வலி நிவாரணி மாத்திரைக்காக துபாயில் இந்தியருக்கு 24 ஆண்டு சிறை! வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு!
சென்னை: ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தனது உடல்வலிக்கு மனைவி அனுப்பிய வலி நிவாரணி மாத்திரையை விமான நிலையத்தில் கையகப்படுத்திய சுங்க அதிகாரிகள் அவருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நிலையில் வெளிநாடுகளுக்கு செல்லும் போது மருந்துகளை எடுத்துச் செல்வதில் கவனம் தேவை என சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவர் பரூக் அப்துல்லா அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: வெளிநாடுகளில் பணிபுரியும் சகோதர சகோதரிகளின் கனிவான கவனத்திற்கு, சமீபத்தில் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தனது உடல் வலிக்கு மனைவி அனுப்பி வைத்த வலி நிவாரணி மாத்திரையை விமான நிலையத்தில் கையகப்படுத்திய சுங்க அதிகாரிகள், பணியாளரான
கணவருக்கு சிறை தண்டனை விதித்துள்ளனர்.

மனைவி அனுப்பி வைத்த மாத்திரைகள் "20 - 30 ட்ரமடால் எனும் வலி நிவாரணி மாத்திரைகள்" தான். அவை அங்கு விற்கவோ அல்லது தவறான முறையில் பிறருக்கு வழங்கவோ இல்லை. தனிநபரின் வலிக்காக அனுப்பப்பட்ட மாத்திரைகள் தான் என்றாலும் நமது நாட்டின் சட்டம் வேறு. மற்ற நாடுகளின் சட்டங்கள் வேறு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
வலி நிவாரணிகளில் ஓபியாய்டு (ஓபியம் போல செயல்படும் மருந்துகள்) வகை மருந்துகளை நம் நாட்டில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டின்றி வழங்கக் கூடாது என்று சட்டம் உள்ளது. ஆனாலும் அங்கும் இங்குமாக இந்த மாத்திரை மருத்துவர் சீட்டு இல்லாமலும் கிடைக்கிறது.
இதன் விளைவாக இந்த மாத்திரையை போதை வஸ்துவாக இளையோரில் ஒரு சாரார் பயன்படுத்தி வருவதும் உண்மை. நம் நாட்டைப் பொருத்தவரை ட்ரமடால் (TRAMADOL) இருமல் மருந்தில் இருக்கும் கோடீன் (CODEINE) தூக்கம் வரவழைக்கும் மாத்திரைகள், மன அமைதி மாத்திரைகள் போன்றவை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் வெளி நோயாளிகள் வாங்கி உண்ணலாம்.
ஆனால் துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரக நாடுகள், எகிப்து, சவுதி அரேபியா, பிரிட்டன் , அமெரிக்கா , ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அந்தந்த நாட்டு சட்டங்களின் படி இந்த மாத்திரைகளை வைத்திருப்பது சரியா என்பதை நாம் தான் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குறிப்பாக அரேபிய வளைகுடா நாடுகளில் ட்ரமடால், கோடீன், தூக்க மாத்திரைகள் சிறிய அளவு வைத்திருந்தாலும் அது அந்நாட்டுச் சட்டப்படி குற்றமாகும். ஒரு மாத்திரை வைத்திருந்தாலும் குற்றம் குற்றமே.
இந்நிலையில் தான் கட்டடப் பணியாளரான கணவருக்குத் தெரியாமல் அனுப்பிய 20 ட்ரமடால் மாத்திரைகள் - 24 வருட சிறை தண்டனையைப் பெற்றுத் தந்துள்ளது.
இவ்வாறாக பல மருந்துகள் நம் நாட்டில் சட்பப்படி மருத்துவப் பரிந்துரையின்படி பெற்று உபயோகிக்க முடியும். ஆனால் நாம் செல்லும் நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்தாக இருக்கும். இந்த பிரச்சனையைத் தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும்? முதலில் நாம் செல்ல வேண்டிய நாட்டின் சட்டப்படி தடைசெய்யப்பட்ட மருந்துகளை அறிந்து கொள்ள வேண்டும் . இதை அறிய அந்த நாட்டின் தூதரகத்தின் இணையதளத்தில் BANNED DRUGS IN UAE, BANNED DRUGS IN USA என்று தேடினால் கிடைத்து விடும்.
ஒருவேளை அந்நாட்டில் தடை செய்யப்பட்ட மருந்துகளை நமது மருத்துவ காரணத்திற்காக நாம் கொண்டு செல்ல வேண்டியது வந்தால் கட்டாயம் முன்கூட்டியே ஆன்லைன் மூலம் மருந்தை மருத்துவ காரணத்திற்காக இறக்குமதி செய்து கொள்ளும் முன் அனுமதியை (permission to import medicines for treatment purposes) வாங்க வேண்டும்.
அதற்கு உங்களுடைய மருத்துவரிடம் இருந்து முறையான பரிந்துரைச் சீட்டு அதனுடன் அந்நாட்டு தூதரகம் அனுமதித்த வடிவத்தில் இந்ந மருந்திற்கான தேவை குறித்து மருத்துவரிடம் ஆங்கிலத்தில் எழுதி வாங்கி அதை வைத்து
முன் அனுமதி பெற ஆன்லைன் மூலம் மனு கொடுக்க வேண்டும்.
அதை அவர்கள் ஆலோசித்து ஆராய்ந்து பிறகு அனுமதி அளித்தால் அந்த சீட்டுடன் கூடவே மருத்துவரின் பரிந்துரைச் சீட்டையும் எடுத்துக் கொண்டு அந்த மருந்தை எடுத்துச் செல்லலாம். மற்றபடி தனியாக மருந்துகளை அதுவும் தடை செய்யப்பட்ட மருந்துகளை (நம் நாட்டு மருத்துவர் பரிந்துரைச் சீட்டு வைத்திருந்தாலும்) எடுத்துச் செல்வது ஆபத்தை விலைக்கு வாங்கும் செயலாகும். இது குறித்து நமது சகோதர சகோதரிகள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications