கற்பூரவல்லி.. நுரையீரலை மட்டுமல்ல சிறுநீரகத்தையும் பேணி காக்கும் ஆச்சரிய ஓமவல்லி.. அசத்தல் ரசம்
சென்னை: மழைக்காலம் துவங்கிவிட்ட நிலையில், ஓமவல்லி இலையின் தேவையும் அதிகரித்துள்ளது.. அதுவும், ஓமவல்லி ரசம் ஒன்று போதும்.. நுரையீரலே பலப்பட்டுவிடும் பாருங்க. அதேபோல, சிறுநீரகங்களுக்கும் இந்த ஓமவல்லி இலை தரும் நன்மை என்ன தெரியுமா?
ஓமவல்லி இலையை, கற்பூரவல்லி இலை என்றும் சொல்வார்கள்.. வைட்டமின் C, A, B6 த்துக்கள் நிறைந்துள்ளன.. இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், கால்சியம் போன்றவையும் அடங்கி உள்ளன. இதனால், சருமத்துக்கும், கண்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கின்றன.. நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகிறது..

நுரையீரல்: செரிமான பிரச்சனைக்கும், நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைக்கும், மிகச்சிறந்த தீர்வாக அமைவது இந்த இலைகள். இந்த இலையிலிருந்து சாறு எடுத்து சர்க்கரையுடன் கலந்து நெற்றியில் பற்றுப்போடலாம். இதனால் ஜலதோஷம், தலைவலி நீங்கும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனையும் தீரும். இந்த இலையின் சாறு எடுத்து, சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால், சளி, இருமல் பிரச்சனை தீரும்.. மார்பு சளி கட்டுக்குள் வரும்.
அதிகப்படியான கபம் பிரச்சனை இருப்பவர்கள், இந்த இலையை அரைத்து நீர் கலந்து கொதிக்க வைத்து, ஏலக்காய், கிராம்பு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து 3 நாள் தினமும் 2 வேளை குடித்தால் நிவாரணம் கிடைக்கும். கற்பூரவல்லி இலையை தண்ணீரில் சேர்த்து சுடச்சுட ஆவி பிடித்தாலும் தீர்வு கிடைக்கும்.
புற்றுநோய்கள்: சிகரெட் பிடிப்பவர்களுக்கு இந்த இலைகள், ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.. காரணம், அதிகப்படியான சிகரெட் பிடிக்கும்போது, நுரையீரல் பாதிக்கப்படும்.. இதுவே பின்னாளில் புற்றுநோயாக உருவெடுக்கும்.. அப்படி ஒரு அபாயம் வருவதற்கு முன்பே, இந்த கற்பூரவள்ளி இலையில் சாறு எடுத்து, அதை நன்றாக சுண்டக்காய்ச்சி பாதியளவு எடுத்து வடிகட்டி குடித்து வர வேண்டும். இதனால், புகையினால் உண்டான பாதிப்புகளிலிருந்து விடுபடுவதுடன், நுரையீலின் பாதுகாப்பையும் காக்கலாம்
ஓமவல்லி இலைகளை வைத்து ரசம், வாரம் ஒருமுறையாவது சாப்பிடலாம். வெறும் வாணலில், தனியா, மிளகு, சீரகம் தலா அரை ஸ்பூன் சேர்த்து வறுத்து, பொடியாக்கி கொள்ள வேண்டும். பிறகு, ஓமவல்லி இலை, பச்சை மிளகாய், பூண்டு இவைகளை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து கொள்ள வேண்டும்.
கறிவேப்பிலை: ஒரு பாத்திரத்தில் புளியுடன், தக்காளி, உப்பு, ம.தூள் சேர்த்து கரைத்து கொள்ள வேண்டும். ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காய தூள், தாளித்து, கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை கொட்டி கொதிக்க விட வேண்டும். இறக்கும்போது, வறுத்த பொடியையும் சேர்த்து, கொத்தமல்லி தூவி இறக்கிவிடவும். இந்த ரசம், நுரையீரலை பலப்படுத்தக்கூடியது.
நுரையீரலை போலவே, சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தையும் இந்த இலைகள் காக்கின்றன என்பது கூடுதல் ஆச்சரியமாகும்.. சிறுநீரகங்கள் நம்முடைய ரத்தத்தில் உள்ள அதிகப்படியான உப்புகள் மற்றும் இதர பொருட்களை சுத்திகரித்து, அந்த கழிவுகளை சிறுநீர் வழியாக நம்முடைய உடலிலிருந்து வெளியேற்றுகிறது.
கற்பூரவல்லி: அந்தவகையில், இந்த கற்பூரவள்ளி இலைகளும், சிறுநீரை அதிகம் பெருக்கும் தன்மையை கொண்டதுடன், சீறுநீரகங்களில் அதிகளவில் சேரும் உப்புக்களையும் கரைத்து விரட்டும் பண்பை கொண்டது.
சரும பாதுகாப்பையும் தக்கவைப்பதில், இந்த ஓமவல்லி இலைக்கு முக்கிய பங்குள்ளது.. நான்கைந்து ஓமவல்லி இலை சாறுடன், கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள் சேர்த்து முகத்துக்கு பூசி 20 நிமிடம் கழித்து கழுவி வந்தாலே போதும், முகத்தில் உள்ள பருக்களும் மருக்களும் நீங்கிவிடும்.. சருமமும் பொலிவு பெறும்..
விஷப்பூச்சிகள்: நம்முடைய சுற்றுப்புறத்தையும் சுத்தப்படுத்தக்கூடிய இலைகள் என்பதால்தான், இந்த செடியை கட்டாயம் வீடுகளில் வளர்க்க சொல்கிறார்கள்.. மிகச்சிறந்த கிருமி நாசனியாக பயன்படுவதுடன், விஷப்பூச்சிகளையும் நெருங்க விடாது..
சாதாரண மண்ணில், அரை அடி நீளமுள்ள, கனமான தண்டை நட்டுவைத்தாலே, செடி எளிதாக வளர்ந்துவிடும். நேரடி சூரிய வெளிச்சமும், குறைவான தண்ணீர் இருந்தாலே போதும், நம்முடைய உடலையும், நம் சுற்றுப்புறத்தையும் பேணி காத்துவிடும் இந்த ஓமவல்லி செடிகள்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications