இடுப்பு வலி.. எலும்பு முறிவு.. மொத்த நோயையும் புரட்டி போடும் பிரண்டை துவையல் + பிரண்டை ரசம்! பெஸ்ட்
சென்னை: புற்றுநோய்க்கு தரப்படும் மருந்துகளில் மிக முக்கியமானது பிரண்டையாகும்.. இந்த பிரண்டைகள் பெண்களுக்கு எந்த அளவுக்கு நன்மைகளை தருகிறது தெரியுமா?
பிரண்டையில் வைட்டமின் C, E, கால்சியம், கெட்டோஸ்டீராய்டு, ஃப்ரீடீலின், ரெஸ்வெராட்ரோல் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ளதால், இதற்கு மருத்துவ குணம் அதிகமாகவே உள்ளன.

கொழுப்பு: பொதுவாக, ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவதால், ரத்த ஓட்டத்தின் வேகம் குறைந்து, இதய வால்வுகள் பாதிக்கப்படும்.. இதுபோன்ற தொந்தரவு இருப்பவர்கள், பிரண்டையை துவையலாக செய்து சாப்பிடலாம். இதனால், ரத்த ஓட்டம் சீராகும்.. இருதயமும் வலுவாகும்.
வயிறு உபாதைகளை சரி செய்யக்கூடிய சக்தி இந்த பிரண்டைகளுக்கு உண்டு.. செரிமானத்தை அதிகப்படுத்தும் இந்த பிரண்டையை உடல் பலவீனமானவர்களுக்கு தெம்பை வழங்கக்கூடியது.. எலும்பு முறிவு பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், பிரண்டையை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.. முறிந்த, உடைந்த எலும்புகளில் புதிய திசுக்களை உருவாக்கி, அந்த எலும்புகளை இந்த பிரண்டைகள் இணைத்துவிடுமாம்..
மூட்டு வீக்கம்: பிரண்டையின் வேர்கள் இதற்கு மருந்தாகின்றன.. இந்த வேர்களை தூள் செய்து சுடுநீரில் குழைத்து, பற்று போட்டுவந்தால், முறிந்த எலும்புகள் சீக்கிரமாகவே கூடிவிடும்.. மூட்டுவீக்கங்களுக்கு கூட இந்த பற்று தடவி வரலாம்.. அல்லது பிரண்டையிலிருந்து சாறு எடுத்து, பசும்பாலுடன் சேர்த்து குடித்துவந்தாலும் உடைந்த எலும்புகள் குணமடையும். அதேபோல, பிரண்டையை வாரம் 2 அல்லது 3 முறை சட்னி செய்து சாப்பிடலாம்..
அல்லது பிரண்டையின் தண்டுகளை சிறு துண்டுகளாக வெட்டி, ரசத்தில் சேர்த்து கொதிக்க வைத்து, குறைந்தது ஒரு மாதமாவது ஒரு டம்ளர் குடித்து வந்தாலும் எலும்புகள் பலம் பெறும்.. முறிந்த எலும்பும் விரைவில் கூடுமாம்..
குடல் பிரச்சனை: வாயு தொந்தரவு இருந்தாலும் இந்த பிரண்டை அதனை சரிசெய்துவிடும்.. பிரண்டையை நெய்விட்டு வதக்கி சாப்பிடும்போது, மொத்த குடல் சார்ந்த பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.
அவ்வளவுஏன்? இதே பக்குவத்தில் சாப்பிட்டால் மூல நோய்களின் வீர்யமும் குறைந்துவிடும். மூளை நரம்புகளை பலப்படுத்துவதுடன், ஞாபக சக்தியை அதிகரிக்க செய்யும் சக்தி பிரண்டைகளுக்கு உள்ளது.. அதனால்தான் , பிள்ளைகளுக்கும் இந்த பிரண்டையை உணவில் அடிக்கடி தர சொல்கிறார்கள்.
வயிறு உபாதையிருப்பவர்கள் வாரம் 2 முறையாவது பிரண்டையை துவையல் செய்து சாப்பிடலாம்.. இதனால், குடலில் தேங்கியிருக்கும் அழுக்குகள், நச்சுக்கள் வெளியேறிவிடும்.
பெண்கள்: பெண்களுக்கு இந்த பிரண்டை ஒரு வரப்பிரசாதமாகும்.. ஏனென்றால், மாதவிடாய் நேரங்களில் அதிகமான ரத்தப்போக்கு இருந்தால், பிரண்டையை துவையல் செய்து சாப்பிடலாம்.. சில பெண்களுக்கு அடி முதுகு பகுதியில் வலி ஏற்படும்.. அல்லது மாதவிடாய் நேரத்தில் இடுப்பு வலியும் அதிகமாம் இருக்கும்.. அப்போது பிரண்டை தண்டுகளை துவையல், அல்லது ரசம் போல வைத்து சாப்பிட்டால் மொத்த மாதவிடாய் கோளாறுகளும் நீங்கும்.
சிலர் பிரண்டையின் இலையிலும் துவையல் செய்வார்கள்.. இதுவும், ரத்த அழுத்த பிரச்சனைக்கும், நீரிழிவு நோய்க்கும், குடல் புண்களை ஆற்றுவதற்கும் சிறந்த மருந்தாகிறது.












Click it and Unblock the Notifications