வவ்வால் மீன்.. அழகு + ஆரோக்கியம் = வாவல் மீன்.. கர்ப்பிணி பெண்கள் வவ்வால் மீன்களை மிஸ் பண்ணவே கூடாது
சென்னை: வவ்வால் மீன்களை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாமா? வவ்வால் மீன் பொழிச்சது எப்படி செய்ய வேண்டும் தெரியுமா?
கடல்பாசிகளில் ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலமும், புரதச்சத்தும் அளவுக்கு அதிகமாகவே உள்ளன.. அதனால்தான், இவைகளை சாப்பிட்டு வளரும் கடல் மீன்களிலும் ஒமேகா-3 அதிகம் உள்ளது..

ஆனால், ஆற்று மீன்களில் இந்த கொழுப்பு அமிலம் காணப்படுவதில்லை என்பதால்தான், பலரும் கடல் மீன்களையே அதிகம் விரும்புகிறார்கள்.
வாவல் மீன்கள்: நம்முடைய உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும், உடலில் ரத்தம் உறையாமல் இருக்கவும், பெரிதும் உதவுவது இந்த ஒமேகா 3 அமிலம்தான். முக்கியமாக, மூட்டு வலி, முழங்கால் வலியால் அவதிப்படுவோருக்கும் இந்த கொழுப்பு அமிலம் ஒரு சிறந்த நிவாரணியாக திகழ்கிறது. அந்த அளவுக்கு ஒமேகா 3 கொழுப்பு சத்துக்கள் அதிகம் உள்ள மீன்களில் வவ்வாலும் ஒன்று.
வவ்வால் மீன்களில் 20-க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கிறதாம்.. ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பயன்கள் உண்டு என்றாலும், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரத சத்துக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் கிட்டத்தட்ட அனைத்து வகை வவ்வால் மீன்களிலுமே ஒரே மாதிரி கிடைக்கின்றன...
கொழுப்பு அமிலம்: வவ்வால் மீன்களில், குறைந்த அளவு எண்ணெய் உள்ளது... வைட்டமின் A, B1., D, B12 போன்றவை நிறைந்துள்ளன.. கொழுப்பு அமிலங்கள் இதில் அதிகமுள்ளதால், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைகிறது... ரத்த அழுத்தத்தையும் குறைகிறது.
ரத்தத்தில் இன்சுலின் அளவை சமநிலைப்படுத்தி ரத்தத்தில் சர்க்கரையின் அளவையும் குறைக்கிறது. அந்தவகையில், நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த வவ்வால் மீன் நன்மை தரக்கூடியதே.
வைட்டமின் D அதிகமுள்ள இந்த மீன்கள் சருமத்துக்கும் பாதுகாப்பை தருகின்றன.. இதனால், தோலில் ஏற்படும் சுருக்கங்களையும் குறைத்து, வயதாவது தள்ளிப்போடப்படுகிறது. அதிக மனக்கவலை, மனச்சோர்வு போன்ற மன நோய்களிலிருந்து சமாளிக்க இந்த மீன்கள் உதவுகின்றன.
ஞாபகத்திறன்: இந்த மீன்களை சாப்பிடுவதால் நினைவாற்றல் பெருகும்.. அதனால், வளரும் குழந்தைகளுக்கு இந்த மீனை தருவது நல்லது. இதனால், அவர்களின் மூளை வளர்ச்சியும் அதிகரிக்கிறது... பக்கவாதம் மற்றும் புற்றுநோய் செல்கள் பெருகாமல் தடுக்கும் திறன் கொண்டது இந்த மீன்களுக்கு உள்ளது. முக்கியமாக உடலில் புற்றுநோய் செல்கள் பெருகாமல் தடுக்கும் திறன் இந்த மீன்களுக்கு உள்ளால், மார்பக புற்றுநோய் வரும் அபாயத்தை தடுக்கிறது.
ஆனால்,கேரளாவில் வவ்வால் மீன் பொழிச்சது ரொம்ப பேமஸ்.. இதற்காகவே, கடைகளில் வவ்வால் மீன் வாங்கும்போதே, மீன்களின் நடுவில் கீறி விட்டு வாங்கி கொள்வார்கள்.. பொழிச்சது செய்வதற்கு, பெரிய வவ்வால் மீனை வாங்கி சுத்தமாக கழுவி எடுத்து கொள்ள வேண்டும்.. இதனுடன் உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.
மிளகாய்த்தூள்: பிறகு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சிறிது எலுமிச்சம் சாறு, இஞ்சி பூண்டு விழுது போன்றவற்றை கலந்து அரை மணி நேரம் ஊறவைத்து, தோசைக்கல்லில் சுட்டு எடுக்க வேண்டும்.
பின்னர், ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய், சீரகம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய், வெங்காயம், பூண்டு விழுது சேர்த்து, மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா, என் ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி, அதில் தக்காளியையும் சேர்க்க வேண்டும்.. இப்போது மசாலா எல்லாமே நன்றாக மசிந்ததும், தேங்காய்ப்பால், மிளகு தூள், உப்பு சேர்த்து கிளற வேண்டும். மசாலா கெட்டியான பதத்துக்கு வந்ததுமே எடுத்து விட வேண்டும்.
வாழையிலை: இப்போது வாழை இலையின் 2 பக்கத்தையும் நெருப்பில் வாட்டி, இலைகள் இளகியதும் வேகவைத்த மசாலாவை அதில் தடவ வேண்டும். பிறகு, அதன்மேல் பொறித்த மீனை வைத்து, இன்னொரு புறமும் மசாலா தடவ வேண்டும்.. அதாவது மசாலாவை இலையிலும் மீனிலும் தடவிவிட வேண்டும். இப்போது வாழையிலையை நான்காக மடித்து நுாலில் கட்டி இட்லி பாத்திரத்தில் வைத்து, வேகவைத்து எடுத்தால், வவ்வால் மீன் பொழிச்சது ரெடி
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications