வெறும் "இது" மட்டும் போதுமே.. தொள தொளனு தொங்கும் சதைகள் குறையுமாம்.. வாவ் வேர்க்காய்கறிகள்.. சூப்பரு
சென்னை: விதைகள் எப்போதுமே நம்முடைய உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பவை. சம்பந்தப்பட்ட மரத்தின் மொத்த சத்துக்களை உள்ளடக்கியிருப்பதே அதன் விதைகள் என்பதை மறுக்க முடியாது. அதுபோலவே பெரும் பங்கு வகிப்பது வேர்க்காய்கள் ஆகும். அதில் மிக முக்கியமானதுதான், எள் விதைகள்.
ஒரு செடியில், வேர், தண்டு, இலைகள், விதைகள், பூக்கள் என்று பல பாகங்கள் இருக்கின்றன.. இவைகளில் அனைத்து பாகங்களுமே மருந்தாகவும, உணவாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன..

வேர்க்காய்கள்: இவைகளின் பொதுப்பெயர் காய்கறிகள் என்று சொன்னாலும், பூமிக்கு அடியில் புதைந்திருக்கும் வேரிலிருந்து முளைக்கும் காய்கறிகள் சற்று ஸ்பெஷலானவை.. இவைகளுக்கு வேர்க்காய்கறிகள் என்று சொல்கிறோம்.. முள்ளங்கி, கேரட், பீட்ரூட் போன்ற வேர்க்காய்கள் நம்முடைய உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் தருகின்றன.. இவைகளை தினமும் உணவில் சேர்த்து கொள்ள சொல்கிறார்கள்..
தானியங்கள் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே போல, இந்த வேர்க்காய்கறிகளும் முக்கியம்.. தானியங்களுக்கு மாற்றாக மருத்துவர்கள் பரிந்துரைப்பது இந்த வேர்க்காய்களைதான்.
கேரட், பீட்ரூட், இஞ்சி, பூண்டு, வெங்காயம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கு, முள்ளங்கி, நூல்கோல், டர்னிப்ஸ், பார்ஸ்னிப்ஸ், போன்றவை எல்லாமே வேர்க்காய்கள் என்று அழைக்கிறோம்.
நன்மைகள்: இந்த வேர்க்காய்களை சாப்பிட்டுவந்தால், உடலில் நார்ச்சத்துக்கள் அதிகமாகும்.. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை தீர்வதுடன், குடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. குறைவான கார்போஹைட்ரேட் உள்ளதால், உடல் எடை குறைப்போருக்கு பெஸ்ட் உணவாக இவைகள் திகழ்கின்றன.. கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது.. எனவே, இதனால் இதயநோய்களுக்கான ஆபத்தும் நீங்குகிறது.
இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் அதிகரிக்காது.. நீண்ட நேரத்துக்கு பசிக்காது.. இதனால் எடையும் குறையும். வேர்க்காய்கறிகளில் வைட்டமின் A,C நிறைந்துக்ணப்படுவால், கண்கள், தலைமுடி, சருமத்துக்கு நன்மை தரக்கூடியது.. வேர் காய்கறிகள் கரோட்டினாய்டுகளின் சிறந்த ஆதாரங்களாக செயல்படுவதால், சில புற்றுநோய்களின் அபாயத்தையும் குறைக்கின்றன.
கேரட், பீட்ரூட் இவை இரண்டிலுமே வைட்டமின் ஏ, சத்துக்கள் நிறைந்துள்ளதால், கண்கள் பாதுகாக்கப்படுகின்றன..
முள்ளங்கி, நூல்கோல் இவைகளை கொண்டு, அடிக்கடி சாம்பார் செய்து சாப்பிடலாம்.. இவை இரண்டுமே நார்ச்சத்து நிறைந்ததுடன், நீர்ச்சத்து நிறைந்த உணவும்கூட..
தூண்டுகோல்: வெங்காயம், இஞ்சி, பூண்டு, இந்த 3 பொருட்களும் இல்லாமல் நம்மால் எந்த உணவையும் சமைக்க முடியாது.. செரிமானத்துக்கு தூண்டுகோலாக இருப்பதுடன், உடலிலுள்ள கழிவுகளை, நச்சுக்களை வெளியேற்ற உதவுகின்றன. அதனால்தான், இறைச்சி உணவுகளில் இந்த 3 பொருட்களையும் கட்டாயம் பயன்படுத்தி வருகிறோம்.
வேர் காய்கறிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் என்பதால், புற்றுநோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. குறைந்த கலோரிகளும், ஏகப்பட்ட வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்துள்ளதால், வேர்க்காய்களை உணவில் "மிதமாக" சேர்த்து கொள்ள வேண்டும்.
டர்னிப்ஸ்: டர்னிப்ஸ்-ல் குறைந்த கலோரிகளும், வைட்டமின்கள் C, K, A, போன்ற நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம் நிறைந்திருக்கின்றன.. செரிமானத்துக்கும், எலும்பு ஆரோக்கியத்துக்கும், இதய செயல்பாட்டிற்கும் இந்த டர்னிப்ஸ் பெரிதும் உதவுகிறது.. இதனை வறுத்தோ, வதக்கியோ, அல்லது சூப் வைத்தோ சாப்பிடலாம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications