வாழைத்தண்டு.. துண்டு போதுமே.. மொத்த கல்லையும் கரைக்கும் வாழைத்தண்டு.. சிறுநீரகத்தை காக்கும் நண்பன்
சென்னை: உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு வாழைத்தண்டு எந்த அளவுக்கு பயன்தரும் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான்.. ஆனால், சிறுநீரகத்துக்கு வாழைத்தண்டு போல சிறந்த மருந்தும், உணவும் வேறில்லை.
வாழைத்தண்டில், பொட்டாசியம், வைட்டமின் B6 போன்ற சத்துக்கள் அடங்கி உள்ளன.. அதேபோல, டையூரிடிக் பண்புகளையும் இந்த காய் கொண்டுள்ளது. அதனால்தான், ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்துவதில், வாழைத்தண்டு முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.

வாழைத்தண்டு: வாழைத்தண்டை பொடி பொடியாக நறுக்கி கொண்டு, இஞ்சி, தயிர், உப்பு, போன்வற்றையும் சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். பிறகு இதை வடிகட்டி மிளகுத்தூள் சேர்த்து குடித்தால், உடல் எடை ஈஸியாக குறையும்..
எனினும், சிறுநீரை பெருக்கும் தன்மை இந்த தண்டுக்கு இயல்பாகவே உண்டு. எனவே, சிகிச்சைகளில், சிறுநீரக கோளாறுகளுக்கு, பரவலாக பரிந்துரைக்கப்படும் பிரதான உணவாக இந்த வாழைத்தண்டுதான் இடம்பெற்று வருகிறது.. பொரியலாக, கூட்டாக, ஜூஸாக என எந்த வடிவங்களில் எடுத்துக் கொண்டாலும் அது உடலுக்கு நன்மைதான்.
நார்ச்சத்துக்கள்: சிறுநீரக கற்களை கரைப்பதற்காக மட்டுமல்லாமல், சிறுநீரகங்களில் கற்களை சேர விடாமல் தடுப்பதும் இந்த வாழைத்தண்டுதான். ஆனால், கற்கள் கரைய, பெரும்பாலும் ஜூஸ்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன.. ஆனால், ஜூஸ் தயாரித்தால், அதன் சாற்றை வடிகட்டாமல் குடித்தால், நார்சத்து வீணாகாது.. இந்த ஜூஸுடன், எலுமிச்சை சாறு கலந்து குடிக்கும்போது, கூடுதல் பலன்தருகிறது.
காரணம், எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலமானது, தண்டிலுள்ள பொட்டாசியத்துடன் இணைந்து, கால்சியம் கற்கள் நொறுக்கி அழிக்கின்றன.. சிறுநீரக பாதையில் நோய்த்தொற்று இருந்தாலும், இந்த சாறு குணப்படுத்திவிடும்.
தேவைப்பட்டால், இந்த ஜூஸில் ஏலக்காய் பவுடரையும் சிறிது தூவி கொள்ளலாம். சிறுநீரகத்தை பாதுகாப்பதால்தான், நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த வாழைத்தண்டு, முக்கிய உணவாக உள்ளது..
இன்சுலின்: ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில், வைக்கவும், இந்த வாழைத்தண்டு ஜூஸ்தான் பயன்படுகிறது.. இதனால், இன்சுலினும் மேம்படுத்தப்படுகிறது.. குடலில் சிக்கியுள்ள முடி, நஞ்சு போன்றவையும் வெளியேறிவிடும்.. நீர்க்கட்டிகள் இருந்தாலும், நீங்கிவிடும்.
சிறுநீரகத்துக்கு வாழைத்தண்டின் நன்மைகள் பலவிருந்தாலும், சிறுநீரகத்தில் கற்களை அண்டவிடாமலும் தடுக்க வேண்டும். இதற்கு, முதலில் உணவில் உப்பை குறைக்க வேண்டும். வாழைத்தண்டு ஜூஸ்டன், பழஜூஸ், இளநீர் போன்றவற்றையும் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
சிட்ரிக் ஜூஸ்: குறிப்பாக, எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரிக் அமில பழங்களின் ஜூஸ் குடிப்பதன் மூலம், அது சிறுநீரில் அமில தன்மையைக் குறைத்து கல் உருவாவதை தடுத்துவிடும்.. அதேபோல, ஒருவருக்கு ஒரு முறை சிறுநீரகக் கற்களை அகற்றிவிட்டாலும் அடுத்த 5 வருடங்களில் திரும்ப வருவதற்கு 50 சதவிகித வாய்ப்பு இருக்கிறதாம். எனவே, இந்த பிரச்சனைக்கு, எந்த காலத்திலும் கை கொடுத்து உதவக்கூடியதுதான் வாழைத்தண்டு.












Click it and Unblock the Notifications