படிகாரக் கல்! நகச்சுத்தி வந்தால் எலுமிச்சை சொருகுறீங்களா? வியர்வை நாற்றத்திலிருந்தும் விடுபடலாமே!
சென்னை: கோடை காலத்தில் வியர்வை துர்நாற்றத்திலிருந்து எப்படி தப்பிப்பது தெரியுமா? என்னதான் ஸ்பிரே , டியோடிரன்ட் போட்டாலும் பயணில்லையா? அதிக விலை கொடுத்து வாங்கத் தேவையில்லாத ஒரு பொருள் இருந்தால் போதுமே!
என்னதான் ஆள் டிப்டாப்பாக உடை அணிந்துக் கொண்டு நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிக் கொண்டிருந்தாலும் வியர்வை நாற்றம் இருந்தால் எல்லாமே அடிப்பட்டுவிடும்.

இது போன்ற வியர்வை நாற்றம் உள்ளிட்டவை நமது தன்னம்பிக்கையை இழக்க செய்துவிடும். பிறர் நம்மிடம் இருந்து சற்று விலகும் போது மிகவும் கவலையாக இருக்கும். குளிர்காலத்தில் வியர்வை என்றாலே சிலரது வியர்வை நாற்றம் தாங்க முடியாது.
அதிலும் அடிக்கிற வெயிலுக்கு ஏசிக்குள்ளேயே இருந்தாலும் வியர்வை நாற்றம் அடிக்கத்தான் செய்யும். இதற்காக காஸ்ட்லி சென்ட், நறுமண பொருட்கள், டியோடிரன்ட்கள் உள்ளிட்டவைகளை வாங்கி அப்ளை செய்வோம். ஆனால் அந்த சென்ட்டுடன் கலந்து வியர்வை நாற்றமும் வீசும்.
படிகாரக் கல்: இதற்கு எதற்காக நாம் விலை அதிகமுள்ள சென்ட்டை வாங்க வேண்டும்? குறைந்த விலையில் நிரந்தர தீர்வு வேண்டுமா? இருக்கே படிகாரக்கல்! இதை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா? இந்த படிகாரத்தை தண்ணீரில் கலந்து அந்த தண்ணீரை ஸ்பிரே போல் நாம் வியர்வை வரும் இடங்களில் தெளித்துக் கொள்ளலாம், இதனால் வியர்வை நாற்றம் கட்டுப்படும். இல்லாவிட்டால் படிகார கல்லை உடலில் தேய்த்தாலும் வியர்வை வாசம் வராது.
இந்த படிக்காரக் கல்லை திருஷ்டிக்காகவும் வீட்டு வாசலில் கட்டலாம். இது மருத்துவ குணம் மிக்க உப்பு ஆகும். அது போல் கண்களுக்கு கீழ் உள்ள கருவளையத்தின் மீது தடவி வந்தால் விரைவில் அவை நீங்கிவிடும். படிகாரத்தில் பாக்டீரியா எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. சிறுநீர் தொற்றில் இருந்து விடுபட வேண்டுமானால் பிறப்புறுப்பை படிகாரம் கலந்த நீரில் கழுவலாம்.
குதிகால் வெடிப்பு: அது போல் சிலருக்கு குதிகாலில் வெடிப்பு இருக்கும். அவர்கள் தினமும் தூங்க போவதற்கு முன்பு வெடிப்பு உள்ள இடத்தில் படிகாரக் கல்லை நன்றாக மசாஜ் செய்து வந்தால் சில நாட்களிலேயே கால்களில் உள்ள வெடிப்பு மறைந்துவிடும். நகசுத்தி ஏற்பட்டால் நகம் பாதிக்கப்படும். இதற்கு படிகாரத்தை தண்ணீரில் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து நகச்சுற்றின் மீது பூச வேண்டும். பிறகு நகச்சுற்றி சரியாகிவிடும்.
பல் வலி நீங்க: பற்களுக்கு மிகவும் நன்மை செய்வது படிகாரம். இது இயற்கையாகவே வாய் துர்நாற்றத்தை போக்கும். படிகாரம் கலந்த நீரை கொப்பளித்தால் பல் வலி நீங்கும். வாய் துர்நாற்றத்தையும் நீக்கும். படிகாரம் தடவினால் ரத்த போக்கு நீங்கும். காயம்பட்ட இடத்தை படிகாரம் கலந்த தண்ணீரில் கழுவினால், ரத்த போக்கு நின்றுவிடும்.
வாய் துர்நாற்றம்: படிகாரம் கலந்த நீரில் வாய் கொப்பளிக்க தொண்டை புண் குணமாகும். படிகாரப் பொடியை தேனுடன் கலந்து சாப்பிட்டால் சிறிது நேரத்தில் இருமல் சரியாகிவிடும். அது போல் தலையில் உள்ள பொடுகு நீங்க, படிகாரம் கலந்த தண்ணீரில் முடியை கழுவினால் தலையில் உள்ள பொடுகு, அழுக்கு நீங்கிவிடும். படிகாரத்தை கொண்டு முகத்தை சுத்தம் செய்தால் சுருக்கங்கள் நீங்கிவிடும். முகம் பொலிவாகவும் அழகாகவும் இருக்கும்.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் பொதுவான தகவல்களை கொண்டு கொடுக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்துவதற்கு முன்னர் மருத்துவரின் ஆலோசனைகளை கேட்டு பெற்றுக் கொள்ளவும்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications