Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதுதான் சூப்பர் தீர்வு.. வெறும் கீரை போதும்.. மொத்த ரத்த கோளாறும் தீரும்.. மாற்றம் தரும் அகத்திக்கீரை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரத்த அழுத்த குறைபாடு உள்ளவர்களுக்கு அருமருந்தாக கை கொடுக்கிறது பச்சை காய்கறிகளும், கீரைகளும்.. இதில், சிலவகையான கீரைகளை பற்றி பார்ப்போம்.

உலகம் முழுக்க சுமார் 2 பில்லியன் மக்கள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், முக்கியமாக 5 வயதிற்குட்பட்ட 42% குழந்தைகளும், 40% கர்ப்பிணிப் பெண்களும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பின் (WHO) கவலையுடன் அறிவித்திருக்கிறது.

Do you know the Health Benefits of Agathi Keerai and Kuppai Keerai is the Best for increase Hemoglobin level

இரும்புச்சத்து: அந்தவகையில், இரும்புச்சத்து, வைட்டமின்C, B12 நிறைந்த உணவுகள் ரத்த விருத்திக்கு உதவுகின்றன.. ஹீமோகுளோபின் பிரச்சனை என்றாலே அதை எளிதில் சரிசெய்யக்கூடியது கீரைகள்தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு 14 - 18 கிராம் என்ற அளவிலும், பெண்களுக்கு 12 - 16 கிராம் என்ற அளவிலும் இருக்க வேண்டும். 8 கிராம் அளவுக்கு கீழே குறையும்போது, அது ரத்த சோகை என்ற நோயாய் உருமாறுகிறது.. இதுவே மற்ற நோய்களும் அடிப்படையாகிவிடுகிறது. கீரைகளை தவறாமல் உணவில் சேர்த்து கொள்ளும்போது, இந்த கோளாறுகள் அடியோடு நீங்குகின்றன.

கீரைகள்: பெரும்பாலும் கீரைகளில் அதிக ஃபோலிக் ஆசிட் இருப்பதால், ரத்த சோகையை தவிர்க்க, இதுதான் அடிப்படை காரணமாக உள்ளன அந்தவகையில், முருங்கைக்கீரையை முதன்மையாக கீரையாக விளங்கிறது.

இந்த லிஸ்ட்டில் பருப்புக்கீரையையும் சேர்த்து கொள்ளலாம்.. காரணம், ரத்த பிரச்சனையை தீர்ப்பதுடன், ரத்த சுத்திகரிப்புக்கும் இந்த கீரை உதவுகிறது.. இரும்புச்சத்து நிறைந்த வெந்தய கீரை கசப்புத்தன்மை இருந்தாலும், ரத்த விருத்தியை அதிகரிக்க கூடியது. ரத்த சுத்திகரிப்புக்கு, அகத்திக்கீரையின் பங்கையும் தவிர்க்க முடியாது.. இந்த கீரையை சாப்பிட்டாலே, ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தையும் தெளியவைக்குமாம்.

பாலக்கீரை: அதேபோல, பாலக்கீரையில் அதிகப்படியான இரும்புச்சத்துகள் நிறைந்துள்ளன.. ரத்த அளவை அதிகரிக்க செய்வதிலும் இந்த கீரைக்கு நிறைய பங்குண்டு.. இரும்பு சத்து நிறைந்த கறிவேப்பிலையை எப்படி சாப்பிட்டாலும், அத்தனையும் நலன்களையே தரும். ரத்த சோகையை தடுப்பதில் கறிவேப்பிலைக்கு நிகர் வேறில்லை.

ரத்த சோகை பிரச்சனையை தீர்ப்பதில், புளியங்கீரை மற்றும் வெள்ளை கரிசலைக்கீரையையும் சொல்லலாம்.. இந்த 2 கீரைகளை வாரம் 2 முறையாவது சாப்பிட்டு வந்தாலே, ஹீமோகுளோபின் பிரச்சனை அடியோடு ஓடிவிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+