Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேன்சர் அபாயம்.. முறையற்ற மாதவிடாய் முதல் அஜீரணம் வரை போக்கும் அன்னாசி பூ! கமகமனு ஸ்டார் பூக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்டார் பூ என்று சொல்லக்கூடிய அன்னாசி பூவின் மகத்துவம் என்ன தெரியுமா? புற்றுநோய்களை உண்டாக்கும் நச்சுகளை வெளியேற்றக்கூடிய அளவுக்கு சக்தி நிறைந்தது இந்த அன்னாசி பூவை பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

அன்னாசி பூ இல்லாத பிரியாணிகள் கிடையாது.. கமகமவென வாசனைக்கு சேர்க்கும் அன்னாசிப்பூவின் மருத்துவ நன்மைகள் பலருக்கும் தெரியாமலேயே போயிவிட்டது. முழுக்க முழுக்க ஆன்டி ஆக்சிடென்ட் அடங்கியிருப்பதுதான் இந்த வாசனை பூ.

Do you know Wonderful Medicinal Uses of Star Anise and Can Women use Powerful Annasi Poo to prevent the Cancer cells

நோய் எதிர்ப்பு சக்தி: அந்தவகையில், நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்க செய்யும் சக்தி இந்த அன்னாசி பூவுக்கு உண்டு.. அதனால்தான், பன்றிக் காய்ச்சலுக்கு தரப்படும் மருந்துகளில் மிக முக்கியமான மூலப்பொருட்களாக, இந்த அன்னாசிப்பூக்களையும் பயன்படுத்துகிறார்கள்.

அன்னாசி பூவில், வைட்டமின் A, C என ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளதால், செரிமானத்தை சீராக்குகிறது.. அதனால்தான் அசைவ உணவுகளில் அன்னாசி பூக்களை சேர்க்கிறார்கள்.. பொதுவாக நம்மில், 23 சதவீத மக்கள் வாயு மற்றும் செரிமான பிரச்சனைகளால் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரம் கூறுகின்றன.

செரிமானம்: இப்படி செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு கை கொடுத்து உதவக்கூடியது இந்த அன்னாசி பூக்களாகும். ஒரு டம்ளர் தண்ணீரில், மிளகு, சீரகம் இரண்டையும் தட்டிப்போட்டு கொதிக்க வைத்து இறக்கி, அதனுடன் சிறிது அன்னாசி பவுடரையும் கலந்து வடிகட்டி தேன் கலந்து குடித்து வரும்போது, ஜீரண பிரச்சனையுடன சுவாச கோளாறுகளும் நீங்கும்...

அசைவ உணவுகள் இல்லாவிட்டாலும்கூட, வெறுமனே தண்ணீரில் இந்த அன்னாசிப்பூவை கொதிக்க வைத்து குடித்தாலே போதும்.. அதிலும் செரிமான கோளாறு உள்ளவர்கள், வயதானவர்கள், அடிக்கடி வாந்தி எடுக்கும் குழந்தைகள் போன்றோர், இதை குடித்து வரும்போது, வாயு தொல்லை அகலும்.. வயிறு உப்பசம், வயிறு பொறுமல் விலகிவிடும். இதனால், குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சிகள் இருந்தாலும், வெளியேறிவிடும்.

மாதவிடாய்: பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிலக்குகள் இருந்தால் அதனை சரிசெய்கிறது இந்த அன்னாசி பூக்கள்.. இந்த பூக்களை வாணலில் போட்டு வறுத்து தூள் செய்து எடுத்து வைத்து கொள்ளவேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, ஒரு ஸ்பூன் பனை வெல்லம், அரை ஸ்பூன் அன்னாசி பவுடர், கால் ஸ்பூன் பெருங்காயம் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, தினமும் காலையில் குடித்து வந்தாலே ஒழுங்கற்ற மாதவிடாயும் சீராகிவிடும்.

இந்த அன்னாசி பூவை வறுத்து, பவுடர் போல வைத்து கொண்டால், சில உடல்நல கோளாறுகளை குணப்படுத்த பயன்படுத்திக் கொள்ளலாம்..

முக்கியமாக, செரிமான பிரச்சனை இருப்பவர்கள், இந்த அன்னாசி பூவை பவுடராக அரைத்து வைத்துக் கொண்டு, அதிலிருந்து தினமும், அரை கிராம் வீதம் 3 வேளையும், சாப்பிட்ட பிறகு வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தாலே போதும்.. ஜீரணம் எளிதாவதுடன், புளித்த ஏப்பமும் நீங்கும்..

தாய்ப்பால்: தாய்ப்பாலை பெருக்கக்கூடியது அளவுக்கு சக்தி இந்த அன்னாசி பூக்களுக்கு உண்டு.. அவ்வளவு ஏன்? புற்றுநோய்களை உண்டாக்கும் நச்சுகளையும் அடித்து விரட்டக்கூடியது இந்த பூக்கள்.. கலோரிகள் மிக குறைவான இந்த பூக்களை, உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களும் பயன்படுத்தலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+