சர்க்கரை நோயாளி "இதை" மட்டும் விட்றாதீங்க.. இனிக்க இனிக்க நன்மை.. நீரிழிவு நோயாளியின் சூப்பர் கஞ்சி
சென்னை: நீரிழிவு நோயை எந்நேரமும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு உணவுப்பழக்கத்தையும் நீரிழிவு நோயாளிகள் சரியாக கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது.
சர்க்கரை நோயாளிகளை பொறுத்தவரை, அதிக அளவு சிறுநீர் கழிப்பதும், உடல் சோர்வுகளும் இருக்கும்.. இதை சரிக்கட்ட சத்தான உணவுகளை சாப்பிட வேண்டி உள்ளது. ஆனால், எதை சாப்பிட்டாலும் சுகர் ஏறிவிடுவதாக ஒரு கலக்கம் இருக்கத்தான் செய்கிறது.

பருப்புகள்: எனினும், பருப்புகள், விதைகள், கீரைகளை தவிர்க்கவே கூடாது என்கிறார்கள்.. காரணம், பருப்புகளில் ல் கார்போஹைட்ரேட்டுகள் மிகவும் குறைவு, அத்துடன் நார்ச்சத்துக்களும் அதிகம்.. இந்த இரண்டுமே ரத்த சர்க்கரை அளவை அவ்வளவாக பாதிக்காது... மேலும், வைட்டமின்கள், கொழுப்புகள், புரதங்கள், இரும்புச்சத்துக்கள் என அனைத்துமே இவைகளில் கிடைத்துவிடுகிறது.
இனிப்பு சுவை கொண்ட கேரட், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லதாம்.. அதைவிட ஆச்சரியம், சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க இந்த கேரட் உதவுகிறதாம். இப்படி தித்திப்பு பொருட்களில் இன்னொரு ஆச்சரியத்தை தருவது இளநீர்.
இயற்கையாக கிடைக்கும் தித்திப்பு பானம் என்பதால், உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அத்தனை சத்துக்களும் இதில் உள்ளதாம்.. அதுமட்டுமல்ல, இதற்காகவே ஒரு ஆய்வும் நடத்தப்பட்டுள்ளது. அதில், சர்க்கரை நோயுள்ளவர்கள், சரியான அளவில் இளநீர் குடிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளுறுப்புகள்: இந்த இளநீர், உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படத்தி, ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்க செய்கிறது.. சிறுநீரக பிரச்சனை, மங்கலான பார்வை போன்ற கோளாறுகளையும் இந்த இளநீர் தீர்ப்பதாக சொல்கிறார்கள். அந்தவகையில், மருத்துவரின் ஆலோசனையை பெற்று, இளநீரை தினமும் 250 மில்லி குடித்து வந்தாலே உள்ளுறுப்புகளை பாதுகாக்கலாம் என்கிறார்கள்.
அதேபோல, அரிசி சோறு சாப்பிடுவதையும் பலர் தவிர்த்துவிடுவார்கள்.. ஆனால், சர்க்கரை நோயாளிகளுக்கென்றே வரப்பிரசாதமாக உள்ளது மூங்கில் அரிசியாகும். இந்த அரிசியில் காய்கறி சூப் போல செய்து சாப்பிட்டால், உடலுக்கு நன்மைகள் கூடும்.
எப்படி செய்வது: மூங்கில் அரிசியை சுத்தம் செய்து, அரை மணி நேரம் ஊற வைத்து, வழக்கமாக சோறு வடிப்பது போலவே, இதையும் வடித்து எடுத்து கொள்ள வேண்டும். வடித்த கஞ்சியை தனியாக எடுத்து கொள்ள வேண்டும்.
சூப்பர் கஞ்சி: இப்போது, ஒரு வாணலில், வெண்ணெய், பொடிப்பொடியாக நறுக்கிய பூண்டு, கேரட், பீன்ஸ், பட்டாணி, வெங்காயம், உப்பு தூள், மிளகுதூள் சேர்த்து வதக்க வேண்டும். இப்போது வடித்த கஞ்சியுடன், சிறிது தண்ணீரையும் சேர்த்து கொதிக்கவிட வேண்டும். காய்கறி பாதிவெந்தவுடமே, வடித்து வைத்த மூங்கில் அரிசியை இதில் கொட்டி, சிறிது நேரம் கொதித்ததும், கொத்தமல்லி தூவி இறக்கிவிடலாம். இது சர்க்கரை நோயாளிகளுக்கு பெஸ்ட் உணவு.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)












Click it and Unblock the Notifications