Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மரவள்ளிக்கிழங்கு.. அள்ள அள்ள ஆச்சரியம்.. மரவள்ளிக் கிழங்கு போலவே அந்த கிழங்கு தோல்.. சபாஷ் மருந்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிழங்கு வகைகள் சாப்பிட்டால் உடல் எடை கூடிவிடும் என்பார்கள்.. ஆனால், உடல் எடை குறைக்க உதவுகிறதாம் இந்த மரவள்ளிக்கிழங்கு.. எப்படி?

மரவள்ளிக்கிழங்கை பொறுத்தவரை, கலோரிகளும், கார்போஹைட்ரேட்டுகளும், வைட்டமின்களும், தாதுக்களும் என பல சத்துக்களை கொண்ட வேர் கிழங்காகும். சர்க்கரை சத்துக்கள் இந்த கிழங்கில் உள்ளதால், இதை சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும். மற்றபடி, அனைவராலும் தவிர்க்க முடியாத கிழங்கு இதுவாகும்.. இந்த கிழங்கு மட்டுமல்ல, இதன் தோல்கூட மருத்துவ தன்மை உடையது.

Do you know the Amazing Health Benefits in Maravalli Kizhangu and Maravalli Kilangu is the Best Food for Weight Loss

கண்பார்வை: மரவள்ளிக்கிழங்கில் உள்ள வைட்டமின் A சத்துக்கள், கண் பார்வை கோளாறுகளை நீக்குகிறது.. கண்களிலுள்ள வறட்சியையும் போக்குகிறது.. இதிலுள்ள K சத்துக்கள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்குகிறது.

வைட்டமின் K அதிகமுள்ள இந்த கிழங்குகள், செரிமான மண்டலத்தை சீராக்குகின்றன.. இதில் இருக்கும் போலேட் (folate), வைட்டமின் C உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்குகிறது. பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் ஆன்டிஆக்சிடன்டுகளும் மரவள்ளிக்கிழங்கில் இருக்கின்றன.

கால்சியம் சத்துக்கள் இந்த கிழங்கில் உள்ளதால், எலும்புகளுக்கும் பற்களும் வலுவை தருகிறது. எனவே வளரும் பிள்ளைகள் சாப்பிட வேண்டிய கிழங்கு இதுவாகும். நினைவுத்திறனை அதிகரிக்கக்கூடிய திறன் இந்த கிழங்குக்கு உள்ளதால், வளரும் பிள்ளைகள் இதனை தவிர்க்கவே கூடாது.

ரத்தவிருத்தி: அதேபோல ஹீமோகுளோபின் பிரச்சனை உள்ளவர்களும் இதை சாப்பிடலாம்.. ரத்த விருத்திக்கும், சிவப்பணுக்களை அதிகரிக்கவும் இக்கிழங்கு துணை புரிகிறது. உடல் பலவீமான இருப்பவர்கள், இந்த கிழங்கில் கஞ்சி செய்து குடிப்பார்கள்.. இதிலிருந்து பெறப்படும் ஜவ்வரிசி கஞ்சி, உடலுக்கு தெம்பை மட்டுமல்ல, வயிற்றுப் புண்களையும் ஆற்றக்கூடியது. உடல் சூட்டையும் தணிக்கக்கூடியது.

இந்த மரத்தின் கிழங்குகள் உடல் எடையை குறைக்க பேருதவி புரிகிறது. காரணம், இந்த கிழங்கில் ஏராளமான நார்ச்சத்துக்கள் உள்ளன.. இவை உடம்பிலுள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி, எடையை குறைக்க உதவுகிறது..

குடல் கழிவுகள்: உடலிலுள்ள கழிவுகள் மட்டுமல்ல, குடலிலுள்ள கழிவுகளையும் நீக்குகிறது. இந்த கிழங்கிலுள்ள நார்ச்சத்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், குடலில் தேங்கியிருக்கும் கழிவுகளையும் வெளியேற்ற உதவுகின்றன. செரிமான மண்டலத்தை சீராக்கி, மென்மையான குடல் இயக்கத்துக்கு வழிவகுக்கிறது.

மரவள்ளிக் கிழங்கை எப்படியெல்லாம் சாப்பிடலாம் தெரியுமா? மரவள்ளிக்கிழங்கு மாவில் தோசை, அடை, உப்புமா செய்வார்கள்.. சிலர் பாயாசமும் செய்வார்கள். சிலர் கஞ்சி போல வைத்து குடிப்பார்கள்.. இந்த கிழங்கை சாம்பார், காரக்குழம்புகளில் பயன்படுத்தலாம். சிப்ஸ் செய்வார்கள்.

மரவள்ளிக்கிழங்கு: ஆனால், இந்த கிழங்கு பறித்து 2 நாட்களுக்குள்ளேயே வேக வைத்துவிட வேண்டுமாம். இல்லையென்றால், கிழங்கு அழுகி கெட்டுவிடும் என்கிறார்கள். எந்த அளவுக்கு நன்றாக வேகவைக்கிறோமோ, அந்த அளவுக்கு நன்மைகள் கிடைக்கும். அதேபோல, ஒரு மணி நேரம் தண்ணீரில் வேக வைத்து உண்பதால், வயிற்றில் படிந்த பாக்டீரியாக்கள் அழிந்து வயிறு சுத்தமாகும்.

அதேபோல, மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்டால், இஞ்சி அல்லது சுக்கு சாப்பிடக்கூடாது என்பார்கள்.. காரணம், இரண்டுமே மண்ணிலிருந்து வருவதால், விஷத்தன்மையாகிவிடும்.. அதுமட்டுமல்ல, மரவள்ளிக்கிழங்கில் குறைவான புரதங்கள் மற்றும் கொழுப்புகளே உள்ளதால், கிழங்கை சாப்பிடும்போது, நிறைய காய்கறிகள் அல்லது புரதம் இருக்கும்படி மற்ற உணவுகளையும் எடுத்து கொள்ள வேண்டும்.

மலச்சிக்கல்: மலச்சிக்கலையும் இந்த மரவள்ளிக்கிழங்கு ஏற்படுத்திவிடும் என்பதால், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்து சாப்பிட வேண்டும். இந்த கிழங்கை 2 மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து, ஜூஸாக அரைத்து குடித்தால் தலைவலி ஓடிவிடும்.. முதுகுவலி இருந்தாலும் ஓடிவிடும்..

சருமத்தில் தழும்புகள், காயங்கள் இருந்தால், இந்த கிழங்கின் தோல்களை அரைத்து பூசலாம்.. இந்த தோலை சீவி, அதை பசை போல செய்து, கட்டிகள், ரணங்கள், தழும்புகள், காயங்கள் இருக்கும் இடங்களில் தடவினால் நிவாரணம் கிடைக்கும். அல்லது இந்த கிழங்கின் இலையில் உள்ள பசையை பிழிந்தும், காயங்களின் மீது பூசலாம்.

கஞ்சி: இந்த மரவள்ளி கிழங்கிலிருந்துதான், ஸ்டார்ச் என்ற மாவு தயாரிக்கப்படுகிறது. இந்த ஸ்டார்ச்சை பயன்படுத்திதான், துணிகளுக்கு கஞ்சி போடுவார்கள்.. காகிதம் தயாரிப்பார்கள், கோந்து தயாரிப்பார்கள், கெட்டியான அட்டைகள் தயாரிப்பார்கள். அந்த அளவுக்கு மிகப்பெரிய காகித தொழிற்சாலைகளிலும், ஜவுளி தொழிற்சாலையிலும், மூலப்பொருளாக மரவள்ளிக்கிழங்கு பயன்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+