சௌக்கியமான வாழ்வை தரும் சௌ சௌ காய்கள்.. கர்ப்பிணிகள் தவறவிட கூடாத நீர்க்காய் சௌ சௌ.. சர்ப்ரைஸ் நன்மை
சென்னை: சௌ சௌ காய்களில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா? கர்ப்பிணிகள் தவறவிடக்கூடாத காய்கள் இந்த சௌ சௌ.
100 கிராம் சௌ சௌவில் 17.8 சதவீதம் கார்போஹைட்ரேட், 10.7சதவீதம் ஸ்டார்ச், 10.5சதவீதம் போலேட் சத்து, 5.4சதவீதம் புரதசத்து, 6.7சதவீதம், சுண்ணாம்பு சத்து, 4.8 சதவீதம் பாஸ்பரஸ், 9 சதவீதம் மாங்கனீசு சத்துகள் நிறைந்துள்ளன.

புற்றுநோய்: அந்தவகையில்,வைட்டமின் A,B,C,K போன்ற எண்ணற்ற சத்துக்கள் அடங்கியிருக்கும் நீர்க்காய்தான் சௌ சௌ.. அதனால்தான், பல பயங்கரமான நோய்களை ஆரம்பத்திலேயே இந்த காய் தடுத்து நிறுத்துகிறதாம். குறிப்பாக, புற்றுநோயை முன்கூட்டியே, தடுக்கக்கூடிய அத்தனை வைட்டமின்களும் இந்த காயில்தான் இருக்கின்றன.
நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் நிறைந்த இந்த சௌ சௌ, உடல் எடையை குறைக்க முயற்சிப்போருக்கு பெரிதும் கை கொடுத்து உதவுகிறது. உடலில் உள்ள கொழுப்புகளை குறைப்பதில், சௌசௌ அதிக பயன்களை தருகிறது.. குறிப்பாக, வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் தேங்கியிருக்கும் கொழுப்புகளை கரைக்க செய்கிறது.. குறைந்த கலோரிகளும், அதிகமான நார்ச்சத்தும் உள்ளதால், டயட்டில் சேர்த்து கொள்ளக்கூடிய உணவாக உள்ளது.
உடல் எடை: உடல் எடையை குறைக்க நினைத்தால், இந்த சௌசௌவை தண்ணீர் ஊற்றி வேகவைத்து உப்பு, மிளகு, தண்ணீர் சேர்த்து சூப் போல செய்து, சாப்பிடுவதற்கு முன்பு குடித்து வந்தாலே போதும்.. அல்லது நிறைய தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, சீரகம், மிளகு தாளித்து கஞ்சி போல் செய்தும் குடிக்கலாம்.
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், நரம்பு தளர்ச்சி பிரச்சனை உள்ளவர்களுக்கும் சௌ சௌ ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். வளரும் பிள்ளைகளுக்கு சௌ சௌ அதிகம் தர வேண்டுமாம். காரணம், கால்சியம் சத்துகள் அதிகமாக உள்ளதால், எலும்புகளையும், பற்களையும் பலமாக்குகிறது.. தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் தாராளமாக சௌ சௌ சாப்பிடலாம்..
தேங்கும் கொழுப்புகள்: அதேபோல, கல்லீரலில் தேங்கியிருக்கும் கொழுப்புகளை அகற்றுவதில் செள செள முக்கிய பங்காற்றுவதாக சமீபத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. எனவே, இந்த செள சௌ காயில் ஜூஸ் தயாரித்து குடிக்கலாம். இதனால், கல்லீரல் கொழுப்புகள் கரைந்துவிடும்.. அத்துடன், வயிறு தொடர்பான பிரச்சனைகளும் விலகிவிடும். சிறுநீரக பிரச்சனை உருவாகாமல் தடுத்துவிடுகிறதாம் இந்த சௌ சௌ.
பெருங்குடல், சிறுகுடல் சம்பந்தமான கோளாறுகளை நீக்கி, குடல் மூலம் உருவாகக்கூடிய அனைத்து தொந்தரவுகளையும் சௌசௌ சரிசெய்யக்கூடியதாம்..
கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கை, கால்களில் ஏற்படும் வீக்கத்தை, குறைக்க இந்த சௌசௌ உணவைதான் அதிகம் பயன்படுத்துவார்களாம்.. சரும பொலிவை ஏற்படுத்தக்கூடிய தன்மை இந்த சௌ சௌ காய்களுக்கு உள்ளது.. இதனால், இளம்வயதிலேயே ஏற்படும் முகசுருக்கம் தடுத்து நிறுத்தப்படும்.
கொட்டைகள்: இது நீர்ச்சத்து காய் என்பதால், வேகவைத்ததுமே, மென்மையாக சுவையாக மாறிவிவிடுகிறது.. எனினும், இதிலுள்ள கொட்டையை நீக்கிவிட்டு சமைக்க வேண்டும்.. அதைவிட முக்கியம், சமைத்த உடனேயே சாப்பிட்டு விட வேண்டும்.
-
தினமும் ஒரு கைப்பிடி மொச்சை பயறு சாப்பிட்டால் உடலில் இவ்வளவு மாற்றங்களா? மிஸ் பண்ணிடாதீங்க! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications