பூந்திக்கொட்டை.. கருகரு தலைமுடி + மினுமினு உடல் = பூந்திகொட்டைகள்.. அதென்ன நுரை நுரையா வருதே.. வாவ்
சென்னை: தலைமுடி பாதுகாப்புக்கும், சரும பாதுகாப்புக்கும் இயற்கையாகவே அமைந்த வரப்பிரசாதம் பூந்திக்கொட்டை எனலாம்.. இதனை எப்படி பயன்படுத்தலாம்? இதன் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
பூந்திக்கொட்டை மரம்.. சபின்தஸ் எமார்ஜினேட்டஸ் என்பதுதான் இந்த மரத்தின் தாவரவியல பெயர்.. மணிப்பூவந்தி மரம் என்றும் சொல்வார்கள்.. இந்த மரத்தின் காய்ந்த பழங்களையே, பூந்திக்கொட்டை என்கிறோம்.. பூவந்திக்கொட்டை, சோப்புக்காய் என்றெல்லாம் இதற்கு வேறு பெயர்கள் உண்டு.

பூந்திக்கொட்டைகள் நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். பூந்திக் கொட்டையிலுள்ள கொட்டைகளை நீக்கிவிட்டு அதன் தோல் பகுதியை மட்டுமே எப்போதும் பயன்படுத்த வேண்டும்.
செம்பருத்தி பூ: இந்த பூந்திக்கொட்டைகளை வைத்து, குளியல் பொடியை வீட்டிலேயே தயாரிப்பார்கள்.. அதாவது, இலுப்பை, ரோஜாப்பூ, செம்பரத்தை பூ, செம்பரத்தி இலைகள், சீகைக்காய், வெட்டிவேர், நன்னாரி, பூலாங்கிழங்கு, ஆவாரம்பூ, வெந்தயம் போன்றவற்றுடன், பூந்திக்கொட்டையும் சமஅளவு எடுத்து சுத்தம் செய்து, வெயிலில் காயவைத்து அரைத்து, மெல்லிய துணியில் சலித்து வைத்து கொள்வார்கள்.
இதில் சிறிது அளவு எடுத்து, தண்ணீர் சேர்த்து குழைத்து, தலைமுடிக்கும், உடலுக்கும் தேய்த்து குளித்தால், தலைமுடி வலுவாகும். சரும பாதுகாப்பும் தழைக்கும்.
பூந்திக்கொட்டை பவுடர்: அதேபோல தலைமுடிக்கென பூந்திக்கொட்டை பவுடரை பயன்படுத்தலாம்.. இந்த கொட்டையை லேசாக வறுத்து, அதன் தோலை உரித்து, இடித்து வைத்து கொள்ள வேண்டும். சோறு வடித்த கஞ்சி அல்லது சீயக்காய்தூளுடன் கலந்து தலையில் தேய்த்து, அலசினால், தலைமுடி உதிராது
அல்லது ஷாம்பு போலவே, தலைமுடிக்கும் இந்த கொட்டையில் பவுடர் தயாரிக்கலாம்.. பூந்திக்கொட்டை பொடி, சீயக்காய் பொடி, வெந்தயப்பொடி என 3 பொடிகளையும் ஒன்றாக கலக்கி, அதில், சிறிது எடுத்து, வெதுவெதுப்பான நீரில் கலந்து தலைக்கு தேய்த்து குளிக்கலாம். இதில் நுரை வராது என்றாலும், தலைமுடி உறுதியாகும்.. மென்மையாகும்.. பளபளப்பாகும்.. முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்யும்..
தலைமுடி வளர்ச்சி: தலைமுடிக்கும், சருமத்துக்கும் மட்டுமல்லாமல், துணிகள், பாத்திரங்களையும் சுத்தம் செய்யலாம்.. காரணம், இந்த பூந்திக்கொட்டை இயற்கையிலேய ஒரு கிருமி நாசினியாகும்.
இந்த மரத்தின் பழங்களும் மருத்துவ குணம் நிறைந்தவை.. இந்த பழங்களிலுள்ள கொட்டையை எடுத்துவிட்டு, வெறும் பழங்களை கைகளால் பிசைந்து தண்ணீரில் ஊறவைத்துவிட வேண்டும். சிறிது நேரம் கழித்து, மணக்க மணக்க நுரை உண்டாகும்.. இந்த தண்ணீரில், தலைமுடியை அலசிவந்தால், தலைமுடி மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும். மிகச்சிறந்த கண்டிஷனர் போல இதை பயன்படுத்தலாம்.
எண்ணெய் பசை: முன்பெல்லாம் ஷாம்பு இல்லாத காலங்களில், தலையிலுள்ள எண்ணெய் பசை நீங்குவதற்கு, அரப்புத்தூளுடன், இந்த பழங்களைதான் அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தார்களாம்.. தலையில் ஏற்படும் பேன், பொடுகு சிரங்கு போன்ற பாதிப்புகளும் நீங்கும்.. சருமத்திலுள்ள பருக்கள், அரிப்பு, தடிப்பு, புண்கள் போன்றவைகளும் நீங்கும்.
அதேபோல, தங்க நகைகள் மங்கலாகி விட்டால், அல்லது கலர் மாறி பொலிவிழந்து விட்டால், பூந்திக்கொட்டைகள் உள்ள தண்ணீரில் நகைகளை ஊற வைத்து, அலசினால், புதுநகைபோல ஜொலிக்கும். இதுபோல, "கறைகள்" பிடித்துள்ள பட்டுப்புடவைகளையும் செய்யலாம்..!!
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications