ஆவாரம் பூ.. அதிசய பூ.. ஆவாரையில் டீ போட்டு குடிச்சு பாருங்க.. பெண்களின் வரப்பிரசாதம் ஆவாரம் பூக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பலவித நன்மைகளை வாரி வாரி தரும் ஆவாரம் பூக்கள், பெண்களுக்கு எந்த வகையான மருத்துவ நன்மைகளை தருகிறது தெரியுமா?

குளிர்ச்சி நிறைந்த ஆவாரம் பூக்கள், உஷ்ணத்தினால் ஏற்படும் சிறு கட்டிகள் முதல் மூல நோய்வரை அனைத்துக்கும் தீர்வாகிறது.. ஆவாரம்பூக்களை உலரவைத்து பொடி செய்து, சிறிது நீர் விட்டு குழைத்து, புருவத்தின் மீது பூசி வந்தால், உடல் சூட்டினால் ஏற்படும் கோளாறுகள் நீங்கும்..

Do you know the Excellent Health Benefits of Aavarai Flower and Avaram Pookkal Tea is the Best for Women

கண் உஷ்ணம்: அத்துடன் கண் தொடர்பான அத்தனை நோய்களும் விலகும்.. முக்கியமாக, கண் சிவந்து போவது சரியாகும்.. இந்த பூக்களை கண்களின் மீது கட்டிவைத்தால், கண் நோய்களும் விலகும்.. கண் வீக்கமும் குறையும்.,.. கண்களில் உள்ள கட்டிகளும் அகலும்.

இதே ஆவாரம் பூவின் பவுடருடன், சிறிது நெய் கலந்து, காலை, மாலை சாப்பிட்டுவந்தால், மூலநோய் குணமாகும்... குடற்புண், வயிற்றுப்புண், ஆசன வாய் அரிப்பு, ஆசன வாய் எரிச்சல், மூல நோய் எரிச்சல் என பல்வேறு உஷ்ண கோளாறுகளை இந்த பூக்கள் போக்குகின்றன..

பொடி: இந்த பொடியை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், உடம்பெல்லாம் பொலிவு பெறும்.. ஜொலி ஜொலிப்பு கிடைக்கும். ஆவாரம் பூக்களை வெறும் தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தாலே, கடும் காய்ச்சலும் விலகி ஓடிவிடும். உடலிலுள்ள தேவையற்ற கழிவுகளும் நீங்கிவிடும்.

ஆனால், பெண்களுக்கு இந்த ஆவாரம் பூக்கள் எந்தெந்த வழிகளில் மருந்தாகிறது தெரியுமா? வெள்ளைப்படுதல் பிரச்சனை இருந்தால், ஆவாரம் பூக்களை தண்ணீர் கொதிக்க வைத்து குடித்தாலே போதும்.. கருப்பை ஆரோக்கியம் சிறக்கும்.. நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருக்கும்.

நீர்க்கடுப்பு: இந்த தண்ணீர் உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்பையும் குறைக்க உதவுவதாக, ஆய்வுகள் சொல்கின்றன.. உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, போன்றவையும் இதனால் விலகும்.

ஆவாரம்பூக்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.. இது உலர்ந்த பூக்களாகவும் கிடைக்கும். அல்லது ஆவார பூ பவுடராகவும் கிடைக்கும். இந்த பவுடரில் சூப் போல வைத்து குடிக்கலாம்..ஆவாரம் பூக்களை வெயிலில் காய வைத்து, அதை பவுடராக அரைத்து சலித்து வைத்து கொள்ள வேண்டும்.

மாதவிடாய்: இந்த பவுடரை வெந்நீரில் கலந்து குடித்தால், அளவுக்கு அதிகமான உதிரப்போக்கு, அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தாலும் நின்றுவிடும்.. அல்லது ஆவாரம் பூக்களில் டீ தயாரித்தும் குடிக்கலாம்.

ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஆவாரம் பூக்களை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.. இதை வடிகட்டி தேன் கலந்து குடிக்கலாம்.. ஒருவேளை, நீரிழிவு நோயாளிகளாக இருந்தால், தேன் கலக்காமல் அப்படியே குடிக்க வேண்டும்.

ஆவாரம் பூக்கள் டீ: இதில் இன்னொரு வகையான டீ தயாரித்தும் குடிக்கலாம். இதற்கு ஆவாரை இலைகளை காயவைத்து, கொரகொரப்பாக இடித்து வைத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, இடித்து வைத்திருக்கும் பவுடரில் 2 கிராம் சேர்க்க வேண்டும். பிறகு, ஏலக்காய், ஒரு சிறிய துண்டு சுக்கு, சிறிது கொத்தமல்லி கலந்து கொதிக்க விட வேண்டும். இதை வடிகட்டி குடித்தால் கூடுதல் பலன் கிடைக்கும்.

ஆவாரம் பூக்கள் பெண்களின் கருப்பை கோளாறுகளை போக்குகிறது.. கருப்பட்டியுடன் ஆவாரை‌ பூக்களை சேர்த்து சாப்பிட்டு வந்தால், பெ‌ண்களு‌க்கு மல‌ட்டு‌த்த‌ன்மை ‌நீ‌ங்கு‌ம் என்பார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+