எலும்பு + ஒட்டி + இலை.. நொறுங்கிய எலும்புகளை இணைக்கும் அதிசய இலை..எலும்பொட்டி செடி.. இயற்கை அதிசயம்
சென்னை: எலும்பொட்டி இலை - பெயரிலேயே அடங்கியிருக்கிறது அர்த்தம்.. தூள் தூளாக உடைந்த எலும்பையும் ஒன்று சேர்க்கும் அற்புத செடிதான் இது.
இந்த செடியின் இலைகள் பார்ப்பதற்கு முருங்கைக்கீரையை போலவே இருக்கும்.. இதன் இலைகள், வேர்கள், காய்கள் எல்லாமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை. ஆனால், இதன் பலன்களை அறியாமல், சிலர் இதை வீடுகளிலும், கட்டிடங்களிலும் அழகுக்காக வளர்ப்பார்கள்.. இதற்கு காரணம், விலங்குகள் எதுவும் இந்த செடியை அண்டாது என்பதுதான்.

எலும்புகள்: ஆனால், இந்த செடியின் இலைகளுக்கு எலும்புகளை இணைக்கும் திறன் உண்டு என்று கண்டறியப்பட்டுள்ளது. காரணம், இந்த எலும்பொட்டி செடியில் கால்சியம் அதிகமாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்ததாம். அதனால், எலிகளுக்கு தந்து, அதன் எலும்பு முறிவை விரைவில் குணமாவதையும் கண்டறிந்துள்ளார்கள்.
எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இந்த இலைகள் திகழ்கின்றன.. குறிப்பாக, முதுகு தண்டு, முதுகு தண்டுபடம் பாதிப்புகளை நிவர்த்தி செய்யக்கூடியது. கை, கால், இடுப்பு எலும்புகளில் ஏற்படும் வீக்கங்களையும், வலிகளையும் குணமாக்கக்கூடியது.. எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில், இந்த இலையை அரைத்து வைத்துகட்டினாலே, விரைவில் குணமாகிவிடும்.
எலும்பு முறிவு: அடிவேருடன் கூடிய இந்த செடியை, சிறு துண்டுகளாக வெட்டி, தண்ணீர் விட்டு நன்றாக சுண்டகாய்ச்சி அதன் சாறு மட்டும் வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும். அந்த சாற்றில், தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணையில் கலந்து பாட்டிலில் எடுத்து வைத்து கொள்ளலாம். எலும்பு முறிவு ஏற்பட்டாலோ அல்லது முதுகு தண்டவடம் பாதிப்பு இருந்தாலோ, இதை தடவி கட்டு போட்டால் நிவாரணம் கிடைக்கும்.
எலும்பு முறிவுக்கு, இந்த இலைகளிலிருந்து காய்ச்சப்படும் எண்ணெய் சிறந்த பலனை தருகிறது.. இந்த எண்ணெய்யை பூசிவரும்போது, எலும்புகள் வெகுசீக்கிரத்திலேயே சேர்ந்துவிடுமாம். எலும்பு முறி தவிர, தோள்பட்டை வலி, குதி கால் வலி போன்றவற்றிற்கும், இந்த எண்ணெய்யை தடவினால், பலன் கிடைக்கும்.
இலைகள்: இந்த எலும்பொட்டி இலைகளை மருந்தாகவும் சாப்பிடலாம்.. இலைகளில் சாறு குடித்து வந்தால், முதுகு தண்டு காயங்கள், கிழிந்த சவ்வுகள் ஒன்றுசேரும்.. நரம்புகளும் பலம்பெறுமாம்.. அல்லது இந்த இலைகளை அரைத்து பாலில் கலந்தும் குடிக்கலாம். தொண்டை பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க இது பயன்படுகிறது. எனவே, இந்த இலைச்சாறை தேனில் குழைத்தும் சாப்பிடலாம்... இதனால், மார்புச்சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
எவ்வளவுதான், மருத்துவ குணங்கள் நிறைந்திருந்தாலும், உள்ளுக்குள் மருந்தாக எடுத்து கொள்ளும்போது டாக்டர்களின் முறையான ஆலோசனை அவசியம்.. மருத்துவர்களின் ஆலோசனையுடன் சாப்பிட்டால் ஆரோக்கியம் தழைக்கும்.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)












Click it and Unblock the Notifications