சோம்பு தண்ணீர், ஓம வாட்டர்.. செரிமானத்துக்கான டிரிங்க்ஸ்.. எந்தெந்த உணவு, எவ்ளோ நேரத்தில் ஜீரணமாகும்
சென்னை: நாம் உண்ணும் உணவுகள் எவ்வளவு நேரத்தில் ஜீரணமாகின்றன தெரியுமா? ஒவ்வொரு உணவிற்கும் செரிமானமாவதற்கு ஒவ்வொரு கால நேரம் உள்ளது. அதனை சுருக்கமாக பார்ப்போம்.
செரிமானம் என்பது அனைவருக்கும் பொதுவாக, ஒரே மாதிரியாக நடக்காது. ஒருவரின் வயது, பாலினம், வளர்சிதை மாற்றம், நாம் உண்ணும் உணவு போன்றவற்றை பொருத்தே ஜீரணம் அமையும்.

தண்ணீர்: குறிப்பாக, வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால், ஜஸ்ட் 5 நிமிடங்களுக்குள் அது உறிஞ்சப்பட்டுவிடும்... செரிமானமுமாகிவிடும்.. இதுவே, வயிறு முட்ட சாப்பாடு சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்தால், அது உறிஞ்சப்பட சில மணி நேரம் ஆகும்.. ஜூஸ் குடித்தால் 20 நிமிடத்தில் ஜீரணமாகும்.. ஸ்மூத்திகளாக குடித்தால், எப்படியும் அது ஜீரணமாக அரை மணி நேரம் ஆகும்..
பழங்களை எடுத்துக்கொண்டால், ஒவ்வொரு பழமும் ஜீரணமாக தனித்தனி நேரம் எடுத்து கொள்ளும்.. குறிப்பாக, ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழங்களுக்கு 30 நிமிடங்கள் ஆகும்.. ஆப்பிள், பேரிக்காய், கிவி, செர்ரி போன்ற பழங்கள் ஜீரணமாக 40 நிமிடங்கள் ஆகும்.. ஏனென்றால் இவைகளில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், ஜீரணமாவது எளிதாகி, செரிமானமும் எளிதாகிவிடும்.. இதனால் குடல் இயக்கமும் ஆரோக்கியமாக இருக்கும்.
பழங்கள்: ஆனால், உணவுகளுடன் சேர்த்து பழங்களை சாப்பிடும்போதுதான், ஜீரணமாவதற்கு நேரம் பிடிக்கும்... உணவுடன் சாப்பிடாமல் பழங்களை தனியாக சாப்பிடுவது நல்லது.
பழங்களைவிட காய்கறிகளுக்கு இன்னும் கூடுதல் நேரம்தேவைப்படும். அதேசமயம் நீர்க்காய்கள் வெள்ளரிக்காய், குடை மிளகாய், தக்காளி போன்றவை 30 நிமிடத்தில் ஜீரணமாகும்.. இதில் கீரைகளையும் சேர்த்து கொள்ளலாம்.
காய்கறிகள்: முட்டைக்கோஸ், காலிபிளவர், புரோக்கோலி காய்கறிகள் செரிமானமாக 40 நிமிடம் பிடிக்கும்.. இதுவே, கேரட், பீட்ரூட் வேர் காய்கறிகள் என்றால் 50 நிமிடங்களாகும்.. உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகள் என்றால் ஜீரணமாவதற்கு 1 மணி நேரமாகலாம். பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளுக்கு 2 மணி நேரத்திற்கு மேல் ஆகும்..
எப்படிப்பார்த்தாலும், செரிமான செயல்முறையானது, 24 மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை நடைபெறும் என்கிறார்கள். அதேசமயம், நிறைய நார்ச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.
ஒருவேளை ஜீரண குறைபாடுகள் இருந்தால், இதற்கு சோம்பு என்று சொல்லப்படும்பெருஞ்சீரகம் கை கொடுக்கும்.. ஒருகிளாஸ் சுடுநீரில் சிறிது பெருஞ்சீரகத்தை போட்டு கொதிக்க வைத்து குடித்தால் நாம் சாப்பிட்ட உணவு ஜீரணமாகும். அதேபோல, ஓம வாட்டர் மிகவும் நல்லது.
ஓம வாட்டர்: ஓமத்தில் உள்ள தைமோல் (Thymol) பீனால், செரிமான நொதிகள் தயாரிப்பை ஊக்குவிக்கும் தன்மை கொண்டது. எனவே, அரை டீஸ்பூன் ஓமத்தை, ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவைத்து, அரை டம்ளராகும் வரை சுண்ட கொதிக்க வைத்து, தினமும் 2 வேளை குடித்து வரலாம்.
இஞ்சி கலந்த வெந்நீரை தினமும் காலை மாலை 2 வேளை குடிக்கலாம்... சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து, பால் சேர்க்காத இஞ்சி டீ குடிக்கலாம். இதனால் செரிமானம் எளிதாகும். வெறும் லவங்கப் பட்டையை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம் அல்லது லவங்கப்பட்டையை வறுத்து தூள் செய்து, பாலில் கலந்து சூடாக குடித்தாலும் ஜீரணமாகும்.
புதினா: அதேபோல, செரிமானமற்ற உணவால், நெஞ்செரிச்சல், அஜீரணம், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளும் வரக்கூடும்.. இதனை தடுக்க புதினாவை தாராளமாக பயன்படுத்தலாம்.. இது செரிமானத்தையும் அதிகரிக்கும். புதினா டீ, புதினாவை அப்படியே மென்று உண்பது, புதினா மிட்டாய்களை சாப்பிடலாம்.
உணவு சாப்பிட்டதும் கிரீன் டீ குடிப்பது இன்னும் நல்லது.. அல்லது லைம் சோடா குடிக்கலாம்.. எலுமிச்சை சாற்றுடன் சோடா கலந்து, அதிலேயே சிறிது புதினா இலைகளையும் சேர்த்துக்குடிப்பதால் வயிறு பிரச்சனை நீங்கி, செரிமானம் எளிதாக நடக்கும்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications