ஒரே இலை போதுமே.. சர்க்கரை நோயை அலறி அடித்து ஓடச்செய்யும் ஆச்சரிய இலைகள்.. அடடா, இது தெரியாம போச்சே
சென்னை: நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளதுதான் இன்சுலின் செடி.. இதன் பலன்கள் என்னென்ன தெரியுமா?
நம்முடைய உடலில் இன்சுலினை போல் செயல்பட்டு, சர்க்கரையை கட்டுப்படுத்துகிறதாம் இந்த செடி.. அதனால்தான் இதனை இன்சுலின் செடி என்றே அழைக்கிறார்களாம்.. செடியின் பெயரில் இன்சுலின் இருந்தாலும், இந்த செடியில் இன்சுலின் இல்லை என்பதுதான், கூடுதல் தகவல்.

ஊட்டச்சத்துக்கள்: புரதங்கள், ஆக்ஸிஜனேற்றிகள், அஸ்கார்பிக் அமிலம், இரும்புச்சத்து, டெர்பெனாய்டுகள், ஃபிளாவனாய்டுகள், பி-கரோட்டின், கார்சோலிக் அமிலம் போன்ற ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் இந்த இலைகளில் நிறைந்திருக்கின்றன.
சர்க்கரை நோயாளிகள் இந்த செடியின் 2 இலைகளை, வெறுமனே பச்சையாக மென்று சாப்பிட்டு வந்தாலே, சர்க்கரையின் அளவு வெகுவாக கட்டுப்படும்.. லேசான புளிப்பு சுவையுள்ள இந்த இலையானது, இனிப்பின் மீதான ஆர்வத்தையும் குறைத்துவிடுகிறது.. அத்துடன் சர்க்கரை நோயின் அபாயமும் குறைகிறது. சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கவும் முடிகிறது.
நொதிகள்: சர்க்கரையை கிளைகோஜனாக மாற்றும் சில நொதிகள் இந்த இலையில் நிறைந்துள்ளன. சர்க்கரை அதிகமாகிவிட்டாலே, கண்கள், நரம்புகள் போன்றவைகளின் பாதிப்புகள் அதிகமாகிவிடும்.. இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வாகின்றன இந்த இலைகள்.
குடல் பாதுகாப்புக்கு இந்த இலைகள் உதவுகின்றன.. வெறும் இலைகளை மென்று சாப்பிட முடியாவிட்டாலும், இலைகளை உலர்த்தி, அதை தூள் செய்து வைத்து கொண்டால், தினமும் ஒரு ஸ்பூன் அதிலிருந்து சாப்பிட்டு வரலாம்.அதனால்தான், பெரும்பாலானோர், இந்த செடியை வீட்டிலேயே வைத்து வளர்க்க ஆர்வம் காட்டுகிறார்கள்.
மாதவிடாய்: பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தால், இந்த இலைகளில் கஷாயம் வைத்து சாப்பிடலாம். இதனால், கர்ப்பப்பையிலுள்ள நீர்க்கட்டிகளுக்கும் கரைகின்றன. புரதச்சத்தும் இரும்புச் சத்தும் நிறைந்துள்ள இந்த இன்சுலின் இலைகள், சிறுநீரகத்தை ஆரோக்கிய வைத்திருக்க உதவுகிறது. அத்துடன் சிறுநீர்ப் பாதை தொற்று ஏற்படாமலும் பாதுகாக்கிறது.
இன்சுலின் இலைகள் சருமத்துக்கும் பாதுகாப்பை தருகின்றன.. முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் இருந்தால், இந்த இலைகளில் சாறு எடுத்து மருந்தாக பயன்படுத்தலாம்.. இன்சுலின் இலையிலிருந்து சாறு ஒரு ஸ்பூன், சிறிது எலுமிச்சைச் சாறு, தேன், கலந்து, முகப்பரு, கரும்புள்ளிகள் மீது தேய்த்தாலே நிவாரணம் கிடைக்குமாம்.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications