கீரையில் பெஸ்ட் வல்லாரை.. ரத்தசோகையை விரட்டும் சூப்பர் பவுடர்.. இதுதான் முறை.. சருமம் மினுமினுக்கும்
சென்னை: வல்லாரை கீரைகளை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதே கிடையாது.. கண் பார்வையும் கூர்மையாகும். வல்லாரை பொடியை நாம் எப்படி தயாரிக்க வேண்டும் தெரியுமா?
வல்லாரை கீரையில் சுண்ணாம்புச்சத்து, உயிர்ச்சத்துகள், தாது உப்புக்கள் உள்ளன.. மூளையின் சிறப்பான செயல்பாட்டிற்கும், ஊட்டத்துக்கும் இந்த கீரைகள் உள்ளன. அனைத்து வகையான கீரைகளுமே இரும்புச்சத்து நிறைந்தவை என்றாலும், இந்த வல்லாரை கீரைகள், சற்று கூடுதலான இரும்பு சத்துக்களை கொண்டவை.

ரத்தசோகை: ரத்தசோகை பிரச்சனை இருந்தால், முருங்கைக்கீரையை போலவே சிறந்த தீர்வை தருவது இந்த வல்லாரை கீரையாகும்.. ரத்தத்தையும் சுத்திகரிக்க செய்கிறது..
அடிக்கடி வல்லாரை சாப்பிட்டு வருபவர்களுக்கு மாலைக்கண் நோய் ஏற்படவே வாய்ப்பிருக்காதாம்.. யானைக்கால் நோய் உள்ளவர்களுக்கும், கால் நரம்புகளை பாதிக்கும் பிரச்சினை உள்ளவர்களுக்கும் வல்லாரை கீரைதான் மருந்தாகின்றன..
மன அழுத்தம்: மனஅழுத்தத்தை விரட்டி புத்துணர்ச்சியை இந்த கீரை தருகிறது.. தோல் ஏற்படும் நமைச்சல், எரிச்சல், புண்களை விரட்டி, சருமத்தை பாதுகாத்து பளபளப்பை தரக்கூடியது. கால்சியம் அதிகம் நிறைந்துள்ளதால், பற்கள் சம்பந்தமான நோய்களை விரட்டி, ஈறுகளை பலப்படுத்துகிறது..
இந்த இலையை வெறுமனே மென்றுவிங்கினால், குடல் புண்களும், வாய்ப்புண்களும் ஆறிவிடும். வயிற்றிலிருக்கும் புழுக்களையும், குடலிலுள்ள கிருமிகளையும் வெளியேற்றுகிறது இந்த கீரைகள்.
காய்ச்சல் சமயத்தில் கைகொடுத்து உதவக்கூடியது இந்த வல்லாரை கீரைகள்தான். இந்த கீரையுடன் மிளகு, துளசி இலை சம அளவு எடுத்து, அரைத்து, மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்து கொண்டால், காய்ச்சல் சமயங்களில் உதவும். மாதவிடாய் நேரங்களில் இந்த கீரையின் சாற்றுடன் வெந்தயத்தை கலந்து சாப்பிட்டால் இடுப்பு வலிகள் உடனே நின்றுவிடும்.
வல்லாரை பொடி: கீரையாக இல்லாவிட்டாலும், பொடியாக கடைகளில் விற்கப்படுகிறது. இந்த பொடியை நாமும் வீட்டிலேயே தயார் செய்யலாம். 2 விதங்களில் இந்த பொடியை நாம் தயார் செய்யலாம். வல்லாரை கீரையை நிழலில் உலர்த்தி, பொடியாக்கி வைத்துக்கொண்டால், போதும்.
அல்லது, வல்லாரை இலையை கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஒரு மண்சட்டியில், ஒரு டம்ளர் பசும்பால், ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து, இந்த வல்லாரையும் சேர்க்க வேண்டும். பிறகு, மண்சட்டியை ஒரு வெள்ளைத்துணியை மூடி இறுக்க கட்டி, பானையிலுள்ள கீரையை, மிதமான தீவியில் ஆவியில் வேக வைத்து எடுக்க வேண்டும்.
மண்சட்டி: சட்டியிலுள்ள பாலிலேயே வல்லாரைகள் வெந்துவிடும். பிறகு, துணியை நீக்கிவிட்டு, வெந்த இலைகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆறவைத்து, வெயிலில் ஒருநாள் காயவைத்தால் இலைகள் நன்றாக காய்ந்துவிடும். இதனை இடித்து பொடி செய்து, சலித்து எடுத்து காற்று புகாமல் வைத்து கொள்ளலாம். இந்த வல்லாரை பொடி தரும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
இந்த பொடியில் பற்களை தேய்த்து வந்தால் பற்கள் பளிச்சென்றிருப்பதுடன், ஈறுகள் பலமடையும்.. காய்ச்சல் வந்தாலும், இந்த பொடி மருந்தாகும்.. மலச்சிக்கல் என்றாலும், சிறிது அதிமதுரம் பவுடரையும் சேர்த்து வெந்நீரில் குடித்தால் மலச்சிக்கல் நீங்கும்.
ரத்தசோகை: வயிற்றுப்புண்கள், வாய்ப்புண்கள் இருந்தால், இந்த பொடியை பாலில் கலந்து குடித்தால் நிவாரணம் கிடைக்கும். அல்லது சுடுசோறில் வல்லாரை பவுடர், உப்பு, நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டாலும் பலன் கிடைக்கும். வல்லாரை பொடியை, ஏதாவது ஒரு பானத்துடன் கலந்து குடித்து வரும்போது, ரத்தசோகை நோயும் தீர்ந்துவிடும்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications