மளமளன்னு.. உடல் எடையை குறைச்சிடும் பொன்னாவரை கீரை.. பொன்னாவரை இலையின் ஸ்பெஷலே இதுதான்
சென்னை: உடல் எடையை குறைக்க ஒரு கீரை இருக்கிறதென்றால், அது இந்த பொன்னாவரை கீரை தான்.. உடல் கழிவுகளை நீக்கக்கூடிய அற்புத மூலிகை இதுவாகும்.
பொன்னாவரை கீரையானது, ஆவார வகையை சேர்ந்தது.. உடல் கழிவுகளை நீக்கி, உடலை பொன்னை போல பேணிக்காக்கக் கூடியது.. சிறு சிறு கிளைகளுடன் அடர்த்தியாக வளரும் செடி இதுவாகும்.. இதன் பூக்கள் மஞ்சள்கலரில் இருக்கும்.. இந்த காய்களில் விதைகள் இருக்கும்.. காய்கள் தட்டையாக இருக்கும். காய்கள் முற்றிவிட்டால், வெடித்து விதைகளாக சிதறும்..

உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவதில், இந்த கீரைக்கு பெரும்பங்கு உண்டு.. உடலிலுள்ள கழிவுகளையும், நச்சுக்களையும், குடல் புழுக்களையும், கெட்ட நீரையும் வெளியேற்றிவிடும்.. இதனால், உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களுக்கு பெரிதும் கைகொடுக்கிறது. வாரம் 2 முறையாவது சமைத்து சாப்பிட்டு வந்தாலே, ஊளைச்சதை குறைய துவங்கும்.
கீழாநெல்லி: உடற்கழிவுகளை வெளியேற்றுவதற்கென்றே நமக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதம் இந்த கீரை.. இதன் இலையுடன், அதன் விதைகளையும் சேர்த்து அரைத்து, வெந்நீரில் குடித்து, பேதி மருந்தாக பயன்படுத்துவார்கள்..இதனால், குடல் சுத்தமாகும். ரத்தத்தையும் சுத்திகரித்துவிடும். அதேபோல, மஞ்சள் காமாலை நோயை தீர்க்க, கீழாநெல்லி இலையை அரைக்கும்போது, இந்த பொன்னாவரை இலைகளையும் சேர்த்து அரைத்து தருவார்கள்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், அல்லது உடல் எடை குறைய வேண்டுமானால், இந்த கீரையை, மற்ற கீரைகளை போலவே கடைந்து சாப்பிடலாம். அதாவது, பொன்னாவரை கீரையுடன், பாசிப்பருப்பு சேர்த்து கூட்டு போல செய்து சாப்பிட்டால், 2, 3 முறை மலம் கழிப்பார்கள்.. இதனால், உடலிலுள்ள கெட்ட நீர், கழிவுகள் வெளியேறிவிடும்.
பொன்னாவரை: அதேபோல, சூப் போல செய்தும் சாப்பிடலாம்.. இந்த பொன்னாவரை கீரையை கழுவி சுத்தம் செய்து, சின்ன வெங்காயம், உப்பு, மிளகுசீரகத்தூள் சேர்த்து சூப் போல குடிக்கலாம்.. ஆனால், இந்த சூப் குடித்தால், 1 மணி நேரத்துக்கு வேறு எதுவும் சாப்பிடக்கூடாது.
அதேபோல, இந்த கீரையை எப்படி சாப்பிட்டாலும் வாரம் ஒருமுறை மட்டுமே சாப்பிட வேண்டுமாம்.. கர்ப்பிணிகள், குடல் புண், குடல் அழற்சி இருப்பவர்கள் இந்த கீரையை சாப்பிடவே கூடாதாம். சரும பாதுகாப்புக்கு இந்த இலை மிகவும் நல்லது.. தோலில் சொறி சிரங்கு, அலர்ஜி எதுவானாலும், இந்த இலைகளுடன் சிறிது மஞ்சளையும் அரைத்து பூசி வந்தால், புண்கள் ஆறிவிடும்.
குளிர்ந்த நீர்: இந்த கீரையை நன்றாக சுத்தம் செய்து அலசி, தண்ணீர் ஊற்றி சுண்ட காய்ச்சி ஆற வைத்து, தினமும் 2 வேளை குடித்து வந்தால், ஹிஸ்டிரியா போன்ற மனநல பாதிப்புகள் நீங்கிவிடும்.. உடல் அசதியாக இருப்பவர்கள், பொன்னாவரை விதைகளை அரைத்து சாப்பிட்டு குளிர்ந்த நீர் குடித்தாலே போதுமாம்.. பலன் கிடைக்கும் என்கிறார்கள்.
அதேபோல, பொன்னாவரை பூக்களும், சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.. இந்த பொன்னாவரையில் சூரணம், மாத்திரைகள் என கடைகளில் கிடைக்கின்றன.. ஆனால் இவைகளையெல்லாம் மருத்துவர் உதவியுடன் மட்டுமே சாப்பிட வேண்டும்.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications