தம்மாதுண்டு சுண்டைக்காய்.. பெரிய பெரிய நோயை அசால்ட்டா ஓட்டுதே.. சுண்டைக்காய் இலை? இது தெரியாம போச்சே

Subscribe to Oneindia Tamil

சென்னை: உடலில் ஏற்படும் வீக்கங்களுக்கும், குடல் பாதுகாப்புக்கும் பெருத்த நன்மையை தரக்கூடியது சுண்டைக்காய்கள்.. அதனால்தான், சித்த மருத்துவத்தில், சுண்டைக்காய்களுக்கு எப்போதுமே முக்கியத்துவம் சற்று அதிகமாகவே உள்ளது.

இரும்புச்சத்து, பொட்டாசியம், நார்ச்சத்து, புரதம், மாங்கனீஸ் என பல சத்துக்களை உள்ளடக்கியது சுண்டைக்காய்,.. மூலநோய் உள்ளவர்களும், பக்கவாதம் பாதிக்கப்பட்டவர்களும், நீரிழிவு நோயாளிகளும், அஜீரணம் பிரச்சனை இருப்பவர்களும், ரத்த அழுத்தம் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பவர்களும், இந்த சுண்டைக்காயை உணவில் அதிகம் சேர்த்து கொண்டு வரவேண்டும்.

Do you know the Excellent Benefits of Sundakkai and Turkey Berry is the Good for Children

சர்க்கரை நோயாளிகள்: இதனால், சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தச்சர்க்கரை கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.. சுண்டைக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள், இன்சுலின் உற்பத்தியையும், குளுக்கோஸ் உறிஞ்சுதலையும் கட்டுப்படுத்துகிறது. ரத்த சர்க்கரை அளவு உடனே ஏறாமல் தடுக்கப்படுகிறது.

பச்சை சுண்டைக்காயை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால், மூலத்தின் கடுப்பு, ரத்தக் கசிவும் நீங்கும்.. செரிமான பிரச்சனைகள் ஏற்படாது.. வயிற்றிலுள்ள புழுக்களும் வெளியேறும்.. வயிற்றுவலி, உப்புசம், ஏப்பம், போன்ற உபாதைகள் தீரும். இதனால், உடலில் நச்சுக்கிருமிகளும் வர வாய்ப்பில்லை..

இதயநோய்: ரத்தக்குழாயில் கொழுப்பை படியவிடாமல் தடுக்கும் சக்தி இந்த சுண்டைக்காய்களுக்கு உண்டு. ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்களை அதிகரிக்கும். ஆஸ்துமாவை நெருங்காமல் காக்கும் சக்தி இந்த சுண்டைக்காய்களுக்கு உண்டு.. இளம்தாய்மார்கள், நிறைய பூண்டு சேர்த்து சுண்டைக்காய் சமைத்து சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் சுரக்கும்.

இதயத்துக்கு பாதுகாப்பை தருகிறது இந்த சுண்டைக்காய்கள். அத்துடன், இதயத் தசைகளை தளர்வாக்கி இதய துடிப்பை சீராக வைத்திருக்க உதவுகிறது.. மேலும், இதய திசுக்களுக்கு தடையில்லாமல் ஆக்சிஜனையும், ரத்தத்தையும் பம்ப் செய்து கொண்டுசெல்லும் பணியை, சுண்டைக்காயிலுள்ள அமினோ அமிலங்கள் செய்கின்றன. இதனால், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாயங்கள் நீங்குகின்றன.

ஈறுகள்: சுண்டைக்காயில் ரிபோஃபுளோவின் மற்றும் தயமின் நிறைந்துள்ளதால், வாய்ப்புண்களை குணமாக்குவதுடன், சொத்தைப் பற்கள் உருவாவதை தடுத்து, ஈறுகளுக்கு பலம் தருகிறது.

குழந்தைகளுக்கு பச்சை சுண்டைக்காயை சமைத்து தரும்போது, உடல் பலம்பெறுவதுடன், எலும்பு வளர்ச்சியும் அதிகரிக்கும். மேலும், வயிற்றில் பூச்சிகளால் ஏற்படும் வலி, மலச்சிக்கல் போன்றவை வராமலும் தடுக்க முடியும்..

"சுண்டை வற்றல் சூரணம்" என்றே இப்போதெல்லாம் கிடைக்கிறது.. இந்த சூரணத்தை மோரில் கலந்து குடித்து வந்தால் குடல் வயிறு பகுதிகள் சுத்தமாகும்.. ரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தக்கூடியது இந்த சுண்டைக்காய். பச்சை சுண்டைக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் எலும்புகள் பலப்படும்..

இலைகள்: சுண்டைக்காய் செடியின் இலைகளிலும் பல நன்மைகள் உண்டு. வயிறு புண்கள் இருந்தால், சுண்டைக்காய் இலையை சாறு தருவார்கள்.. தலைவலி இருந்தால், சுண்டைக்காய் பழத்தை, அரைத்து நெற்றியில் பற்றுபோடுவார்கள். உடலில் வீக்கங்கள் ஏதாவது இருந்தால், இந்த சுண்டைக்காய் இலைகளை விளக்கெண்ணெய்யில் வதக்கி, வீக்கங்கள் மீது கட்டினால் நிவாரணம் கிடைக்கும்...

குடல் பகுதிகளிலுள்ள மொத்த நச்சுக்களையும், கழிவுகளையும் அழிக்கும் அற்றல் இந்த இலைகளுக்கும் உள்ளது.. இரும்பு சத்து அதிகம் என்பதால், ரத்த சோகை உள்ளவர்கள் சுண்டைக்காய் இலைகளை அடிக்கடி உணர்வில் சேர்த்து கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+