மீனில் ஆச்சரியம்.. "இந்த" மீனை சாப்பிட கூடாதாம்.. ஆமா, கடல் மீன்கள் உப்பு கரிப்பதில்லையே ஏன்? பார்ரா
சென்னை: மீன்களில் நல்ல சத்துக்கள் உள்ளதால், அதை தவிர்க்ககூடாது என்கிறார்கள்.. ஆற்று மீனுக்கும், கடல் மீனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? கடலிலேயே இருந்தாலும், கடல் மீன்கள் உப்புக் கரிப்பதில்லையே ஏன் தெரியுமா?
பெரும்பாலும், கடல் மீன்களையே அதிகம் சாப்பிட சொல்கிறார்கள்.. அதுவும், கடலிலுள்ள சின்ன மீன்களை நிறைய சாப்பிட சொல்கிறார்கள்.. இதற்கு காரணம், இந்த மீன்களீல் நிறைய கால்சியம் உள்ளன..

சத்துக்கள்: மேலும் பலவிதமான தாதுக்களும், வைட்டமின் A, D, அயோடின் போன்ற சத்துக்களும் குட்டி மீன்களில் நிறைந்துள்ளன. இந்த சத்துக்கள் எல்லாமே நினைவாற்றலை வளப்படுத்துகின்றன.. மேலும், குறைந்த அளவில் கார்போஹைட்ரேட் இருப்பதால்தான், உடல் எடை குறைபவர்களும் இந்த சிறிய வகை மீன்களை உணவில் சேர்த்து கொள்கிறார்கள்.
இதனால், இதய நோய் ஏற்படுவதற்கான அபாயமும் குறைகிறது.. ரத்தத்தில் கொழுப்பின் அளவையும் குறைக்கிறது. ரத்த அழுத்தத்தை சமன்செய்கிறது. மூட்டு நோய்கள், சொரியாசிஸ் போன்ற நோய்களை கட்டுப்படுத்துகிறது..
கடல் மீன்கள்: அதேசமயம், முட்கள் அதிகமாக இருக்கும் மீன்களை வாங்க கூடாது.. ஆழ்கடலில் பிடிக்கப்படும் பெரிய மீன்களையும் வாங்கக்கூடாது. காரணம், ஆழ்கடல் மீன்களில், நிறைய ரசாயன பொருட்கள் நிறைந்திருக்குமாம்.
இன்னொரு காரணமும் உள்ளது.. கடலில் இருந்து பிடிக்கப்படும் மீன்களும், அவைகளின் முட்களும் சுற்று பெரிதாக இருக்கும். ஆனால் குளத்து, பண்ணைகளில் மீன்களில் முள் சிறியதாக இருக்கும்.. அதேபோல, கடல் மீன்கள் உப்பு நீரில் வளர்வதால், சோடியத்தின் அளவும் அதிகமாக இருக்கும். இது நம்முடைய உடலுக்கு தேவைப்படும் சத்தாகும்.. ஆனால் குளத்து, பண்ணை மீன்களில் சோடியம் மிகவும் குறைவு. அதேபோல, கடல் மீன்களில் உள்ள கால்சியம், மற்ற மீன்களில் இருப்பதில்லை.
உப்பு இல்லை: கடல் மீன்கள் என்றாலும் உப்பு கரிப்பதில்லையே ஏன் தெரியுமா? உப்பின் தாக்கம், மீன்களின் உடலுக்குள் செல்லாதபடி தடுக்கும் தகவமைப்பு மீன்களிடம் உள்ளது.. வாய் வழியாக நீரை உறிந்து, செவுள்கள் வழியாக வெளியேற்றுகின்றன மீன்கள்.. அப்போது செவுள் பகுதியிலுள்ள ஏராளமான நாளங்கள் நீரினுள் கரைந்திருக்கிற ஆக்சிஜனை மட்டும் உறிந்து உடலுக்குள் அனுப்பும்.
நீரில் கரைந்திருக்கும் உப்பு உள்பட மற்ற அனைத்தும் நீருடன் சேர்ந்து கழிவுகளாக வெளியே வந்துடும். சுருக்கமாக சொல்லப்போனால், தேவைக்கு அதிகமாக இருக்கின்ற உப்பை, கழிவாக வெளியேற்றும் பணியை உணவு மண்டலம் செய்கிறது. அதனால்தான், உப்பு நிறைந்த கடலில் வசித்தாலும், மீன்களின் உடலுக்குள் உப்பு செல்வதில்லையாம்.
ஆற்று மீன்கள்: ஆனால், ஆற்று மீன் என்றாலும், கடல் மீன் என்றாலும், இரண்டுமே சத்துக்கள் நிறைந்தவைதான்.. இதன் வித்தியாசம் என்னவென்றால் ஆற்று மீன், ஏரி மீன்கள், ஆறுகளிலும், குளங்களிலும், ஏரிகளிலும் உள்ள புழு, பூச்சிகளை உணவாக சாப்பிட்டு வளரும். ஆனால், கடல் மீன்கள் அப்படி கிடையாது.. கடலில் வளரும் கடல்பாசிகளையே சாப்பிட்டு வளரும். அதனால்தான், இந்த வகை மீன்களில் ஒமேகா-3 போன்ற உயர்ந்த சத்துகள் நிறைந்துள்ளன.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications