வெற்றிலை.. வெறும் நாலஞ்சு இலைகள் இருந்தால் மூலநோய் ஓடிப்போயிரும்.. ஆச்சரியம் காட்டும் வெற்றிலைகள்
சென்னை: வெறும் நான்கைந்து வெற்றிலை இருந்தாலே, ஏகப்பட்ட வலிகளுக்கு நிவாரணம் கிடைக்குமாம்.. அந்தவகையில், மூலநோய் வலிகள், வீக்கங்களுக்கு வெற்றிலையை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?
வெற்றிலைக்குள் வைட்டமின் சி, தயாமின், நியாசின், ரிபோஃப்ளேவின், கரோட்டின், கால்சியம், என ஏகப்பட்ட வைட்டமின்கள் நிறைந்து கிடக்கின்றன.. இதில் பிரதானமாக இருப்பது, கால்சியம், இரும்புச்சத்துக்கள்தான்,
வெறும் வெற்றிலை: வெற்றிலைகள், வெறும் ஜீரணத்துக்கு மட்டுமே பயன்படுத்துவது என்று பலரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.. உடலுக்கு வெப்பம் தரும் இந்த வெற்றிலையானது, தாய்ப்பால் சுரப்பியாகவும், வாய்நாற்றத்தையும் போக்க பயன்படுகிறது.

வெற்றிலை வயிற்றில் இருக்கும் வாயுவை வெளித்தள்ளும் தன்மை கொண்டது. மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தி ஆரோக்கியத்தை தரக்கூடியது...
நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுப்பதால் படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுத்துவர ஞாபக சக்தியை அதிகரிக்கும்... வெற்றிலை உடன் பாக்கு குறைவாகவும், சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும் சேர்த்து சாப்பிட்டால் பசி எடுக்காதவர்களுக்கு பசி எடுக்கும்...
வாயில் துர்நாற்றம்: வயிற்றுப்புண், வாய்ப்புண், வாயில் துர்நாற்றம் பிரச்னை உள்ளவர்கள், மாலையில் வெற்றிலை அதிகமாகவும், பாக்கு சுண்ணாம்பு குறைவாகவும் மென்றால் இந்த பிரச்சனைகள் குணமாகிவரும். ஆண்மை குறைபாடுகளையும் போக்க வேண்டுமானால், இந்த வெற்றிலையை அடிக்கடி மென்று சாப்பிட்டு வந்தாலே போதும்.. என்கிறார்கள். விறைப்பு பிரச்சனைக்கு இந்த வெற்றிலை தீர்வு தருகிறது. வெற்றிலையை இடித்து சாறு எடுத்து, தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் விறைப்பு பிரச்சனை சரியாகும்.
அதேபோல, மூல நோய் உள்ளவர்களுக்கும் இந்த வெற்றிலை உதவுகிறது.. அதாவது மூல நோயை கட்டுக்குள் கொண்டு வரவும், மலம் கழிப்பதில் வலி, ரத்தப்போக்கு ஏற்படுவதையும், இந்த வெற்றிலைகள் தீர்க்கின்றன. மேலும், குடல் சுருக்கம், வயிறு வலி போன்ற சிரமங்களும் தீர்கின்றன.
மூலநோய்: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் நான்கைந்து வெற்றிலைகளை சேர்த்து கொதிக்க விட்டு, சுண்ட காய்ச்சி எடுத்து கொள்ள வேண்டும்.. இந்த தண்ணீரை ஒருநாளைக்கு 2 வேளை குடித்து வந்தாலே, மூல நோய் கட்டுக்குள் வரும் என்கிறார்கள்..
நான்கைந்து வெற்றிலைகளை தண்ணீர் தெளித்து விழுதுபோல அரைத்து, ஆசனவாய் வீக்கத்தின் மீது தடவ வேண்டும். வெற்றியிலையில உள்ள குளிர்ச்சி சேருவதால், மூலத்தால் ஏற்பட்ட வீக்கம் எரிச்சல் தணியும்.. வலியும் குறையும். அதில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து சாறை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
எரிச்சல் வீக்கங்கள்: அல்லது வெற்றிலையை பச்சையாகவே மென்று சாப்பிடலாம்.. இதனால் மூல நோயின் தாக்கத்தால் ஆசன வாய்ப் பகுதியில் வலி, எரிச்சல், வீக்கங்கள் தணிய ஆரம்பிக்கும்.. வெற்றிலையில் இருக்கும் நார்ச்சத்தானது, செரிமானத்தை இலகுவாக்கி மலம் கழிப்பதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கி தருகிறது. வெற்றிலையை பாக்கு கலந்து சாப்பிடுவதை விட தனியாக சாப்பிட்டாலே நிறைய பலன்கள் கிடைக்கும்.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)












Click it and Unblock the Notifications