வெறும் விதை..இதயம் காக்கும் "தாமரை விதை".. வெயிட் லாஸுக்கு தாமரை விதைகளே போதுமே.. கூடும் ஆயுள்.. பலே
சென்னை: கால்சியம் சத்துக்களை அபரிமிதமாக தரக்கூடிய உணவுகளில் ஒன்றுதான் தாமரை விதைகள்.. மக்கானா என்று சொல்லக்கூடிய இந்த விதையின் பிற நன்மைகள் என்னென்ன தெரியுமா?
கிட்டத்தட்ட 7,000 வருடங்களாக உணவுப்பொருளாக இந்தத் தாமரை விதைகள் பயன்பாட்டில் இருந்து வருகிறதாம்.. இருந்து வருகிறது. இந்த விதைகளில் வெள்ளை மற்றும் பழுப்பு நிறத்தில் தோல்கள் காணப்படும்.

100 கிராம் தாமரை விதையில் 388 கலோரிகள் உள்ளன.. அதேபோல கால்சியம் எடுத்துக கொண்டால், 313 மி.கி, மற்றும் சோடியம் 7.86 மி.கி, பொட்டாசியம் 49.5 மி.கி, செம்பு 2.52 மி.கி, வெளிமம் 43.9 மி.கி, இரும்பு 16.4 மி.கி, செலினியம் 1.04 மி.கி, மாங்கனீசு 16.6 மி.கி, ஈரம் 8-10%, கச்சா கொழுப்பு 3.7%, புரதம் 25%, நார்சத்து 3-4%, கார்போஹைட்ரேட் 65% போன்றவை அடங்கியுள்ளன.
ஆரோக்கியம்: தாமரை விதைகளில் நார்ச்சத்து, புரதச்சத்தும் நிறைந்து காணப்படுவதால்தான், ஆரோக்கியமான உணவாக இது கருதப்படுகிறது.. முக்கியமாக உடல் எடை குறைப்போருக்கு பெஸ்ட் உணவாகவும் திகழ்கிறது. காரணம், பிளேவனாய்டு என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் இந்த விதைகளில் நிறைந்துள்ளது.. இதனால், இதய ஆரோக்கியம் காக்கப்படுகிறது..
சருமத்துக்கு கவசம் போல திகழ்கிறது.. தோல் சுருக்கத்தை குறைத்து, வயது முதிர்ச்சியை தள்ளிப்போடுகிறது இந்த விதைகள்.. அதனால்தர்ன, அழகுசாதன பொருள்களின் தயாரிப்புகளில், தாமரை விதையின் ஆன்டிஏஜிங் என்சைம்களை சேர்க்கிறார்கள்.
நீரிழிவு நோயாளிகள்: ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்துவதால், நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த விதைகள் பேருதவி புரிகின்றன.. இந்த விதையிலிருக்கும் மாவுச்சத்து, மெதுவாக ஜீரணமாகி ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.. இதிலிருக்கும் நார்ச்சத்துக்கள், கார்போஹைட்ரேட் உறிஞ்சுதலை தாமதப்படுத்துவதால், ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.
மேலும், குறைந்த அளவு கிளைசெமிக் குறியீடு உள்ளதால், இதை சாப்பிட்டாலுட்ம, சர்க்கரையின் அளவு திடீரென உயராது.. இந்த விதையிலிருக்கும் மக்னீசியம் சத்துக்கள், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி ரத்த சர்க்கரையின் அளவுகளையும் கட்டுப்படுத்துகிறதாம்.
பற்கள்: கால்சியம் நிறைந்துள்ளதால், எலும்புகளையும், பற்களைகளையும் பாதுகாக்கிறது.. நினைவாற்றல் இழப்பு ஏற்படாமல் தடுப்பதில், இந்த விதைகளுக்கு பெரும் பங்கு உள்ளது.. நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது.
சரியாக தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள், மன உளைச்சல் அல்லது மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பவர்களுக்கு இந்த தாமரை விதைகள் வரப்பிரசாதமாகும்...
அலர்ஜி: ஒருசிலருக்கு இந்த தாமரை விதைகள் அலர்ஜியை தரும் என்றாலும், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் பெண்கள், இதனை தவிர்ப்பது நல்லது என்கிறார்கள்.. காரணம் இந்த விதைகள் அதிக உஷ்ணத்தை தந்துவிடுவிடும் என்பதால், இதை தவிர்க்க சொல்கிறார்கள்.
பெரும்பாலும், விரதம் இருக்கும் நாட்களில் அல்லது தீவிரமாக உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் நாட்களில் இந்த தாமரை விதைகளை பயன்படுத்துவார்கள்.. காரணம் பசியை கட்டுப்படுத்தும் சக்தி இந்த விதைகளுக்கு உள்ளது.. வெறுமனே தண்ணீரில் இந்த விதைகளை ஊற வைத்து சூப்புகள், சாலட்டுகள் செய்து சாப்பிடலாம். உலர்ந்த தாமரை விதைகளாக இருந்தால், மிளகு தூள் தூவி பாப்கார்னை போல் வறுத்து சாப்பிடலாம். நெய்யில் வறுத்து மசாலாக்கள் தூவி ஸ்நாக்ஸ் போலவும் சாப்பிடலாம்.












Click it and Unblock the Notifications