Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொட்டைக் கரந்தை.. மூலம் முதல் இளநரை வரை அடியோடு விரட்டும் கொட்டைக்கரந்தை..ஆச்சரிய பலன் கொட்டை கரந்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கண்பார்வை கூர்மையடைவது முதல் இளநரையை போக்குவது வரை உதவக்கூடிய மூலிகைதான் கொட்டை கரந்தை.. இதை எப்படி பயன்படுத்த வேண்டும்? இதன் பலன்கள் என்னென்ன தெரியும்?

நெல் அறுவடைக்கு பிறகு, வயல்களில் முளைக்கும் செடிதான் இந்த கொட்டைகரந்தை.. இதன் பூக்கள் பார்ப்பதற்கு மொட்டை தலை போலவே இருப்பதால், மொட்டை கரந்தை என்பார்கள்.

Do you know the Excellent Health Benefits of Kottai Karanthai and Kottaikaranthai Leaves are the Best for Piles Patients

கொட்டைக்கரந்தை: பூக்காத அல்லது பூக்க ஆரம்பித்துள்ள கொட்டைக்கரந்தை செடியின் இலைகளில்தான் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ஏராளமான வேதிச்சத்துக்கள் அடங்கியிருக்கிறதாம்.

அந்த வேதிச்சத்துக்கள் பெயர் என்னென்ன தெரியுமா? மெத்தில் சேவிகால், ஆல்பா அயனோன், டிகாடினின், மெத்தாக்சி சின்னமால்டிகைடு, ஸ்பேரான்திம், ஸ்பேரான்தனோலாய்டு, பீட்டா சைட்டோஸ்டீரால், ஸ்டிக்மா ஸ்டீரால், யுடெஸ்மோனலைடு, கிரிப்டோ மெரிடியால் போன்ற சத்துக்கள்தான், நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்க காரணமாக இந்த கொட்டைக்கரந்தையில் இருக்கிறதாம்.

நோய் எதிர்ப்பு: பூவிடாத நிலையிலுள்ள கொட்டக்கரந்தை செடியை பிடுங்கி நிழலில் உலர்த்தி பவுடர் செய்து வைத்து கொண்டு, தினமும் 1 முதல் 2 கிராம் தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்..

இந்த செடியின் இலைகளில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் வேதிச்சத்துக்கள் அபரிமிதமாக அடங்கியுள்ளன. அதனால், நம்முடைய உடலில் நோய்கள், தொற்றுகள் பாதிப்புகளை கட்டுப்படுத்தி, உடல் உறுப்புகளுக்கு வலிமை தரக்கூடியதுதான் இந்த கொட்டை கரந்தை.

மலச்சிக்கல்: மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த கொட்டைக்கரந்தை சிறந்த தீர்வை தருகிறது.. இருமல், சளி, நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், ஆஸ்துமா, மூச்சிறைப்பு, வாந்தி போன்ற பிரச்சனைகளுக்கு இந்த கொட்டை கரந்தை மருந்தாக பயன்படுகிறது.

அதேபோல, இந்த பொடியில் 5 கிராம் எடுத்து, சிறிது கற்கண்டு பொடியுடன் கலந்து சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை தீரும். அல்லது கொட்டைக்கரந்தையின் இலைகளை காயவைத்து, பவுடராக்கி வைத்து கொள்ள வேண்டும். இதிலிருந்து ஒரு ஸ்பூன் அளவு, வெந்நீரில் தினமும் 3 வேளைகள், 10 நாட்களுக்கு குடித்து வந்தால், வெள்ளைப்படுதல் தொந்தரவு நீங்கும்.

விதைகள்: இந்த செடியை போலவே, இந்த செடியின் பட்டைகளிலும் மருத்துவ நன்மைகள் உள்ளன.. இதன் பட்டையை அரைத்து, மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோய்கள் குணமாகும்.. இந்த செடியின் விதைகளும், வேர்களும் பசியை தூண்டுவதுடன், குடல் புழுக்களையும் கொல்லும் திறன் படைத்தது. இந்த விதைகளை உலர்த்தி, தூள் செய்து, ஒரு 1ஸ்பூன் தேனில் குழைத்துச் சாப்பிட்டாலே, குடல் புழுக்கள் வெளியேறிவிடும்.

தலையில் இளநரை பிரச்சனை இருப்பவர்கள், கரிசலாங்கண்ணி இலையை பொடி செய்து கொண்டு, அதனுடன் இந்த கொட்டைக்கரந்தை பொடியையும் சம அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்ட வந்தால், இள நரை தீரும்...

கருமை நிறம்: கொட்டைக்கரந்தை இலையிலிருந்து தலைமுடிக்கு எண்ணெய் அல்லது தைலம் தயாரிக்கப்படுகிறது.. முடிவளர்ச்சிக்கும், முடியை கருமை திறமாக வைத்திருப்பதற்கும் இந்த கொட்டைக் கரந்தை தைலம் பேருதவி செய்கிறது. கொட்டைக்கரந்தை இலைச்சாறு, தேங்காய் எண்ணெய், இரண்டையும் சமமாக எடுத்து காய்ச்சி வடிகட்டு எடுத்து வைத்து கொள்ள வேண்டும். இந்த எண்ணெய்யை தலைக்கு தேய்த்து வரும்போது, தலைமுடி உதிர்வது நின்றுவிடும். தலைமுடி வலுப்பெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+