பூலாங்கிழங்கு.. வெள்ளை மஞ்சள் கிழங்கு அருமை பாருங்க.. புற்றுநோயை ஓட ஓட விரட்டும் கமகம பூலாங்கிழங்கு
சென்னை: வறட்டு இருமல், தொண்டைக்கட்டு, காய்ச்சல் போன்ற கோளாறுகளை நீக்குவதற்கு, பூலாங்கிழங்கை எப்படி பயன்படுத்த வேண்டும்.. இந்த கிழங்கின் வேறு நன்மைகள் என்னென்ன தெரியுமா?
கிச்சிலி கிழங்கு என்று இந்த பூலாங்கிழங்கிற்கு இன்னொரு பெயர் உண்டு.. அல்லது வெள்ளை மஞ்சள் என்பார்கள்.. அம்பா மஞ்சள் என்றும் சொல்வார்கள்.. வாசனைக்கு மட்டுமே இந்த கிழங்கு பயன்படுத்தப்படுகிறது என்று பலரும் நினைக்கிறார்கள்.

சுவை: கசப்பு சுவையும் + மாம்பழ வாசனையும் கலந்து, பார்ப்பதற்கு இஞ்சி போலவே இருக்கும் இந்த கிழங்கை, மஞ்சளுடன் சேர்த்து அரைத்து உடலுக்கு பூசி குளித்தால், உடல் நாற்றம், வியர்வை, அரிப்பு, நமைச்சல் நீங்கிவிடும்.
இந்த கிழங்கின் வேர்ப்பகுதிகள் மருந்தாகின்றன.. கிழங்கை உலர்த்தி இடித்து பவுடராக்கி, சலித்து மருந்தாக பயன்படுத்தலாம். குறிப்பாக, வறட்டு இருமல், தொண்டைக்கட்டு, காய்ச்சலுக்கு இந்த பொடியில் சிறிது எடுத்து தேனில் கரைத்து சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்.. அல்லது இந்த பூலாங்கிழங்கில் தண்ணீர் ஊற்றி, சிறிது மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி குடித்தாலே இருமள், சளி கட்டுப்படும். வறண்ட இருமல் நின்றுவிடும்.
மாதவிடாய்: ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள இந்த பூலாங்கிழங்கு, சுவாச மண்டலத்தை பலப்படுத்துவதுடன், நுரையீரலுக்கும் நன்மை தரக்கூடியது. இந்த பூலாங்கிழங்கை, டீ போல தயாரித்து குடித்து வந்தால், பெண்களுக்கு ஏற்படும் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைகள் சீராகிவிடும்..
இந்த வெள்ளை மஞ்சளில் குர்குமின் என்ற பொருள், புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கிறது. அதனால், உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கவும், அதற்கு சிகிச்சை செய்யவும் இந்த கிழங்கு உதவுகிறது. அதுமட்டுமல்ல, புற்றுநோய் சிகிச்சையில் இப்போதுவரை இந்த வெள்ளை மஞ்சளின் பயன்பாடு அபரிமிதமாகவே உள்ளது.
மார்பக புற்றுநோய்: பெண்களை அதிகம் பாதிக்கக்கூடிய மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் உள்ளிட்ட புற்றுநோய்களை அண்டவிடாமல் இருக்க செய்ய, இந்த பூலாங்கிழங்கின் சாறு, மருந்தாக பயன்படுகிறது.
வாதவலிகள் உடலில் ஏற்பட்டால், இந்த பொடியை, நீரில் கலந்து பற்றுப்போட்டால் வலி தீரும்.. காயங்கள், தோல் பிரச்சினைகளுக்கும் இந்த பொடியை பயன்படுத்தலாம். ஜீரண சக்தியையும் அதிகரிக்க செய்வதால், குடல் சார்ந்த பிரச்சனைகளையும் சீர் செய்கிறது.. மேலும், வயிற்றில் அல்சர் புண்களையும் ஆற்றுகிறது இந்த கிழங்கு. வயிற்றில் பூச்சித்தொல்லை இருந்தாலும், வாயு பிடிப்பு இருந்தாலும் அதற்கும் இந்த வெள்ளை மஞ்சள் உதவுகிறது..
அழகு சாதன பொருள்: பெரும்பாலும் அழகுசாதன பொருட்கள் தயாரிப்புகளில் இந்த கிச்சிலி கிழங்குகளை பயன்படுத்துவார்கள்.. காரணம், சருமத்துக்கு ஆரோக்கியம் என்பதுடன், வயதான தோற்றத்தையும் தாமதப்படுத்தும் பண்பு இந்த கிழங்குக்கு உண்டு. முகப்பரு, கரும்புள்ளிகள் போன்ற தோல் பிரச்சினைகளுக்கு சிகிச்சை தருவதற்கும் இந்த கிழங்கு உதவுகிறது..
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications