கறிவேப்பிலை கலக்குதே.. கறிவேப்பிலையின் நம்ப முடியாத ஆச்சரியம்.. ஆனாலும் இப்படியொரு சிக்கல் இருக்கே?
சென்னை: கறிவேப்பிலைகள் தரும் மருத்துவ நன்மைகள் என்னென்ன? கறிவேப்பிலையை அதிகமாக சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?
100 கிராம் கறிவேப்பிலையில் 108 கலோரிகள் இருக்கிறதாம்.. இந்த கறிவேப்பிலையில், கார்போஹைட்ரேட்டுகள், ஃபைபர், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம் மற்றும் தாமிரம் போன்றவை உள்ளன.

சத்துக்கள்: வைட்டமின் C, A, B, E, அமினோ அமிலங்கள், கிளைக்கோசைடுகள், ஃப்ளேவோனாய்டுகள் போன்றவை நிறைந்திருப்பதால் உடலுக்கு பல வகைகளில் நன்மை தரக்கூடியவை.
சர்க்கரை நோயாளிகளின் அருமருந்து கறிவேப்பிலையாகும்.. இதிலுள்ள இரும்புச்சத்து ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது.. ரத்த சர்க்கரை குறைவு பண்புகள் இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் இந்த கறிவேப்பிலையை மென்று சாப்பிட வேண்டும். இதனால் கணையத்தில் இன்சுலின் உற்பத்தி அதிகமாகிறது.
உடல் எடை: அதேபோல, உடல் எடையை குறைக்க முயற்சிப்போர் கறிவேப்பிலையை தாராளமாக பயன்படுத்தலாம்.. கொலஸ்ட்ரால் அளவையும் இந்த இலைகள் குறைக்கின்றன. தேவையற்ற கொழுப்புகளை கரைத்து, ரத்தத்தை விருத்தியாக்கி, ரத்த சிவப்பணுக்களின் அளவையும் அதிகரிக்க செய்யும் இந்த கறிவேப்பிலைகள். கர்ப்பிணிகளுக்கு கறிவேப்பிலையைவிட சிறந்த மருந்து வேறில்லை.. தலைமுடி வளர்ச்சியிலும் கறிவேப்பிலையின் பங்கு அபாரம்.
குடல் நோய்க்குறி, மூலநோய், மலச்சிக்கல் போன்ற இரைப்பை குடல் பிரச்சினைகளை குணப்படுத்த இந்த கறிவேப்பிலை உதவுகிறது. கருவேப்பிலையிலுள்ள ஃபோலிக் அமிலம் இரும்பு சத்தினை உறிஞ்சுவதற்கு உடலுக்கு உதவுகிறது. உடலிலுள்ள பித்த அளவை சமன் செய்யக்கூடியது இந்த கறிவேப்பிலைகள்.
மன அழுத்தம்: உள்ளுறுப்புகளுக்கும், தலைமுடிக்கும் மட்டுமல்லாமல், மனரீதியான பாதிப்புகளுக்கும் கறிவேப்பிலை துணைபுரிகிறது.. இந்த கறிவேப்பிலையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், மன அழுத்தம், மனநிலை கோளாறு போன்றவற்றை குறைக்க உதவுகிறது.
சருமத்தில் எந்த தொந்தரவாக இருந்தாலும், கறிவேப்பிலை விழுது அத்தனையையும் குணப்படுத்துகிறது.. கறிவேப்பிலையிலிருந்து எடுக்கப்படும் சாறு, தீக்காயங்கள், வெட்டுக்கள், காயங்கள், தோல் எரிச்சல், தடிப்புகள், பூச்சி கடி போன்றவற்றுக்கு மருந்தாக திகழ்கிறது. காயங்கள் அத்தனையும் குணமாவதற்கு, கறிவேப்பிலையில் உள்ள கார்பசோல் ஆல்கலாய்டு என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளதே இதற்கு காரணம்.
பாதக விளைவுகள்: இப்படி எத்தனையோ நன்மைகள் இருந்தாலும், சில பாதகமான விளைவுகளையும் கறிவேப்பிலை ஏற்படுத்தலாம். கறிவேப்பிலை அதிகமாக சாப்பிட்டால் உடலில் சோடியம் அதிகரிக்கும்.
இந்த கறிவேப்பிலையில் ஆல்கலாய்டுகள் உள்ளதால், மத்திய நரம்பு மண்டலம், செரிமான செயல்முறைகள், இனப்பெருக்கம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலங்களில் சில தொந்தரவுகளை ஏற்படுத்தலாம்.
கறிவேப்பிலைகள்: கறிவேப்பிலையிலுள்ள ஆக்சலேட்டுகள் சிறுநீரக கற்களை உண்டாக்கிவிடும்.. அதனால், சிறுநீரகத்தில் கற்கள் பாதிப்பு உள்ளவர்கள் இதனை குறைவாக உட்கொள்ளலாம். அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளும்போது சிலருக்கு தோல் வெடிப்பு அல்லது சுவாசப் பிரச்சனைகள் போன்ற ஒவ்வாமை ஏற்படலாம்.
அளவுக்கு அதிகமான கறிவேப்பிலை சாப்பிடும்போது, வயிற்றிலுள்ள அமிலத்தன்மை போன்ற பக்க விளைவுகளும் ஏற்படலாம்.. இதனால் வயிறு எரிச்சல், வயிறு வலி, குமட்டல் உருவாகக்கூடும். அதுமட்டுமல்ல இதிலிருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து வயிறு வீக்கத்தையும் தந்துவிடுமாம். இதுபோன்ற தொந்தரவுகளை தவிர்க்க டாக்டர்களின் முறையான ஆலோசனையை பெறுவதே, சரியான ஆரோக்கியமாகும்.












Click it and Unblock the Notifications