குன்றிமணி இலை.. தலைமுடி வளர்ச்சி முதல் நரம்பு கோளாறுவரை தீர்க்கும் குன்றிமணி விதைகள்.. அட்டகாச நன்மை
சென்னை: குன்றிமணி இலைகளாகட்டும், குன்றிமணி வேர்களாகட்டும், குன்றிமணி விதைகளாகட்டும், மொத்தமும் மருத்துவ பயன்களை கொண்டது.. அந்தவகையில், குன்றிமணியின் நன்மைகளை பார்ப்போம்.
பழங்காலங்களிந்தே குன்றிமணியை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அந்த காலத்தில் தங்கத்தை எடைபோட வேண்டுமானால், குன்றிமணிகளை வைத்துதான் எடை போடுவார்களாம். 2 குன்றிமணிகள் என்பது ஒரு கிராம் என்பது அளவாகும்.. அதனால் எவ்வளவுதான் விலைஉயர்ந்த நகைகளை கழுத்தில் அணிந்திருந்தாலும், ஒன்றிரண்டு குன்றிமணிகளையாவது அந்த செயின்களில் கோர்த்திருப்பார்களாம்.

சாமி சிலைகள்: சாமி சிலைகள் செய்தாலும், அந்த சிலைகளின் கண்களுக்கு குன்றிமணிகளைதான் வைப்பார்கள். அதேபோல, வீடுகளில் பல்லாங்குழி, தாயக்கட்டை விளையாடினால், அதற்கும் இந்த குன்றிமணிகளை வைத்து விளையாடுவார்களாம். மணிச்சிகை, பவளக் குன்றி என்றெல்லாம் நிறைய பெயர்கள் இந்த குன்றிமணிகளுக்கு உண்டு..
இப்போதெல்லாம் குன்றிமணி மரங்களை அவ்வளவாக பார்க்க முடிவதில்லை.. இந்த குன்றிமணி மரத்தின் விதைகளும், இலைகளும், பழங்களும் பட்டைகளும் மருத்துவ சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இலைகள்: இதன் மரத்தின் இலைகள் நுரையீரலுக்கு நல்லது.. இருமல், சளி பிரச்சனைகள் இருந்தால், குன்றிமணி இலைகளை கஷாயம் போல வைத்து குடித்தால் நிவாரணம் கிடைக்கும். குன்றிமணி இலைகளை சுத்தப்படுத்தி கழுவி, நீரில் போட்டு சுண்ட காய்ச்சி, ஆறவைத்து குடித்துவந்தால் உடல்வலி தீரும்.. வயிற்றுப்புண்கள், குடல் புண்கள் ஆறும். சிலர் இந்த கீரையை, மற்ற கீரைகளை போலவே சமைத்து சாப்பிடுவார்கள். இதனால், அஜீரணம் நீங்கி, உடலுக்கு வலு சேர்க்கும்..
இந்த இலைகளிலிருந்து சாறு எடுத்து எண்ணெய் தயாரிப்பார்கள்.. இந்த எண்ணெய்யை வீக்கங்கள் மீது தடவினால், தீர்வு கிடைக்கும். இந்த எண்ணெய் கல்லீரல் வியாதிகளையும், பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் தீர்க்க உதவுகிறது. சிலர் இந்த எண்ணெய்யை உணவிலும் சேர்த்து கொள்வார்கள்.. இதனால், ரத்தத்தில் உள்ள நச்சுக்கொழுப்புகள் கரைந்து வெளியேறிவிடும்.
விதைகள்: குன்றிமணியை விதைகளுடன், வெந்தயத்தையும் பொடி செய்து, நல்லெண்ணெய்யில் ஊறவைக்க வேண்டும். ஒருவாரம் நன்றாக ஊறியபிறகு இந்த எண்ணெய்யை தலைக்கு தேய்த்து வந்தால் தலைமுடி அடர்த்தியாக வளரும் என்பார்கள். அல்லது குன்றிமணி, வெந்தயம் இரண்டையுமே தூள் செய்து, தேங்காய் எண்ணெய்யில் ஊற வைத்து, ஒரு வாரம் நிழலில் வைத்திருந்து, அதற்குபிறகு தலைக்கு தேய்த்து வரலாம்.
இந்த குன்றிமணியின் வேர்கள், நரம்பு பிரச்சனைகளை சரி செய்யக்கூடியது.. அரிப்பு, நமைச்சல், எரிச்சல் போன்ற சரும பிரச்சனைகளுக்கு இந்த வேர்கள் மருந்தாகின்றன..
மருத்துவர் ஆலோசனை: இந்த மரத்தின் பட்டைகளும் மருந்தாகின்றன.. வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் இருந்தால், இந்த பட்டையை தூள் செய்து காய்ச்சி குடிப்பார்கள்.. இப்படி எவ்வளவுதான், பல நன்மைகளை குன்றிமணி தந்தாலும், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரிலேயே இவைகளை மருந்தாக எடுத்து கொண்டால், ஆரோக்கியம் தழைக்கும்.












Click it and Unblock the Notifications