கருவாடு.. இந்த 3 கருவாடு மிஸ் பண்ணாதீங்க.. கருவாட்டுக்குள்ளே மறைந்திருக்கும் ஆச்சரியம்.. விட்றாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிறைய பேர் கருவாடு உணவை முற்றிலும் தவிர்த்து விடுவார்கள்.. ஆனால், அசைவ உணவுகளிலேயே, அதிக கொழுப்பு சத்து இல்லாத உணவு இந்த கருவாடுதான் என்பது பலரும் அறியாத உண்மை.

இந்த கருவாடை எடுத்துக் கொண்டால், 80-85 சதவீதம் வரை புரதம் இருக்கிறது. அதனால்தான், பலவீனமானவர்களை, அடிக்கடி கருவாட்டை சமையலில் சேர்த்து கொள்ள சொல்வார்கள்.

Do you know the Health Benefits of Dry Fish and Dry Fish is the Best food for Women

நோய் எதிர்ப்பு: இதனால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.. பொதுவாக, கருவாடுகளில் நிறைய கால்சியம் சத்துக்கள் உள்ளதால், எலும்பு மற்றும் பற்களை உறுதிப்படுத்துகிறது..
அந்தவகையில், ஒவ்வொரு கருவாடும் ஒவ்வொரு நன்மைகளை தரக்கூடியது.. அதேபோல, கொடுவாமீனை விட கொடுவா கருவாடில்தான் சத்துக்கள் அதிகம் உள்ளது.. கெளுத்தி மீனைவிட, உப்பங் கெளுத்திக்கருவாட்டில்தான் நிறைய சத்துக்கள் உள்ளன.. சீலா மீனைவிட, சீலா கருவாடு மிகவும் நல்லது. உடம்பில் ரத்த விருத்தி இல்லாவிட்டால், இறால் கருவாடு செய்து சாப்பிடலாம். வாய்வு பிடிப்பு, பசிமந்தம், மூட்டுவலி, அரிப்பு, வயிறுஉப்புசம், போன்றவற்றிலிருந்தும் விடுபடலாம்..

இருமல், சளி: இருமல், சளி உள்ளவர்களுக்கு எந்த கருவாடுகளை பயன்படுத்தியும் ரசம் போல வைத்து தரலாம். அதாவது, மிளகு, பூண்டு, சீரகம், திப்பிலி இந்த 4 பொருட்களையும் சேர்த்து, ரசம் வைத்து சாப்பிட்டால், நுரையீரல் பாதையிலுள்ள தொற்றுகள் அகலும். பால்சுறா, சுறா இந்த 2 கருவாடுகளிலும் கூடுதல் மருத்துவ நன்மைகள் உள்ளன..

பெண்களுக்கு இந்த கருவாடு நிறைய பலன்களை தருகிறது.. மாதவிலக்கு நேரத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படும்.. உடலிலும் பலவீனங்கள் ஏற்படும்.. இதுபோன்ற நேரங்களில் சுறா கருவாடு கைகொடுக்கிறது.. இதில் திருக்கை கருவாடு, பெண்களுக்கு மிகவும் பயன்தரத்தக்கது.. நீர்ப்பை, சினைப்பை, கருப்பை பிரச்சினைகளை சரி செய்வதில் முதன்மையானது..

அதேபோல, பாலூட்டும் தாய்மார்களுக்கு, பால் சுரக்க வேண்டுமானால், பால் சுறா கருவாடு ஒன்று போதும்.. ஆனால், கர்ப்பிணிகள் கருவாடு சாப்பிடக்கூடாது. கர்ப்பிணிகளுக்கு வயிற்று அழற்சி, செரிமானமின்மை ஏற்படக்கூடும்.. கர்ப்பகால ரத்த அழுத்த உள்ள பெண்களுக்கு, இது கூடுதலான அழுத்தத்தை தந்துவிடும்.

தவிர்க்கலாம்: ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்களும் சாப்பிடக்கூடாது. அலர்ஜி பிரச்சனை உள்ளவர்களும் கருவாடு சாப்பிடக்கூடாது. காரணம், லிஸ்டேரியா எனப்படும் பாக்டீரியா நஞ்சுக்கொடி வழியாக பிள்ளையை சென்றடைந்தால், அது சிக்கலை தந்துவிடுமாம். அது தொற்றையும் ஏற்படுத்தக்கூடும்.

சருமநோய் அல்லது அலர்ஜி இருப்பவர்களும் கருவாட்டை தவிர்க்கலாம்.. சரும பிரச்சனை இருக்கும்போது, கருவாட்டையும் சாப்பிட்டால், உடலில் நமைச்சல், அரிப்பு அதிகம் ஏற்படும்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+