கொத்துக்கொத்தா கொட்டுதா தலைமுடி? வல்லாரை கீரை இருக்குல்ல? வெங்காயம் இருக்கா? கருகருனு வரும் பாருங்க
சென்னை: தலைமுடி வளர்ச்சிக்கு சத்தான உணவும், முறையான தூக்கமும் தேவையென்றாலும், ஒருசில டிப்ஸ்களை கையாண்டால், தலைமுடி உதிர்வை தடுக்கலாம். அதில் முக்கியமானது இந்த ஆயுர்வேத எண்ணெய் ஆகும்.
தலைமுடி ஆரோக்கியமாக வளர வேண்டுமானால், வைட்டமின்கள், மினரல்கள், புரதங்கள் தேவைப்படக்கூடிய ஊட்டச்சத்துக்கள்தான் அவசியம்.. ஜிங்க், இரும்புச்சத்து, வைட்டமின் A, C, E, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது கட்டாயமாகிறது.

தலைமுடி பராமரிப்பு: இலைவடிவ பச்சை காய்கறிகள், முட்டை, மீன், விதைகள், நட்ஸ், முழு தானியங்கள் போன்றவற்றை தவிர்க்காமல் உணவில் சேர்த்து வரும்போது, தலைமுடி உறுதியாகிறது.. அதேபோல, தலைமுடியை பராமரிக்க, கற்றாழை ஜெல்லை, முடியின் வேர்க்கால்களில் மசாஜ் செய்து தலைமுடியை அலசி வரலாம்.. அல்லது சுத்தமான வெண்ணெய், நெய் போன்றவற்றை தலைமுடியின் வேர்களில் தடவி மசாஜ் செய்து குளிக்கலாம்.
அல்லது வெங்காய சாற்றையும் தலைமுடிக்கு தடவி ஊற வைத்து குளித்தால், தலைமுடி உதிராது.. தலைமுடி வலுவாகும். ரோஸ்மேரி, லாவெண்டர் போன்ற எண்ணெய்களை கொண்டு மசாஜ் செய்தாலும், ரத்த ஓட்டம் தலையில் அதிகரிக்கும்.. இதனால், முடி உதிர்வதும் கட்டுக்குள் வரும்.
வெதுவெது நீர்: பூந்திக்கொட்டையில் பவுடர் போல தயாரித்து ஷாம்பு தயாரிக்கலாம்.. ஷாம்பு என்றாலும் நுரையை ஏற்படுத்தாது.. ஆனால், தலைமுடிக்கு நன்மை தரக்கூடியது இந்த கொட்டை.. பூந்திக்கொட்டை பொடி, சீயக்காய் பொடி, வெந்தயப்பொடி என 3 பொடிகளையும் ஒன்றாக கலக்கி வைத்து கொள்ள வேண்டும். இந்த பவுடரில் சிறிது எடுத்து, வெதுவெதுப்பான நீரை கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால், முடி மென்மையாகும்.. பளபளப்பாகும்.. முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்யும்..
அதேபோல, மூலிகை எண்ணெய்யும் தலைமுடி வளர கை கொடுக்கும்.. இது ஆண் - பெண் என யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.. இந்த எண்ணெய்யை வீட்டிலேயே நாம் தயாரிக்கலாம்.
வல்லாரை சாறு: தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், நெல்லிக்காய் சாறு, வல்லாரைச்சாறு, கரிசலாங்கண்ணி சாறு, போன்றவற்றை தலா 100 மில்லி லிட்டர் எடுத்து கொள்ள வேண்டும். இதனுடன் 3 வெந்தயத்தை பொடி செய்து 3 ஸ்பூன் சேர்க்க வேண்டும்.
ஒரு இரும்பு கடாயில், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் இரண்டையும் கலந்து சூடு செய்து, அதனுடன் வெந்தயம் உள்ளிட்ட மற்ற சாறுகளையும் சேர்த்து கலக்கி, கொதிக்க விட வேண்டும்.
முடி உதிர்வு: நீர் முழுவதும் வற்றி, இறுதியில் எண்ணெய் மட்டும் வடிந்திருக்கும்.. இதனை ஆறவைத்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்து கொண்டு, தேவைப்படும்போது, சில சொட்டுகளை எண்ணெயை முடியின் வேர் முதல், முடிவு வரை தடவி விட வேண்டும். 20 நிமிடம் மசாஜ் போல செய்து குளித்து வந்தாலே முடி உதிர்வு பிரச்சனை இருக்காது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications