சேப்பங்கிழங்கு இலையை இப்படி சாப்பிட்டாலே சர்க்கரை நோய் ஓடிரும்.. டிட்டோ முருங்கைக்கீரையே.. சூப்பர்
சென்னை: புற்றுநோய் செல்கள் நம்மை நெருங்க விடாமல் தடுக்கச் செய்வதில் முருங்கை கீரைகளுக்கு முக்கிய பங்கு உள்ளது.. அந்தவகையில், சர்க்கரை நோயாளிகளும், உடல் எடை குறைய முயற்சிப்பவர்களும், உதவக்கூடியது முருங்கை இலையும், சேப்பங்கிழங்கு இலையும்.. எப்படி தெரியுமா?
மற்ற கீரைகளைவிட அதிக முக்கியத்துவத்தை பெறக்கூடியது முருங்கைக்கீரை.. இதற்கு முக்கிய காரணம், பிற கீரைகளிலுள்ள இரும்புச்சத்தினைவிட, 75 சதவீதம் அதிகமான இரும்புச்சத்துக்கள் முருங்கை கீரையில் உள்ளது

சத்துக்கள்: ஆரஞ்சு பழத்தைவிட, 7 மடங்கு வைட்டமின் C முருங்கைக்கீரையில் உள்ளது. பாலில் இருப்பதை விட 4 மடங்கு அதிகம் கால்சியம் இந்த கீரையில் அடங்கியிருக்கிறது.. கேரட்டில் இருப்பதுப்போல 4 மடங்கு வைட்டமின் A இந்த முருங்கைக்கீரையில் உள்ளது. வாழைப்பழத்தில் உள்ளதுபோல 3 மடங்கு பொட்டாசியம் இதில் உள்ளது.
முருங்கைக்கீரையை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் கட்டுக்குள் உள்ளது.. அதிக அளவில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் அதிக உடல் எடை மட்டுமல்ல, சர்க்கரை நோய், ரத்த சோகை, இதயநோய்கள், ஆா்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய்கள், தோல் நோய்கள், ஜீரணக்கோளாறு போன்றவற்றையும் நெருங்க விடாமல் செய்யலாம்.
சேப்பங்கிழங்கு இலை: முருங்கையிலை போலவே, சத்துக்கள் நிறைந்தது சேப்பங்கிழங்கு இலைகளாகும்.. பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டிஆக்சிடெண்ட் நிறைந்த சேப்பங்கிழங்கைவிட, இந்த கிழங்கின் இலைகள் அதிக சத்துக்கள் இருக்கிறதாம்..
வைட்டமின் A, E, பாஸ்பரஸ், கால்சியம், நார்ச்சத்துக்கள் இந்த கிழங்கில் உள்ளன. கண்களுக்கும், பற்களுக்கும் எலும்புகளுக்கும், உறுதியையும், ஆரோக்கியத்தையும் இந்த கிழங்கு தரக்கூடியவை.
ஆண்மை குறைபாடு: நார்ச்சத்து அதிகமுள்ள இந்த கிழங்கு செரிமான கோளாறை நிவர்த்தி செய்து, குடல்புண்களையும் ஆற்றுகிறது.. முருங்கை கீரையை போலவே, இந்த சேப்பங்கிழங்கும் ஆண்மை குறைபாடு உள்ளவர்களுக்கு கை கொடுத்து உதவுகிறது.. சேப்பங்கிழங்கு இவ்வளவு நன்மைகளை தந்தாலும், சேப்பங்கிழங்கு இலைகளில் கூடுதல் மருத்துவ தன்மைகள் நிறைந்துள்ளன.
இதய வடிவில் காணப்படும், சேப்பங்கிழங்கு இலைகளில், வைட்டபின் B நிறைந்துள்ளன.. எனவே, நரம்புத்தளர்ச்சி உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாகிறது இந்த இலைகள்.
புற்றுநோய் செல்கள்: வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இந்த இலைகளில் நிறைந்துள்ளதால், புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கிறது.. குறிப்பாக, குடல் புற்றுநோயை முற்றிலுமாக தடுக்கும் ஆற்றல் இந்த சேப்பங்கிழங்கு இலைகளுக்கு உண்டு.. பெண்களை அதிக அளவு பாதிக்கும், மார்பக புற்று நோயையும் நெருங்க விடாமல் செய்ய இந்த சேப்பங்கிழங்கு இலைகள் துணைபுரிகின்றன.
இலைகளில் புரதம், இரும்புச்சத்து, துத்தநாகம், தாமிரம், மக்னீசியம் போன்ற நுண் ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், மிகச்சிறந்த வலி நிவாரணியாக பயன்படுகிறது.
நார்ச்சத்து: உடல் எடை குறைய முயற்சிப்பவர்களும், இந்த கீரையை பயன்படுத்தலாம்.. முருங்கைக்கீரையை போலவே, இந்த சேப்பங்கிழங்கு இலைகளிலும் இரும்புச்சத்து அதிகமாகவே உள்ளன. அதனால், அனிமியா பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி சமைத்து சாப்பிட வேண்டும். இதிலிருக்கும் வைட்டமின் C நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்களுக்கு இதுவொரு அருமருந்து எனலாம்.. ஏனென்றால், இந்த இலைகளில் சபோனின், டேனின்ஸ், கார்போஹைட்ரேட், ப்ளோனாய்டுகள் போன்ற பொருட்கள் அனைத்துமே, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவக்கூடிய அம்சங்களாகும்.. இந்த இலைகளின் சாறு, சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த மருந்தாகும். எனவே, சேப்பங்கிழங்கு இலையில் ஜூஸ் தயாரித்து குடித்து வந்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு உடனடியாக குறைவதுடன், திடீரென சர்க்கரை அதிகரிக்கவும் செய்யாது.
அலர்ஜி: இந்த இலைகளை ஒரு கைப்பிடி எடுத்து சுத்தமாக கழுவி தண்ணீரில் கொதிக்க விட வேண்டும். அந்த நீரை வடிகட்டிவிட்டு, வேக வைத்த இலைகளை வைத்து, சமைத்து சாப்பிடலாம். ஆனால், பச்சையாக இலையை சாப்பிடக்கூடாது..
சிலருக்கு இந்த இலைகளால் தோலில் அலர்ஜி ஏற்படலாம்.. சிலருக்கு சிறுநீரக கற்களையும் உருவாக்கலாம். எனவே, பச்சையாக சாப்பிடாமல் வேக வைத்து சாப்பிடலாம். இத்தனை சத்துக்கள் நிறைந்த சேப்பங்கிழங்கு இலைகளை, டாக்டர்களின் ஆலோசனையை பெற்று பயனடையலாம்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications