அதிமதுரம் அதிசயம்.. மூட்டுவலி முதல் பார்வை திறன் வரை பலன்தரும் ஆச்சரியம்.. அதிமதுரம் எனும் அருமருந்து
சென்னை: அதிமதுரம் அதிசயம் வாய்ந்த மருந்தாகவே இன்றுவரை கருதப்படுகிறது.. என்ன காரணம் தெரியுமா? மூட்டுவலி முதல் பார்வை கோளாறு வரை ஏகப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய அதிமதுரத்தின் பலன்கள் என்னென்ன?
அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டவை.. ஆன்டிஸ்பாஸ்மோடிக் என்ற பண்பும் இந்த அதிமதுரத்துள் இருக்கிறது.. நாட்டு மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கக்கூடியது அதிமதுரம்.. இது அதிமதுரத்தூள் என்று பவுடர் வகைகளிலும் கடைகளில் கிடைக்கிறது.

கோளாறுகள்: அல்லது இந்த அதிமதுரத்தை நாமும் தூள் செய்து வைத்துக்கொண்டால் நெஞ்சு சளி, இருமல், வறட்டு இருமல், சளி இருமல் போன்ற கோளாறுகளுக்கு பயன்படுகிறது.
குழந்தைகளுக்கு இருமல், சளி இருந்தால், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் இந்த பொடி 1 ஸ்பூன், 1 ஸ்பூன் தேன் கலந்து தரலாம்.. பெரியவர்கள் இந்த பவுடரை வெந்நீரில் கலந்து அப்படியே சாப்பிடலாம். அல்லது டீ போட்டும் குடிக்கலாம். சைனஸ் பிரச்சனை, ஒற்றைத் தலைவலி, தலைபாரம் இருந்தால், சோம்பு கொதிக்க வைத்த தண்ணீரில், அதிமதுர பவுடரை கலந்து குடிக்கலாம்..
வறட்டு இருமல்: வறட்டு இருமல் ஓயாமல் இருந்தால், அதிமதுரம், மிளகு, கடுக்காய் தோல் போன்றவற்றை பவுடர் செய்து, சிறிதளவு எடுத்து வாயில் அடக்கிக்கொண்டால், வறட்சி மறையும்.
வித்தியாசமான இனிப்பு சுவையை கொண்டது அதிமதுரம்.. நீரிழிவு நோயாளிகள், செயற்கை இனிப்பூட்டிகளுக்கு பதிலாக, இந்த அதிமதுரத்தை இனிப்பாக பயன்படுத்தலாம். அதிமதுரத்தின் சாரங்கள் வயிற்று மென்படலத்தின் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, வயிற்று புண்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதுடன், அந்த புண்களை ஆற்றுகிறது..
செல்கள்: செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியது அதிமதுரம்.. சில வைரஸ்களின் வீரியத்தையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.. தற்போது வலிப்பு நோய்க்கான மருந்தாக இதை பயன்படுத்தும் ஆய்வுகளும் நடந்து கொண்டிருக்கிறதாம். சிகரெட் பிடிக்கும் பழக்கம் உடையவர்களுக்கு அந்த உணர்வை மறக்கடிக்க, இந்த அதிமதுரம் போதும்..
கருப்பை நோய்களுக்கு இந்த அதிமதுரம் மருந்தாகிறது.. பெண்களின் மலட்டுத்தன்மையை நீக்க வேண்டுமானால், அதிமதுரம், திராட்சை இந்த இரண்டையும் சமமாக எடுத்து பவுடர் செய்து, 100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் 5 நாட்களுக்கு சாப்பிட்டு வரலாம்.. கருத்தரிக்கும் வரை 3 மாதங்கள் இதனை சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
தாய்ப்பால்: தாய்ப்பால் இல்லாதவர்களும், ஒரு கிராம் அதிமதுர சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்து சாப்பிடடும்போது, தாய்ப்பால் சுரக்கும்... குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து கிடைக்கும். மாதவிடாய் நேரத்தில் கை, கால் குடைச்சல், வலிகளுக்கு அதிமதுரமே மருந்தாகிறது..
அதிமதுரத்தின் வேர்கள் அத்தனை மருத்துவ சக்தி நிறைந்தது.. கீல்வாதம், மூட்டுவலி முதல் மலச்சிக்கல் வரை தீர்க்கக்கூடியது அதிமதுர வேர்கள்.. அதிமதுரம் கூர்மையான பார்வை திறனை தரக்கூடியது.. மனச்சோர்வு, பதட்டத்தை குறைக்கும் தன்மை இதற்கு உண்டு. உடலிலுள்ள கெட்ட கொழுப்பை எடையையும் குறைக்கிறது இநத அதிமதுரம். வயிற்று புண்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது இந்த அதிமதுரம்..
சூரணங்கள்: இதுபோல ஏராளமான மருத்துவ பலனை அதிமதுரம் தந்தாலும், சூரணங்களாக, மருந்தாக உட்கொள்ளும்போது டாக்டர்களின் ஆலோசனையை முறையாக பெறுவது கட்டாயமாகும்.
அதிமதுரத்தில் ஃபிளவனாய்டுகள் அதிகமாக உள்ளதால் தலைமுடிக்கும் சிறந்த ஊட்டச்சத்தாக உள்ளது.. தலைமுடியின் வேர்க்கால்களை உறுதியடைய செய்யும் தன்மை அதிமதுரம் பவுடருக்கு இருப்பதால், மாதம் ஒருமுறையாவது அதிமதுரத்தை ஹேர்பேக்காக பயன்படுத்தலாம்.. இதனால், ரத்த ஓட்டமும் தலைமுடியில் அதிகரிக்கும்.
தலைமுடி மருந்து: அதிமதுரம், நெல்லிக்காய் இரண்டையுமே, கடுகு எண்ணெய்யுடன் கலந்து தலைமுடிக்கு ஹேர்பேக் போட்டு வந்தால், முடி உதிர்தல் குறையும்.. இளநரை தொந்தரவு இருந்தாலும், அதிமதுரம் உதவுகிறது.. அதிமதுரம் தூளை பசும்பாலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து தலையில் தேய்த்து மசாஜ் போல தேய்த்து, அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால் இளநரை மறைய துவங்கும்..
அதேபோல, இளமையிலேயே வழுக்கை இருப்பவர்கள், அதிமதுரத்தை எருமைப்பால் விட்டு விழுதாக அரைத்து, முடி உதிர்ந்த இடத்தில் தேய்த்து குளித்து வந்தால் பலன் கிடைக்கும்..
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications