட்டி கலந்து, சிறிது நேரம் ஊறவிட வேண்டும். பிறகு, ஒரு சணலில் அல்லது கெட்டியான நூலில் கோர்த்து வெயிலில் காய வைத்து எடுத்து வைத்து கொண்டால் போதும்.. 3 மாதம் ஆனாலும் கெட்டுப்போகாது.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications