ஒல்லிக்குச்சி உடம்பு வேணுமா.. அப்ப இந்த 5 மேட்டரையும் மிஸ் பண்ணாதீங்க.. குட்டி குட்டி ஆச்சரிய டிப்ஸ்
சென்னை: உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு, பழங்களும், பச்சை காய்கறிகளும், கைகொடுத்து உதவுகின்றன என்றாலும், ஒருசில பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது, நல்ல பலன் கிடைக்கிறதாம். அந்தவகையில் ஒரு சில டிப்ஸ்களை பார்ப்போம்
- நீலநிற பழங்கள், காய்கறிகள் உடல் எடையை குறைக்க பேருதவி புரிகிறது.. குறிப்பாக, திராட்சை, நாவல்பழம், பிளம்ஸ்பழம், கத்தரிக்காய் இவைகள் புளூ கலர் பழங்களாகும்..

- வைட்டமின் C, மற்றும் நார்ச்சத்து நிறைந்தவை.. கெட்ட கொழுப்பை குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதுடன், செரிமானத்துக்கும் உதவி புரிகிறது..
நீலநிற காய்கறிகள்: இந்த பழங்களில் ஆன்டிஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளதால், ரத்த அழுத்தத்தை முறைப்படுத்துகிறது.. இதய நோய் வராமல் தடுக்கிறது.. எனவே, எடையை குறைக்க நினைப்பவர்கள், ப்ளூபெரி, கருப்பு திராட்சை, ஊதா நிற முட்டைகோஸ், கத்தரிக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ள வேண்டுமாம்.
- நிறைய தண்ணீர் குடித்தாலே, உடலிலுள்ள கழிவுகள் நீங்கி எடையும் குறைய துவங்கும்.. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்றாலும், அந்த தண்ணீரையும், சத்து நிறைந்த தண்ணீராக மாற்றி கொண்டால் இன்னும் சிறப்பு கிடைக்கும். குறிப்பாக, எலுமிச்சம் சாறு + இஞ்சி கலந்து தண்ணீர் குடிக்கலாம்..
பட்டை தூள்: அல்லது, பட்டையை தூள் செய்து தண்ணீரில் கலந்து குடிக்கலாம். அல்லது பெருஞ்சீரகத்தை தண்ணீரில் போட்டு ஊறவைத்து குடிக்கலாம். அல்லது சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்தும் குடிக்கலாம்.
- கொய்யாக்காயை தினமும் டயட்டில் சேர்த்து கொள்ளலாம்.. கொய்யா இலையில், புரோட்டீன்கள், வைட்டமின் B6, C, கொலைன், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் போன்ற சத்துக்கள் உள்ளதால், உடல் எடையை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. எனவே, கொய்யா இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, இந்த தண்ணீரை குடித்தால் கூடுதல் சிறப்பு
இலைகள்: கொய்யா இலையில் டீ போட்டும் குடிக்கலாம்.. ஆனால், இதில் சிறிது இஞ்சியையும் தட்டி சேர்த்து குடித்தால், உடல் எடை குறைய இன்னும் உறுதுணையாக இருக்கும்.. கெட்ட கொழுப்புகளும் கரைந்துவந்துவிடும். அல்லது கொய்யா இலையின் சாறு எடுத்து, அதனுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தாலும் உடல் எடை மெல்ல குறையும்.
- காலை எழுந்தவுடன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில், ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை கலந்து குடித்து வந்தாலும், அதிக பலன்கள் கிடைக்கும்.. ஆனால், இந்த பானத்தை குடித்த அடுத்த 30 நிமிடங்களுக்கு எதையும் சாப்பிட கூடாது.
வெந்தயம்: வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரை குடிக்கலாம்.. அல்லது சுக்குப்பொடியை சூடான நீரில் கலந்து குடிக்கலாம். வெறும் தண்ணீருக்கு பதிலாக இப்படியெல்லாம் மாற்றி எடுத்து கொள்ளும்போது, ஜீரண சக்தி அதிகரிக்கிறது.. உடல் கழிவுகள் நீங்குகிறது. அதிகப்படியான கொழுப்பை கரைக்க உதவுகிறது.. புத்துணர்ச்சி கிடைக்கிறது.
அல்லது, சுரைக்காயுடன் சிறிது புதினா இலைகள், இஞ்சி, மிளகு, சீரகம் தலா ஒரு ஸ்பூன் சேர்த்து மொத்தமாக அரைத்து கொள்ள வேண்டும்.. இதில், சிறிது எலுமிச்சை சாறு, கல் உப்பு சேர்த்து, வடிகட்டி குடித்தாலே போதும்..
- அதேபோல, ஒரு டம்ளர் நீரில், சிறிது குடம்புளியை ஊறவிட்டு, அதனுடன் 3 டம்ளர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.. இந்த நீரை ஒவ்வொரு வேளை உணவுக்கு முன்பும் குடித்து வந்தாலும் பலன் கிடைக்கும்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications