செம்பருத்தி பூ.. ஜஸ்ட் நாலஞ்சு இலை போதும்.. சட்டென அதிசயத்தை பாருங்க.. தலை முதல் கால் வரை மின்னிரும்
சென்னை: இயற்கையின் தங்கபஸ்பம் என்று சொல்லக்கூடிய செம்பருத்தி பூக்களையும், அதன் இலைகளையும் எப்படியெல்லாம் நாம் நம்முடைய ஆரோக்கியத்துக்கு பயன்படுத்தலாம் தெரியுமா?
ரத்த கொலஸ்ட்ரால் இருப்பவர்களுக்கு வரப்பிரசாதம் இந்த செம்பருத்தி பூக்கள்.. கிட்டத்தட்ட 22% வரை கொலஸ்ட்ரால் அளவை இது குறைப்பதால், பலரது கவனத்தையும் செம்பருத்தி பூக்கள் ஈர்த்து விடுகின்றன.. இதனால், நோய் எதிர்ப்பு சக்தியும் பெருகும்.

அதேபோல, கெட்ட கொழுப்பை இந்த செம்பருத்தி இலைகள் குறைக்கின்றன.. குறிப்பாக, தமனிகளின் உள்ளே, அடைப்புகளை நீக்குவதன் மூலம், கொழுப்பின் அளவை இவைகள் குறைக்கின்றன. அதேபோல, செம்பருத்தி இலையில் வைட்டமின் C நிரம்பி உள்ளதால், இருமல், ஜலதோஷம் போன்ற பிரச்சனைகளுக்கும் நிவாரணம் கிடைக்கிறது.
சிவப்பு பூக்கள்: இதயத்தை காக்கும் திறன் கொண்டது இந்த சிவப்பு பூக்கள்.. வெறுமனே இந்த பூக்களின் இதழ்களை மென்று சாப்பிடலாம். அல்லது இதழ்களை கழுவி, ஜூஸ் தயாரித்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இதய நோய்கள் நெருங்காது.. இதயத்தில் தொந்தரவு இருந்தாலும் குணமாகும்.. டீ போலவும் தயாரித்து குடிக்கலாம்.. அல்லது செம்பருத்தி பூக்களை காய வைத்து பவுடர் செய்தும் சாப்பிடலாம்.
அதேபோல, கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கும் இந்த செம்பருத்தி பூக்கள் தீர்வு தருகின்றன.. உதிரப்போக்கு அதிகமாக இருக்கும்போது, செம்பருத்தி இதழ்களை நெய்யில் வதக்கி சாப்பிடலாம்.. அல்லது செம்பருத்தி பூக்களை விழுதாக அரைத்து, வெறும் வயிற்றில், 7 நாளைக்கு சாப்பிட்டாலும் மாதவிடாய் பிரச்சனை சீராகும்.. அல்லது இந்த பூக்களை நிழலில் உலர்த்தி, பவுடர் செய்து, காலையிலும், மாலையிலும் 7 நாட்கள் சாப்பிட்டாலும் உதிரப்போக்கு பிரச்சனை சீராகும்.
உஷ்ண கோளாறு: செம்பருத்தி இலைகளை அல்லது பூக்களை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிப்பதால், உஷ்ணம் விலகும். கண் எரிச்சல், கண் நோய்கள், கண் வீக்கம், கண்களில் நீர் வடிதல், கண்களில் கட்டி போன்ற சூட்டை கிளப்பக்கூடிய பிரச்சனைகளுக்கு இந்த தண்ணீர் அருமருந்தாகும்.. சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கடுப்பு போன்ற பிரச்சனை இருந்தாலும், நீங்கிவிடும்.
உடலிலுள்ள கழிவுகளும் வெளியேறிவிடும்.. ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த செம்பருத்தி பூக்கள் மிகவும் நல்லது. அதனால், இதில் டீ தயாரித்து குடிக்கலாம். அல்லது வெறும் பூவின் இதழ்களை நீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம்.. அல்லது செம்பருத்தி பூக்களை பொடி செய்து வைத்து கொண்டு, சூப் போலவும் குடித்து வரலாம். இதனால் பித்தமும் நீங்கும்...
மூலப்பொருட்கள்: குளிர்ச்சியான இலைகள் என்பதால், பெரும்பாலும் செம்பருத்தியை தலைக்கு பயன்படுத்துகிறார்கள்.. ஷாம்புகளில் மூலப்பொருட்களாக பயன்படுத்துகிறார்கள்..
செம்பருத்தியின் பூக்களும், இலைகளும் இரண்டுமே மருத்துவ குணம் நிறைந்தது. தலைமுடி வறட்சியை போக்குவதற்கும், தலைமுடி கொட்டுவதை நிறுத்தவும், தலைமுடியும் அதிகமாக வளரவும், கண்களுக்கும் குளிர்ச்சி கிடைக்கவும், இந்த செம்பருத்தி பூக்கள், இலைகள் உபயோகமாகின்றன.
வெறும் இலைகளையும் தலைக்கு கண்டிஷனர் போல பயன்படுத்தலாம்.. இந்த இலையை மைய அரைத்து தலைக்கு தடவினால், இயற்கையான கண்டிஷனர் கிடைத்துவிடும்.. பேன்கள், அரிப்பு இருந்தாலும் நீங்கிவிடும்.. அல்லது வெறுமனே செம்பருத்தி பூக்களை, தலையில் வைத்துக் கொண்டு தூங்கினாலும், இந்த பூக்களின் வாசனைக்கு பேன்கள் ஓடிவிடும்.
உதிரப்போக்கு: பெண்களுக்கு அதிகமான உதிரப்போக்கு இருந்தால், செம்பருத்தி இதழ்களை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும்.. கருப்பை கோளாறுகளும் நீங்கும்..
செம்பருத்தி பூக்களை பேஸ்ட் போல அரைத்து, வெறும் வயிற்றில், 7 நாட்களுக்கு சாப்பிட்டால் போதும்.. மாதவிடாய் பிரச்சனை சீராகும்.. அல்லது செம்பருத்தி பூக்களை நிழலில் உலர்த்தி, பவுடர் செய்து, காலையிலும், மாலையிலும் 7 நாட்கள் சாப்பிட்டாலும் தீர்வு கிடைக்கும்..
குளிர்ச்சி இலை: புற்றுநோயை எதிர்த்து போராடுவதற்கு இந்த செம்பருத்தி இலைகள் தூண்டுகோலாக விளங்குகின்றன.. அதனால்தான், புற்றுநோயால் ஏற்பட்ட புண்களை ஆற்ற, இந்த இலைகளை அரைத்து பற்றுபோல பூசுவார்கள்.. வயிறு, சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி குடல் ஆரோக்கியம் காக்கப்படுகிறது. அதனால்தான், இன்றுவரை ஆயுர்வேத மருத்துவத்தில் செம்பருத்தி இலைகள் மிக முக்கியத்தை பெற்று வருகின்றன.












Click it and Unblock the Notifications