மினுமினுப்பு மீன்.. சூரை மீன்.. பளபள சருமம் முதல் கல்லீரல் வரை காக்கும் "இதய நண்பன்" சூரை மீன்கள்
சென்னை: மீன்கள் என்றாலே நமக்கு நன்மை தரக்கூடியவை என்றாலும், ஒருசில மீன்களை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டியிருக்கிறது.. அதில் ஒன்றுதான் சூரை மீன்.. இந்த மீன்கள் தரும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
ஒவ்வொரு வகையான மீனிலும் ஒவ்வொரு சத்துக்கள் இருக்கின்றன.. அசைவ உணவுகளிலேயே, சத்துக்களில் முதன்மை பெற்றுள்ளது இந்த கடல் மீன்கள்தான்.. அதனால்தான், சர்க்கரை நோயாளிகளையும் இருதய நோயாளிகள், கர்ப்பிணிகளையும், ஒருகுறிப்பிட்ட அளவுடன் மீன்களை சாப்பிட சொல்கிறார்கள்.
சூரை மீன்கள்: அந்தவகையில், சூரை மீன்களை சொல்லலாம்.. இதில் முள் அவ்வளவாக இருக்காது.. சாப்பிடுவதற்கும் மிருதுவாக இருக்கும்.. சூரை மீனில் கொலஸ்ட்ரால், வைட்டமின் A, D, புரோட்டீன், உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமுள்ள மீன்களில் இந்த சூரை மீன்களும் ஒன்று.. கானாங்கெளுத்தி மீன் வகைகளை சேர்ந்தது என்பார்கள்..

புரதச்சத்து அதிகமாகவும், கொழுப்புச்சத்து குறைவாகவும் உள்ளதால், உடல் எடையை நிர்வகிக்க இந்த மீனை தேர்ந்தெடுக்கலாம்.. அதேபோல, இந்த மீன்களை வளரும் பிள்ளைகளுக்கு கட்டாயம் தர வேண்டும். காரணம், வளரும் பிள்ளைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க இந்த மீன் துணை புரிகிறது.
கர்ப்பிணி பெண்கள்: அதேபோல, கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக்கூடிய மீன்களில் இந்த சூரை மீனும் ஒன்று.. இதனை அடிக்கடி சாப்பிட்டு வரும்போது, கர்ப்பகாலத்தில் ஏற்படக்கூடிய மன அழுத்தத்திலிருந்து விடுபட முடியும்.
குறைந்த ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்களுக்கும் ஏற்ற உணவாக சூரை மீன்கள் திகழ்கின்றன.. இதனால் ரத்த ஓட்டம் அதிகரித்து, ரத்தம் சீராக செல்வதற்கு உறுதுணையாகின்றன இந்த மீன்கள்.. அதேபோல, பளபள சருமம் வேண்டும் என்று நினைப்போர், இந்த மீனை சாப்பிட்டு வந்தாலே , பலன்கள் தெரியும்.
மீன்கள்: இருதய தமனிகளில் உள்ள கொழுப்பு குறைப்பதில் இந்த மீன்களுக்கு பெரும்பங்கு உள்ளது.. இதனால், உடல் முழுவதும் ரத்தத்தை சமமாக அனுப்ப முடிகிறது. இதிலுள்ள ஒமேகா 3 அமிலங்கள் இதயத்தில் ஏற்படும் அலர்ஜி விளைவுகளை கட்டுப்படுத்துகிறது.. இதனால் ரத்த அழுத்தம், பக்கவாதம், மாரடைப்பு போன்ற பயங்கர நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளும் குறைகின்றன.
புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்கள், மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள், நரம்பு பிரச்சனை உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள், கண்பார்வை பாதிக்கப்பட்டவர்கள், இப்படி அனைவருமே சாப்பிடக்கூடிய மீனாக இந்த சூரைகள் உள்ளன.
சூரை மீன்கள்: இந்த சூரை மீனை காயவைத்தால், அதைதான் மாசி கருவாடு என்பார்கள்.. வாத, பித்தத்தை நீக்கி, இயல்பு நிலைக்கு கொண்டுவரக்கூடியது இந்த கருவாடு.. மூளை, இருதயம், நுரையீரல், கல்லீரல், கணையம், சிறுநீரகம், எலும்பு, நரம்பு, போன்ற உள்ளுறுப்புகளை பலப்படுத்தக்கூடியது இந்த கருவாடு..
ஆண் - பெண்களுக்கான அருமருந்துதான் இந்த மாசிக்கருவாடு.. அதிலும் திருமணமான தம்பதிகளுக்கு இந்த கருவாடை தினமும் சமைத்து கொடுப்பார்கள். காரணம், விந்துவில் உயிரணு உண்டாக்கி, அந்த விந்துவில் உண்டாகும் கரு முழு ஆரோக்கியத்தோடும், முழுஆயுளோடும் இருப்பதற்கு காரணமான வாதம் பித்தம், ரத்த ஓட்டம் போன்றவகைளை சீர் செய்து, ஆரோக்கியத்தை வலுப்படுத்துமாம் இந்த மாசி கருவாடு.
மாசி கருவாடு: அதேபோல, திருமணமான பெண்கள், மாசிக்கருவாடு சமைத்து சாப்பிட்டு வரும்போது, பெண்களுக்கு கரு நின்று, கருவில் வளரும் குழந்தைக்கு ஆரோக்கியம் ஏற்படும் என்பார்கள்.. பிறக்கும் குழந்தையும் ஆரோக்கியமாகவும், ஆயுள் உள்ள குழந்தையாகவும் பிறக்கும் என்பார்கள்..
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications