"மாமியாரு".. வர வர மாமியாரு.. அடடடே இதுதான் விஷயமா.. இவ்வளவு நாளா தெரியாமலேயே போயிடுச்சே
சென்னை: ஏன் சொல்லுகிறோம், எதற்காக சொல்லுகிறோம் என்று தெரியாமலேயே சொல்லப்படுவதுதான், சில பழமொழிகள்.. அதில் ஒன்றுதான், "வர வர மாமியாரு கழுதை போல ஆனாளாம்".
ஒருவர் வாழ்க்கையில் பின்னோக்கி சென்றாலோ அல்லது தடுமாறி சென்றாலோ, அல்லது தன் இயல்பில் இருந்து மாறி தேய்மானத்தை அடைந்தாலோ, இந்த பழமொழியை வழக்கத்தில் பயன்படுத்துவது இயல்பு.

மாமியார்: உண்மையிலேயே மாமியார் கழுதை போல ஆகிவிடுவார்களா? மருமகள்களை எட்டி உதைப்பதால், ஒருவேளை இருக்குமோ? என்றெல்லாம் சிலர் யோசித்ததுண்டு. ஆனால், பழமொழியின் நிஜ அர்த்தமே வேறு என்கிறார்கள். "வர வர மாமியாரு கயிதை போல ஆனாளாம்..." என்றே சொல்ல வேண்டுமாம்..
"கயிதை" என்பது ஊமத்தங்காயின் இன்னொரு பெயர்.. ஊமத்தங்காயின் பூ அதாவது ஊமத்தம்பூ அதனின் அரும்பு பருவத்தில் மென்மையாய் நீல வண்ணத்தில் சங்குபுஷ்பம் போல் பூத்து மிக அழகாக காட்சியளிக்கும்.. பார்த்தவுடனேயே கண்களுக்கு அழகு தரும் இந்த ஊமத்தம்பூ, காய் பருவத்தை அடையும்போது வெளிப்புறத்தில் கடின முட்களோடு உட்புறத்தில் கொடிய விஷத்தன்மையை கொண்டிருக்கும்.. அதாவது, தன்னுடைய இயல்பான குணத்தை அப்போதுதான் வெளிப்படுத்தும்...
காய் பருவம்: பூ பருவத்தில் இருந்த தோற்றம் வேறு.. வளர்ந்தபிறகு உருவாகும் தோற்றம் வேறு.. பூ பருவத்தில் ரசித்தவர்கள், காய் பருவத்தில், தொட்டாலோ, உண்டாலோ அவர்களுக்கு துன்பத்தை கொடுக்கும் குணம் கொண்டது இந்த ஊமத்தம்பூ... அதுபோலவே, மாமியார்கள் ஆரம்பத்தில் மருமகள்களிடம் அன்பாய் இருப்பதும், பிறகு, மெல்ல மெல்ல கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிடும்.
எது நிஜம்: அதனால்தான், வர வர மாமியாரு கழுதை போல ஆனாளாம்" என்ற பழமொழி தோன்றியதாம்.. ஆக, போலியாக பழகி நிஜமான தன் குரூர குணத்தை காட்டும், அத்தனை நபர்களுக்கும் இந்த பழமொழி பொருந்தும் என்றாலும், மாமியாரை மட்டுமே இன்னமும் சுட்டிக்காட்டி குற்றஞ்சொல்ல முடியாது.. அதுவும் இன்றைய நவீன யுகத்தில்...!!
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications