கருகருன்னு தலைமுடி வேணுமா.. மணி மணியான மணத்தக்காளி வற்றல் இருக்கே.. மணத்தக்காளி ஆச்சரியத்தை பாருங்க
சென்னை: கீரைகளில் மணத்தக்காளியை தவிர்த்துவிட்டு நம்மால், சமைக்க முடியாது.. மருத்துவ குணம் வாய்ந்த மணத்தக்காளி கீரையில் மட்டுமல்ல, அதன் பழங்களிலும் அற்புத மருத்துவம் ஒளிந்துள்ளது.
குடல்புண்கள், வயிற்றுப்புண்கள், வாய்ப்புண்களை ஆற்றும் சக்தி மணத்தக்காளி கீரைக்கு உண்டு.. சளி, இருமல், காய்ச்சல் வந்தால், இந்த கீரையை கடைந்து சாப்பிட்டாலே போதும். நிவாரணம் கிடைக்கும்.

அல்சர் பிரச்சனை: பசியை தூண்டிவிடும் சக்தி இந்த கீரைக்கு உள்ளது.. வைட்டமின் D, E நிறைந்திருப்பதால், இதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும்.. நல்ல தூக்கத்தையும், சிறந்த கண் பார்வையையும் இந்த கீரை தரும்.. காச நோயாளிகளுக்கு இந்த கீரை மிகவும் நல்லது.
ஹீமோகுளோபின் பிரச்சனை இருப்பவர்கள், வாரம் 2 முறையாவது இந்த கீரையை கடைந்து சாப்பிட்டு வந்தால், அனீமியா பிரச்சனை அகலும். அதேபோல, சிறுநீர் எரிச்சல் இருந்தால், இந்த கீரையுடன் தேங்காய் துருவி சேர்த்து சாப்பிட்டால், தீர்வு கிடைக்கும்.. கர்ப்பிணிகள், இந்த மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால் நல்ல செரிமானம் ஏற்படும்.
விந்தணுக்கள்: ஆண்களின் விந்தணுக்கள் வலிமை பெறுவதற்கு இந்த கீரைகள் மிகவும் பயன்படுகின்றன.. இந்த மணத்தக்காளிக்கீரையை அடிக்கடி ஆண்கள் சாப்பிட்டு வந்தால், ஆண்களுக்கு தாது பலம் கிடைக்கும்.. விந்தணுக்களும் வலிமைப்பெறும்.
இந்த கீரையை கசக்கி தண்ணீரில் கலந்து வாய்க்கொப்பளித்தாலே, வாய் துர்நாற்றம் நீங்கி, வாய்ப்புண்களும் ஆறிவிடும்.. காதுவலி அதிகமாக இருந்தாலும், இந்த மணத்தக்காளி இலை சாற்றை காதில் விட்டால், தற்காலிக நிவாரணம் கிடைக்கும். அதேபோல, தொண்டையில் ஏற்படும் தொற்றுக்கள், புண்களை போக்கவும், இந்த கீரை சாறு பேருதவி புரிகிறது.
கருப்பு பழங்கள்: இந்த கீரையின் பழங்கள் கறுப்பு நிறத்திலும், சில சமயம் சிகப்பு நிறத்திலும் இருக்கும்.. பச்சை கலரில் காய்க்காத பழங்களை சாப்பிடக்கூடாது.. தாகத்தை தணிக்ககூடிய மணத்தக்காளி பழம், உடலுக்கு சிறந்த ஆற்றலை தரக்கூடியது.. மலச்சிக்கல் இருப்பவர்கள், இந்த பழத்தை சாப்பிடலாம்.. காய்ச்சல் இருந்தால், இந்த மணத்தக்காளி பழத்தையும், இலைகளையும் சேர்த்து கஷாயம்போல வைத்து தந்தால், குணம் பெறலாம்.
அல்லது இந்த மணத்தக்காளியை வற்றலாக காயவைத்து, சமையலில் சாப்பிடலாம். வெறுமனே வற்றலை செய்யாமல், லேசாக நெய்யில் வதக்கி, அதற்கு பிறகு பயன்படுத்தலாம்... வாந்தி, குமட்டல், தலைசுற்றல் போன்ற கோளாறுகளை இந்த வற்றல் போக்கக்கூடியது. நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளை இந்த வற்றல் தீர்க்கிறது..
மணத்தக்காளியின் வேர்கள் கூட மருத்துவ குணம் வாய்ந்தவை.. அதனால்தான், மலச்சிக்கலை நீக்கும் மருந்து தயாரிப்புகளில் இந்த வேர்கள் சேர்க்கப்படுகின்றன.
தலைமுடி வளர்ச்சிகள்: அதேபோல, தலைமுடி வளர்ச்சியிலும் இந்த வேரை பயன்படுத்தலாம்.. நல்லெண்ணய்யுடன் இந்த வேர்களையும், இலைகளையும் சேர்த்து காய்ச்சி தலைக்கு பயன்படுத்தலாம். உச்சந்தலையை வலுப்படுத்த நல்லெண்ணெய் உடன் இதன் இலைகள் பதப்படுத்தப்பட்டு பயன்படுத்தலாம்.












Click it and Unblock the Notifications