இறால் மீன்.. உச்சி முதல் பாதம் வரை அற்புதம்.. இறால் மீன்களை "அந்த" நேரத்தில் சாப்பிட கூடாதாமே.. வாவ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இறால் மீன்களை சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன? எந்தெந்த குறைகளை போக்க, இறால் மீன்கள் தூண்டுகோலாகின்றன?

இறால் மீனில் புரோட்டீன், வைட்டமின் D, கால்சியம், பொட்டாசியம். ஒமேகா 3 என அதிகம் நிறைந்துள்ளதால், இதில், இந்த கொழுப்பமிலம் அதிகம் என்றாலும், எந்தவித பாதிப்பையும் நமக்கு ஏற்படுத்தாது..

Do you know the Excellent Health Benefits of Prawn and Prawns are the Best for Weight Loss

இறால் மீன்கள்: இதனால், இதயத்துக்கு ஆரோக்கியம் மட்டுமே கிடைக்கும்.. அதனால்தான், உடல் எடை குறைய முயற்சிப்பவர்களும், இந்த மீனை கட்டாயம் சாப்பிடுவார்கள். இதற்கு இன்னொரு காரணம் கார்போஹைட்ரேட் இந்த மீனில் கிடையாது.

அனீமியா பிரச்சனை உள்ளவர்களுக்கு, இரும்புச்சத்து நிறைந்த இறால் மீன்கள் கை கொடுத்து உதவுகின்றன.. இதிலிருக்கும் கூடுதல் இரும்புச்சத்து உடம்பில் ஏறும்போது, தசைகளுக்கு கூடுதல் அளவிலான ஆக்ஸிஜன்கள் செல்லும்.. அதேபோல, கனிமச்சத்து இறாலில் அதிகம் என்பதால், ஹீமோகுளோபினில் ஆக்ஸிஜன் கலக்கும் செயலில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த கனிமம்.

மூளை அணுக்கள்: இறால் மீனை வளரும் பிள்ளைகளுக்கு தந்து வந்தால், ஞாபக சக்தியை பெருக்க செய்யும்.. அஸ்டக்ஸாந்த் இந்த இறாலில் நிறைய உள்ளதுதான், இந்த ஞாபக சக்திக்கு அடிப்படையான காரணமாகும்.. மூளை அணுக்கள் உயிருடன் இருக்கவும், மூளை அழற்சி நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கவும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.. இறால்களில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால், கண் பார்வை சிதைவிலிருந்து நம்மை காக்கிறது..

இறால் மீன்களில் கால்சியம் அதிகமாக இருப்பதால், எலும்புகளை உறுதிப்படுத்துகிறது.. எலும்பு சிதைவினையும் தடுத்து நிறுத்துகிறது.. வாரம் ஒருமுறை இறாலை உணவில் சேர்த்து வந்தால், எலும்பு கோளாறுகள் அத்தனையும் நீங்கும். அவை பல வகை புற்றுநோய்களில் இருந்து காப்பதுடன், நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராக போராடும்.

கர்ப்பிணிகள்: கர்ப்பிணிகளுக்கு இறால் மீன்கள் மிகவும் நல்லது.. காரணம், இதில், அயோடின் நிறைந்திருப்பதால், உடலில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்க உதவி புரிகின்றன.. இந்த ஹார்மோன்கள் குழந்தை பருவத்திலும், கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும், மூளையின் வளர்ச்சிக்காகவும் தேவைப்படுகிறது.

தலைமுடி வளர்ச்சி பெரிதாக இல்லாதவர்கள் இறால் மீன்களை சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.. இறாலிலிருக்கும் கனிமங்கள் முடி வளர்ச்சி மற்றும் தசை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல, சருமமும் பொலிவு பெறும்.. சரும சுருக்கங்களை போக்குவதில் மிக முக்கியமான பங்கு உண்டு.

இறால் மீன்கள்: பல கடல்வாழ் உயிரினங்கள் போலவே, இந்த இறால் மீன்களும் மழைக்காலங்களில்தான் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.. இந்த இனப்பெருக்க காலத்தில்தான் இவை அதிகமாக குஞ்சுகளை பொறிக்கின்றன.. அதனால்தான், மீன்பிடி தடைக்காலம் கடைப்பிடிக்கப்படுகிறது..

இந்த காலக்கட்டத்தில், பிறந்த குஞ்சுகள் வளர்கின்றன.. இந்த குஞ்சுகளை வளரவிட்டால்தான், நமக்கு கடல் உணவுகள் தடையின்றி கிடைக்கும். ஆனால், இனப்பெருக்க காலங்களிலேயே அவற்றை பிடிக்க நேர்ந்தால், அவை கர்ப்ப நிலையிலேயே இருக்கும்.. கடைசியில் அந்த குஞ்சுகளோ அல்லது முட்டைகளோ கருவிலேயே உயிரிழக்க நேரிடும். எனவேதான், பருவமழை காலங்களில் இறால் மட்டுமின்றி மற்ற கடல் உணவுகளையும் உண்பதை தவிர்க்க சொல்கிறார்கள்.

அலர்ஜி: அதேபோல, இறாலில் உள்ள நரம்புகளை நன்றாக சுத்தம் செய்து சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால், குடலில் செரிமானம் பாதிப்பு, அலர்ஜி, மூச்சுத்திணறல், சுவாசிப்பதில் சிரமம் இப்படி பல கோளாறுகள் வரலாம். அதேபோல, நச்சு தன்மை கொண்ட இறால்களையும் தவிர்க்க வேண்டும். சிலருக்கு இறால் சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும்.. அவர்கள் இதனை தவிர்த்துவிடலாம்.

அதேபோல, இறாலில் குறைவான கொழுப்புகள் இருந்தாலும், அதிகமான கொலஸ்ட்ரோல்கள் இருப்பதையும் மறக்க முடியாது.. அதனால், இதய நோயாளிகள் கட்டாயமாக இறாலை தவிர்க்கலாம்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+