பொன்னாங்கண்ணி பூத்து வந்ததோ.. நீங்க கண்ணாடியே போடவேணாம்.. பொன்னாங்கண்ணி கீரையே போதும்..கீரையின் ராஜா
சென்னை: கீரைகள் என்றாலே உடலுக்கு நல்லதுதான்.. அந்த "கீரைகளுக்கெல்லாம் ராஜா" என்று சொல்லப்படுவதுதான் இந்த பொன்னாங்கண்ணி. இந்த கீரையை சாப்பிடுபவர்களுக்கு, கண் தொடர்பான பிரச்சனையே வராது. எந்தவகையில் இந்த கீரையை உபயோகப்படுத்தலாம் தெரியுமா?
பொன் போன்ற சருமம் மின்னிட இந்த பொன்னாங்கண்ணி கீரையே போதும் என்பார்கள்.. அதாவது, பொன்+ஆம்+காண் +நீ = பொன்னாங்கண்ணி. அந்த அளவுக்கு உடலில் மினுமினுப்பை கூட்டுவதற்கு இந்த கீரை உபயோகமாக உள்ளது..
சரும பொலிவு: பாசிபருப்புடன் சேர்த்து இந்த கீரையை சாப்பிட்டு வந்தால், சரும பொலிவு கிடைக்கும். சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது தடுக்கப்படும், அழகு மேம்படும். இந்த பொன்னாங்கண்ணி கீரையின் பயன்கள் அபரிமிதமானவை.. காச நோய், இருமல், வெப்ப நோய்கள், வாத நோய்கள் போன்றவற்றை குணமாக, இந்த கீரை பெரிதும் உதவுகிறது.

இந்த கீரையில் உள்ள ஸ்பெஷலாட்டி என்னவென்றால், உடல் எடையை குறைக்கவும், உடல் எடையை கூட்டவும் இந்த ஒரே கீரை பயன்படுகிறது. அதாவது, எடை குறைவாக இருப்பவர்கள் ஆரோக்கியமான முறையில் எடை அதிகரிக்க விரும்பினால் பொன்னாங்கண்ணி இலையை துவரம் பருப்பு உடன் நெய் சேர்த்து பிசைந்து கொடுத்தால் உடல் எடை ஆரோக்கியமாக அதிகரிக்கும்.. ஆனால், இந்த கீரையில் உப்பு மற்றும் மிளகு சேர்த்து சமைத்து சாப்பிட்டால், உடல் எடையை குறைக்க உதவுமாம்.
தலைமுடி உதிர்தல்: தலைமுடி உதிர்வு அதிகமாக இருந்தாலோ, அல்லது தலைமுடி வளர்ச்சி பெற வேண்டுமானாலோ, இந்த கீரையை உபயோகிப்பார்கள்.. இந்த கீரையின் சாறுஎடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்ச வேண்டும். மெழுகு பதம் வரும்வரை கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும்.. பிறகு அதை வடிகட்டி எடுத்துவைத்து கொண்டு, தலையில் தேய்த்து குளித்து வந்தாலே போதும், தலைமுடி உதிர்வது உடனடியாக நிற்கும்.. உடல் சூடு தணியும்.. கண்களிலுள்ள புகைச்சல் தணியும்.
இப்படி பல நன்மைகளை தந்தாலும், வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்திருக்கும் இந்த கீரை, கண்களுக்கு அதிக பயன்களை தருகிறது.. இந்த கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வந்தாலே, கண்கள் தொடர்பான கோளாறுகள் நீங்கும்.
பார்வை தெளிவு: அதேபோல, இந்த கீரையை நெய்யில் வறுத்து வெள்ளை துணியில் வைத்து கண்களில் வைத்து கட்டினால், கண் பார்வை தெளிவுபெறும்.. இந்த இலையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யை உச்சந்தலையில் தேய்த்து குளித்தால், கண்கள் பொலிவுபெறும்..
அதேபோல, கண் கோளாறுகளை நீக்குவதற்கென்றே, பிரத்யேகமாக கீரை மசியல் செய்து சாப்பிடலாம்.. ஒரு வாணலியில் எண்ணெய், கடுகு, காய்ந்த மிளகாய், வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு, நறுக்கிய கீரையை போட்டு வதக்கி சாப்பிட வேண்டும். முக்கியமாக 27 நாட்கள் சாப்பிட்டு வந்தாலே, கண் பார்வை தெளிவு பெறும். கண் இமை வீக்கம் குணமாகும்... விழித்திரை நோய், கண் எரிச்சல், கண் மங்குதல், கண் வலி ஒற்றை தலைவலி பிரச்சனைகள் நீங்கும்.
நலன்தரும் கீரை: மாலை கண் நோய்க்கு, இதே கீரையை வெண்ணெய்யுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் தீர்வு கிடைக்கும். எந்தவகையிலாவது, இந்த கீரையை உணவில் சேர்த்து கொண்டால், பகலில் கூட நட்சத்திரங்களை பார்க்கலாம் என்பார்கள்..












Click it and Unblock the Notifications